கர்நாடகா, தெலங்கானா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் (H5N1) பரவி வருகிறது. இதுவரை 10,000 கோழிகள் பறவைக் காய்ச்சல் காரணமாக இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பறவைக் காய்ச்சல் பறவைகளை மட்டுமே பாதிக்கும் தொற்று. இது மனிதர்களை அரிதாக பாதிக்கும். பறவைக் காய்ச்சல் பரவி வரும் நேரத்தில், சிக்கன் சாப்பிடலாம என்ற சந்தேகம் அனைவரிடமும் இருக்கும். மேலும் சிக்கனை சரியான முறையில் எப்படி சமைத்து சாப்பிட வேண்டும் என்ற சந்தேகமும் எழும்.
பறவைக் காய்ச்சல் பரவுகின்ற இத்தகைய சூழலில், சிக்கன் பிரியர்கள் சிக்கனை சாப்பிடலாமா.? அதை எப்படி சாப்பிட வேண்டும்.? என்று இங்கே காண்போம். மேலும் பறவைக் காய்ச்சல் எப்படி பரவுகிறது? பறவைக் காய்ச்சல் அறிகுறிகள் என்னென்ன.? பறவைக் காய்ச்சலை தடுக்கும் முறை என்ன.? இதற்கான விடையையும் இங்கே தெரிந்துக்கொள்வோம்.
பறவைக் காய்ச்சல் பரவும் போது சிக்கன் சாப்பிடலாமா.?
பறவைக் காய்ச்சல் இந்தியாவில் சில மாநிலங்களில் தற்போது பரவி வருகிறது. இந்நிலையில் சிக்கன் சாப்பிடலாமா என்ற சந்தேகம், மக்களிடையே நிலவி வருகிறது. இதற்கு ஆம் என்ற பதிலை சொல்லலாம். பறவைக் காய்ச்சலின் போதும் சிக்கன் சாப்பிடலாம். ஆனால், இதற்கென சில முறைகள் உள்ளது. இதனை சமைக்கும் முறையு, மற்றும் இறைச்சியை கையாளும் முறை. இதற்காக சில பாதுகாப்பு நடவடிக்கையை கையாள வேண்டும்.
மேலும் படிக்க: 10,000 கோழிகள் இறப்பு.! தாண்டவம் ஆடும் பறவை காய்ச்சல்..
முக்கிய கட்டுரைகள்
பறவைக் காய்ச்சல் பரவலின் போது சிக்கனை எப்படி சாப்பிட வேண்டும்.?
* சிக்கனை வெட்டும் முன்னும் பின்னும், கைகளை நன்கு சுத்தமாக கழுவ வேண்டும்.
* மரப்பலகையில் சிக்கனை வெட்டப் போகிறீர்கள் என்றால், அதில் துகல்கள் இல்லாதவாறு பார்த்துக்கொள்ளவும்.
* கோழியை வெட்டிய பிறகு நீண்ட நேரம் வெளியே வைக்கக்கூடாது.
* கோழியை கழுவும் போது மஞ்சள் உப்பு சேர்த்து கழுவவும். இது கிருமிகளை நீக்க உதவும். மேலும் சிக்கனின் பச்சை வாசனையை குறைக்கும்.
* சிக்கனை கழுவும் போது, தண்ணீர் சுற்றிலும் பரவாமல் பார்த்துக்கொள்ளவும்.
* பறவைக் காய்ச்சல் பரவும் போது சிக்கனை 165°F (74°C) வெப்பநிலையில் நன்கு சமைக்கவும். அதிக வெப்பம் பறவைக் காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸைக் கொல்லும்.
* வெப்பநிலையை சரிபார்க்க ஃபுட் தெர்மாமீட்டர் பயன்படுத்தவும்.
* சிக்கன் வாங்கும் போது, அதன் நிலையை சரிபார்க்கவும். நம்பகமான கடையில் வாங்கவும்.
* சில காலங்களுக்கு வெளியே சிக்கம் சாப்பிடுவதை தவிர்க்கவும்.
பறவைக் காய்ச்சல் பரவும் முறை
* பறவைக் காய்ச்சல், காட்டுப் பறவைகளுக்கும் வீட்டுப் பறவைகளுக்கும் இடையில் பரவுகிறது.
* வைரஸால் பாதிக்கப்பட்ட புலம்பெயர்ந்த பறவைகள், அவை பார்வையிடும் நாடுகளுக்கு காய்ச்சலைப் பரப்பக்கூடும்.
* பறவைக் காய்ச்சல் மனிதனிடமிருந்து மனிதனுக்குப் பரவும் என்பதற்கு தெளிவான ஆதாரங்கள் எதுவும் இல்லை.
பறவைக் காய்ச்சல் அறிகுறிகள்
* காய்ச்சல்
* சோர்வு
* இருமல்
* தசை வலிகள்
* தொண்டை வலி
* குமட்டல் மற்றும் வாந்தி
* வயிற்றுப்போக்கு
* மூக்கடைப்பு அல்லது மூக்கு ஒழுகுதல்
* மூச்சுத் திணறல்
* இளஞ்சிவப்பு கண்
பறவைக் காய்ச்சல் ஏற்படும் காரணம்
* பறவைக் காய்ச்சல், மனிதக் காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸைப் போலவே, இன்ஃப்ளூயன்ஸா ஏ வைரஸால் ஏற்படுகிறது.
* பறவைக் காய்ச்சலில் பல வேறுபட்ட வகைகள் உள்ளன, அவற்றில் அதிக நோய்க்கிருமி (HPAI) விகாரங்கள் அடங்கும், அவை பறவைகளுக்கு கடுமையான நோய் மற்றும் மரணத்தை ஏற்படுத்துகின்றன.
* H5N1 வகை மிகவும் குறிப்பிடத்தக்க HPAI வைரஸ் ஆகும்.
பறவைக் காய்ச்சலை தடுக்கும் முறை
* காட்டுப் பறவைகள் மற்றும் விலங்குகளுடன் தொடர்பைத் தவிர்க்கவும்.
* சோப்பு மற்றும் தண்ணீரால் கைகளை தவறாமல் கழுவுங்கள்.
* சாப்பிடுவதற்கு முன்பு கோழி இறைச்சி மற்றும் கோழிப் பொருட்களை நன்கு சமைக்கவும்.
குறிப்பு
இங்கே குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள், தகவல் நோக்கத்திற்காக மட்டுமே. உங்களுக்கு இது தொடர்பான சந்தேகங்கள் இருந்தால், உணவியல் நிபுணரை அணுகவும்.