Monkey Fever Symptoms: கர்நாடகாவில் பரவும் குரங்கு காய்ச்சல்! இந்த அறிகுறிகளை லேசுல விட்ராதீங்க

  • SHARE
  • FOLLOW
Monkey Fever Symptoms: கர்நாடகாவில் பரவும் குரங்கு காய்ச்சல்! இந்த அறிகுறிகளை லேசுல விட்ராதீங்க


Symptoms Of Monkey Fever: கர்நாடகாவில் சித்தாபுரா தாலுக்காவின் அரேந்தூர் கிராமத்தைச் சேர்ந்த 5 வயது சிறுமி குரங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இவரது உடல்நிலை மிகவும் மோசமானதால், மங்களூருவில் உள்ள கேஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்துள்ளார்.

கர்நாடகாவில் பரவும் இந்த குரங்குக் காய்ச்சல் தொற்றானது, பொதுவாக குரங்குகளில் உயிர்வாழும் உண்ணிகள் கடிப்பதால் பரவுவதாகக் கூறப்படுகிறது இந்த உண்ணி மனிதர்களைக் கடிப்பதால், குரங்குக் காய்ச்சல் நோய்த்தொற்று ஏற்படுகிறது. மேலும், உண்ணி கடித்த கால்நடைகளுடன் தொடர்பு கொள்வதாலும் மனிதர்களுக்கு இந்த நோய் ஏற்படுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Leg Veins Problem: கால் நரம்பில் ஏற்படும் பிரச்சனையும், இதயத்தில் ஏற்படும் விளைவுகளும்..

குரங்கு காய்ச்சலுக்கான காரணங்கள்

கியாசனூர் வன நோய் வைரஸ் தொற்றால் குரங்கு காய்ச்சல் ஏற்படுகிறது. இது ஃபிளவிவிரிடே வைரஸ் குடும்பத்தைச் சார்ந்ததாகும். இந்த வைரஸ் ஆனது முதன் முதலில் 1957 ஆம் ஆண்டு கர்நாடகாவின் கியாசனூர் வனப்பகுதியில் நோய்வாய்ப்பட்ட குரங்கிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டபோது கண்டறியப்பட்டது. உண்ணி கடித்தல் அல்லது பாதிக்கப்பட்ட விலங்கு மூலம் மனிதர்களுக்கு இந்த தொற்று பரவுகிறது. அதிலும் குறிப்பாக நோய்வாய்ப்பட்ட அல்லது இறந்து குரங்குடன் தொடர்பு கொள்வதாகக் கூறப்படுகிறது.

குரங்கு காய்ச்சல் நோயின் அறிகுறிகள்

பரவி வரும் குரங்கு காய்ச்சலால் உடலில் பல்வேறு அறிகுறிகள் தோன்றலாம். இந்த அறிகுறிகளைக் கண்டறிவதன் மூலம் மட்டுமே குரங்கு காய்ச்சல் உருவாவதைத் தடுக்கலாம்.

  • இந்த கியாசனூர் வன நோய் வைரஸ் தொற்றின் (Kyasanur forest disease) காலம் 3 முதல் 8 நாள்கள் வரை இருக்கும்.
  • குரங்குக் காய்ச்சல் வைரஸ் தொற்றின் ஆரம்ப அறிகுறிகளாக, காய்ச்சல், தலைவலி, குளிர், கடுமையான தசைவலி, வாந்தி போன்றவை ஏற்படும். இதனைத் தொடர்ந்து ஆரம்ப அறிகுறிகளில் 3 முதல் 4 நாள்களுக்குப் பிறகு இரைப்பை குடல் பிரச்சனைகள் மற்றும் இரத்தப்போக்கு பிரச்சனைகள் போன்றவை ஏற்படலாம்.
  • மேலும், குறைந்த இரத்த அழுத்தம் மற்றும் பிளேட்லெட்டுகள் கொண்ட சில நோயாளிகளின் சிவப்பு மற்றும் வெள்ளை இரத்த அணுக்களின் எண்ணிக்கையைக் குறைக்கலாம்.
  • இதன் இரண்டாவது அலையின் எதிரொலியாக காய்ச்சல் மற்றும் கடுமையான தலைவலி, மனத் தொந்தரவுகள், நடுக்கம் மற்றும் பார்வைக் குறைபாடுகள் போன்ற நரம்பியல் வெளிப்பாடுகளைச் சந்திக்கின்றனர்.

இந்த பதிவும் உதவலாம்: Anemia Symptoms: இந்த அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு இரத்த சோகை இருக்கலாம்.!

குரங்கு காய்ச்சலுக்கான சிகிச்சை

  • கியாசனூர் வன நோய் வைரஸ் தொற்றுக்கென குறிப்பட்ட சிகிச்சை இல்லை. இதில் நோயை நிர்வகிக்க ஆரம்பகால மருத்துவமனையில் சேர்க்கப்படுதல் மற்றும் ஆதரவான சிகிச்சையை உள்ளடக்கியதாகும்.
  • மேலும், நீரேற்றமாக இருப்பது மற்றும் இரத்தப்போக்கு கோளாறுகள் உள்ள நோயாளிகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது போன்ற சிகிச்சை முறைகளைக் கையாள வேண்டும்.
  • இந்த நோயின் ஆரம்ப கண்டறிதலை PCR மூலம் மூலக்கூறு கண்டறிதல் அல்லது இரத்தத்தில் இருந்து வைரஸ் தனிமைப்படுத்துதல் போன்றவற்றின் மூலம் செய்யலாம்.

குரங்கு காய்ச்சல் அறிகுறிகளை முன்னரே கண்டறிந்து அதன் சிகிச்சை முறைகளைக் கையாள வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: Stress Induced Asthma: மன அழுத்தம் ஆஸ்துமா அபாயத்தை அதிகரிக்கிறதா? காரணம் மற்றும் அறிகுறிகள் இங்கே!

Image Source: Freepik

Read Next

Unusual Asthma Triggers: ஆஸ்துமா தாக்குதலின் ஆபத்தை அதிகரிக்கும் சில அசாதாரண காரணிகள்!

Disclaimer