இந்த அறிகுறிகளை லேசுல விடாதீங்க.. கிட்னி கேன்சரா இருக்கலாம்! மருத்துவர் தரும் தடுப்பு முறைகள் இதோ

Kidney cancer symptoms and treatment: சிறுநீரக புற்றுநோயில் பல்வேறு வகைகள் உள்ளது. ஆனால், அவற்றில் மிகவும் பொதுவானதாக அமைவது சிறுநீரக செல் புற்றுநோய் ஆகும். இந்த சிறுநீரக செல் புற்றுநோய்க்கான அறிகுறிகள் குறித்தும், தடுப்பு முறைகள் குறித்தும் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
இந்த அறிகுறிகளை லேசுல விடாதீங்க.. கிட்னி கேன்சரா இருக்கலாம்! மருத்துவர் தரும் தடுப்பு முறைகள் இதோ

Kidney cancer symptoms diagnosis and treatment: உடலில் உள்ள பல்வேறு முக்கிய உறுப்புகளில் சிறுநீரகமும் ஒன்று. இது உடலில் உள்ள இரத்தத்தை சுத்தம் செய்து, உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் பொருட்களை வடிகட்டுவதற்கு உதவுகிறது. உண்மையில், சிறுநீரக ஆரோக்கியத்தைப் பராமரிப்பது மிகவும் அவசியமாகும். ஏனெனில், சிறுநீரக செயலிழப்பு ஏற்படுவது உடலின் ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கலாம். குறிப்பாக, இந்த சிறுநீரகம் தொடர்பான நோய்கள் மற்றும் சிறுநீரக செயலிழப்பு ஏற்படுவதற்கு பொதுவான காரணங்களாக உணவுப் பழக்கம் மற்றும் தவறான வாழ்க்கை முறையே ஆகும்.

சிறுநீரகம் இரத்தத்தையும், கால்சியம், சோடியம், தாதுக்கள், நீர், பாஸ்பரஸ், பொட்டாசியம், ஹீமோகுளோபின் போன்றவற்றையும் சமநிலைப்படுத்துகிறது. இதில் ஏற்படும் சமநிலையற்ற தன்மையானது சிறுநீரக புற்றுநோய் உண்டாவதற்கான காரணமாக அமைகிறது. சிறுநீரக புற்றுநோய் குறித்த தகவல்களை நாம் கட்டாயம் அறிந்திருத்தல் அவசியமாகும். இதில் சிறுநீரக புற்றுநோய்க்கான காரணங்களையும், அதன் தடுப்பு முறைகள் குறித்தும் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Kidney Cancer Symptoms: சிறுநீரக புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள்!

சிறுநீரக புற்றுநோயின் அறிகுறிகள்

பொதுவாக நம் உடலில் இரண்டு சிறுநீரகங்கள் காணப்படும். இவை கீழ் முதுகில் முதுகெலும்பின் இருபுறமும் அமைந்துள்ளது. இவை இரத்தத்தை சுத்தம் செய்து உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. ஆனால், சிறுநீரக செல்கள் அசாதாரணமாக வளரத் தொடங்கி கட்டுப்பாடற்ற நிலையை அடையும் போது சிறுநீரக புற்றுநோய் உருவாகிறது. இந்த அசாதாரண செல்கள் கட்டிகளை உருவாக்கும் அபாயம் உண்டாகலாம்.

இது குறித்து SCPM மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் புற்றுநோய் நிபுணர் டாக்டர் சுதீப் சிங் அவர்கள் கூறுகையில், “சிறுநீரக புற்றுநோய்கள் பல வகையாக உள்ளன. ஆனால், இவற்றில் மிகவும் பொதுவானதாக சிறுநீரக செல் புற்றுநோய் அடங்குகிறது. சரியான நேரத்தில் இதன் அறிகுறிகளைக் கண்டறிந்து பொருத்தமான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் சிறுநீரக புற்றுநோய் பிரச்சனையைத் தவிர்க்கலாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

image
how-to-reduce-kidney-stone-tamil

மேலும் அவர் கூறுகையில், சிறுநீரக புற்றுநோயின் ஆரம்ப கட்டங்களில் பெரும்பாலும் இந்த அறிகுறிகள் எதுவும் தென்படாது. ஆனால், கட்டி வளரும் போது இந்த அறிகுறிகள் தோன்றலாம்.

  • சிறுநீரில் இரத்தம் வெளியேறுவது (இது மிகவும் பொதுவான அறிகுறி)
  • சிறுநீர் கழிப்பதில் சிரமம் அல்லது சிறுநீரின் அளவு மாற்றம்
  • கீழ் வயிறு அல்லது முதுகில் வலி, குறிப்பாக சிறுநீரகங்களைச் சுற்றி
  • உயர் இரத்த அழுத்தம்
  • விரைவான எடை இழப்பு
  • சோர்வு மற்றும் பலவீனம்
  • சிவப்பு ரத்த அணுக்கள் இல்லாமை (இரத்த சோகை)

சிறுநீரக புற்றுநோயைத் தடுப்பது எப்படி?

சிறுநீரக புற்றுநோயை முற்றிலுமாகத் தடுப்பதற்கான உறுதியான வழி எதுவும் இல்லை. ஆனால், ஆபத்தைக் குறைப்பதற்கு சில நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

எடை கட்டுப்பாடு

உடல் பருமன் சிறுநீரக புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும் காரணிகளில் ஒன்றாகும். எனவே ஆரோக்கியமான எடையை பராமரிக்க சீரான உணவை உண்ணுவது, தொடர்ந்து உடற்பயிற்சி போன்றவற்றைக் கையாளலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Kidney Cancer: சிறுநீரக புற்றுநோயின் அறிகுறிகளும் சிகிச்சை முறையும்…

தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது

உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பதன் மூலம் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த முடியும். மேலும், இது சிறுநீரக புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது.

உணவில் கவனம் செலுத்துதல்

சிறுநீரக ஆரோக்கியத்திற்கு உப்பு உட்கொள்ளலைக் கட்டுப்படுத்த வேண்டும். மேலும், பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்களை அதிகம் சாப்பிட வேண்டும்.

image
here-are-some-healthy-foods-to-include-in-your-diet-in-your-40s-Main-1747468801232.jpg

போதுமான அளவு தண்ணீர் குடிப்பது

உடலை நீரேற்றமாக வைத்திருக்க போதுமான அளவு தண்ணீர் குடிப்பதை உறுதி செய்ய வேண்டும். இவை சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது.

புகைபிடிப்பதை நிறுத்துவது

புகைபிடித்தல் சிறுநீரக புற்றுநோய் உள்ளிட்ட பல வகையான புற்றுநோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது.

உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவது

உயர் இரத்த அழுத்தம் காரணமாக சிறுநீரக புற்றுநோய் அதிகரித்து காணப்படலாம். எனவே இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த தகுந்த நடவடிக்கைகளை எடுக்க மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

மேலே கூறப்பட்ட, சிறுநீரகப் புற்றுநோயின் அறிகுறிகளைக் கண்டால் நீங்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். மருத்துவர் இரத்தப் பரிசோதனை மூலம் சிறுநீரகப் புற்றுநோயை சரிபார்ப்பர். இது தவிர, சிறுநீர், பயாப்ஸி போன்றவற்றின் மூலமும் சரிபார்க்கலாம். ஏதேனும் அறிகுறிகள் இருந்தால், உடனடியாகப் பரிசோதனை செய்து சிகிச்சை பெறுவதை உறுதி செய்ய வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: kidney stone: சிறுநீரக கற்கள் புற்றுநோயை உண்டாக்குமா? நிபுணர்கள் கூறுவது என்ன?

Image Source: Freepik

Read Next

இந்த அறிகுறிகளை லேசுல விடாதீங்க.. தாடைப் புற்றுநோயா இருக்கலாம்! மருத்துவர் தரும் சிகிச்சை முறைகள் இதோ

Disclaimer