Expert

Worst fruits for diabetes: வெயில் காலத்தில் சர்க்கரை நோயாளிகள் மறந்து இந்த பழங்களை சாப்பிடக்கூடாது!

  • SHARE
  • FOLLOW
Worst fruits for diabetes: வெயில் காலத்தில் சர்க்கரை நோயாளிகள் மறந்து இந்த பழங்களை சாப்பிடக்கூடாது!

இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க, நல்ல உணவு மற்றும் வாழ்க்கை முறையைப் பின்பற்ற வேண்டியது அவசியம். வெயில் காலத்தில் தானியங்கள் சாப்பிடுவதற்காக ஆசை குறையும். பெரும்பாலும், பழங்கள் மற்றும் குளிர்ச்சியான உணவுகளையே சாப்பிட விரும்புவோம். எனவே தான் வெயில் காலத்தில், பெரும்பாலான மக்கள் அதிகமாக பழங்களை உட்கொள்கிறார்கள்.

இந்த பதிவும் உதவலாம் : Low Blood Sugar: இரத்த சர்க்கரை அளவு குறைந்தால் தலை சுற்றல் வருமா?

ஆனால், நீரிழிவு நோயாளிகள் கோடை காலத்தில் குறிப்பிட்ட பழங்களை அதிக அளவில் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். இல்லையெனில், அவை உங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம். ஆரோக்யா டயட் மற்றும் நியூட்ரிஷன் கிளினிக்கின் டயட்டீஷியன் டாக்டர் சுகீதா முத்ரேஜா, சர்க்கரை நோயாளிகள் கோடையில் எந்தெந்த பழங்களை சாப்பிடுவதை குறைக்க வேண்டும்? என நமக்கு விளக்கியுள்ளார். அவற்றை பற்றி இங்கே பார்க்கலாம்.

சர்க்கரை நோயாளிகள் வெயில் காலத்தில் சாப்பிடக்கூடாத பழங்கள்

தர்பூசணி

வெயில் காலத்தில் மக்கள் விரும்பி அதிகமாக சாப்பிடும் பழங்களில் தர்பூசணியும் ஒன்று. இதில், அதிக அளவு நீர் சத்து உள்ளது. இதனுடன், தர்பூசணியில் இயற்கையான சர்க்கரையும் உள்ளது. எனவே, இது நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும்.

எனவே, உங்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால், கோடை காலத்தில் தர்பூசணியை சிறிய அளவில் உட்கொள்ளுங்கள். தர்பூசணி உடலை நீரேற்றமாக வைத்திருக்கும். இதை சாப்பிடுவதால் வயிற்றில் உள்ள சூடு தணிந்து நிம்மதியாக இருக்கும். நீங்கள் தர்பூசணி சாப்பிட விரும்பினால், உங்கள் உணவில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தவும். இது இரத்த சர்க்கரை அளவையும் கட்டுக்குள் வைத்திருக்கும்.

இந்த பதிவும் உதவலாம் : Diabetic Breakfast: நீரிழிவு நோயாளிகள் மறந்து காலையில் இவற்றை சாப்பிடக்கூடாது! ஏன் தெரியுமா?

மாம்பழம்

கோடைக்காலத்தில் தாராளமாக கிடைக்கும் பழங்களில் ஒன்று மாம்பழம். பெரும்பாலானோரின் விருப்பமான பழமும் இதுதான். மாம்பழம் கோடையில் மிகவும் விரும்பி சாப்பிடப்படும் பழம். சிலர் மாம்பழத்தை பழமாக சாப்பிடுகிறார்கள், மற்றவர்கள் மாம்பழ ஷேக் குடிக்க விரும்புகிறார்கள். பெரும்பாலும் மக்கள் ஒரு நாளைக்கு அதிக மாம்பழங்களை சாப்பிடுவார்கள்.

ஆனால், நீங்கள் நீரிழிவு நோயாளியாக இருந்தால், மாம்பழத்தை அதிக அளவில் உட்கொள்வதைத் தவிர்க்கவும். மாம்பழத்தில் சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் அதிகம் இருப்பதால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும். ஒரு நாளைக்கு ஒரு மாம்பழம் சாப்பிடலாம். இருப்பினும், மாம்பழங்களை அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம் : Watermelon For Diabetes: நீரிழிவு நோயாளிகள் தர்பூசணி பழம் சாப்பிடலாமா?

வாழைப்பழம்

வாழைப்பழம் எல்லா சீசன்களிலும் கிடைக்க கூடிய பழம். இது ஆரோக்கியத்துக்கு சஞ்சீவினி என்றே கூறலாம். வாழைப்பழத்திலும் சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ளது. எனவே, நீரிழிவு நோயாளிகள் வாழைப்பழத்தை அதிக அளவில் உட்கொள்ளக்கூடாது. நீரிழிவு நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவை வாழைப்பழம் கட்டுப்பாடற்றதாக மாற்றும்.

அன்னாசி

பெரும்பாலானோர் உடலில் நீர்ச்சத்து குறைவை போக்க அன்னாசிப்பழத்தை பாதாம் பிசினுடன் சேர்த்து சாப்பிடுவார்கள். அன்னாசி ஒரு இனிப்பு மற்றும் புளிப்பு பழம். கார்போஹைட்ரேட்டுகளும் இதில் காணப்படுகின்றன. 100 கிராம் அன்னாசிப்பழத்தில் சுமார் 13.1 கிராம் கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. நீங்கள் நீரிழிவு நோயாளியாக இருந்தால், அன்னாசிப்பழத்தை அதிக அளவில் உட்கொள்வதைத் தவிர்க்கவும்.

Pic Courtesy: Freepik

Read Next

Ginger For Diabetes: இஞ்சியை இப்படி எடுத்துக்கிட்டா சர்க்கரை அளவு டக்குனு குறையுமாம்!

Disclaimer