$
Watermelon Benefits For Diabetic Patients: கோடைக்காலம் வந்து விட்டாலே உடலைக் குளிர்ச்சியாக வைத்துக் கொள்வது அவசியமாகும். இந்த காலகட்டத்தில் நீர்ச்சத்து நிறைந்த பழங்களை எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த வகையில் கோடைக்காலத்தில் நீர்ச்சத்து மிக்க பழங்களில் தர்பூசணி பழமும் ஒன்று. இது நீர்ச்சத்துக்கள் நிறைந்த சுவையுடன் கூடிய ஆரோக்கியமிக்க பழமாகும். எனினும், நீரிழிவு நோயாளிகள் தர்பூசணி சாப்பிடுவது நன்மை பயக்குமா? தர்பூசணி சாப்பிட்டால் இரத்தத்தில் சர்க்கரை அளவு கூடுமா? என்பது குறித்து காணலாம்.
தர்பூசணியின் ஆரோக்கிய நன்மைகள்
தர்பூசணி மிகவும் சத்தான பழமாகும். இது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது. இதில் அதிகளவு தண்ணீர் இருப்பதால் நீரேற்றமாக இருப்பதற்கு வழிவகுக்கிறது.
ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்த
தர்பூசணியில் லைகோபீன் மற்றும் வைட்டமின் சி உள்ளிட்ட ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன. இது செல்லுலார் சேதத்திலிருந்து பாதுகாப்பதுடன், நாள்பட்ட நோய்களைத் தடுக்கவும் உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Raw Tomato Benefits: பச்சை தக்காளி சாப்பிட்டா சர்க்கரை அளவு குறையுமா?
உடற்பயிற்சி மீட்பாக
தர்பூசணியில் சிட்ருலின் என்ற அமினோ அமிலம் உள்ளது. இது தசை மீட்சியை மேம்படுத்தவும், தசை வலியைக் குறைக்கவும் உதவுகிறது. இது உடற்பயிற்சிக்கு பிறகு எடுத்துக் கொள்ள வேண்டிய நல்ல பழமாகும்.
செரிமான ஆரோக்கியத்திற்கு
வயிற்றுப் பிரச்சனை உள்ளவர்கள் தர்பூசணியை உணவில் எடுத்துக் கொள்வது மிகவும் நன்மை பயக்கும். இதில் அதிக நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் செரிமானத்திற்கு உதவி புரிகிறது.

சரும ஆரோக்கியத்திற்கு
தர்பூசணியில் வைட்டமின் சி சத்துக்கள் மற்றும் அதிகளவு நீர்ச்சத்துக்கள் உள்ளது. இது ஒட்டுமொத்த சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
இதய ஆரோக்கியத்திற்கு
இதில் உள்ள சிட்ரூலின் மற்றும் லைகோபீன் போன்றவை வீக்கத்தைக் குறைக்க இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Diabetes Diet: நீங்க சர்க்கரை நோயாளியா? அப்போ மறந்தும் இவற்றை வெறும் வயிற்றில் சாப்பிடாதீங்க!
நீரிழிவு நோயாளிகளுக்கு தர்பூசணி தரும் நன்மைகள்
- தர்பூசணியில் வைட்டமின் ஏ சத்துக்கள் நிறைந்துள்ளது. சிறுநீரகம் , நுரையீரல், இதயம் போன்றவற்றின் செயல்பாட்டை பாதுகாக்க உதவுகிறது. இது தவிர கண்களுக்கும் நன்மை பயக்கும்.
- நீரிழிவு நோயாளிகளுக்கு நோயெதிர்ப்புச் சக்தி பலவீனமாக இருக்கலாம். இந்த சூழ்நிலையில் தர்பூசணியில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஆரோக்கியமான நோயெதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு தர்பூசணி சாப்பிடுவது நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது.
- நீரிழிவு நோயாளிகள் இதய ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறை செலுத்துவது அவசியமாகும். இந்த சூழ்நிலையில் தர்பூசணியை குறைந்தளவு எடுத்துக் கொள்வது அவசியமாகிறது.
- தர்பூசணி வைட்டமின் ஏ, பி1, பி6, சி, பொட்டாசியம், இரும்பு, கால்சியம், மக்னீசியம் மற்றும் லைகோபீன்கள் நிறைந்துள்ளது. இந்த வைட்டமின்கள், தாதுக்கள் அனைத்தும் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.

நீரிழிவு நோயாளிகள் தர்பூசணி சாப்பிடலாமா?
தர்பூசணி ஆரோக்கியமிக்க பழமாகும். இதில் குறைந்த அளவிலான கிளைசெமிக் குறியீடுகள் நிறைந்துள்ளது. இது கார்போஹைட்ரேட்டுகளின் எண்ணிக்கையை அளவிடும் பழமாகும். எனவே, நீரிழிவு நோயாளிகளுக்கு தர்பூசணி பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது.
அதே சமயம் தர்பூசணியை மிதமான அளவில் உட்கொள்வது நல்லது. மேலும், நீரிழிவு நோயாளிகள் தர்பூசணியை சாப்பிட்ட பிறகு இரத்த சர்க்கரை அளவை கண்காணித்துக் கொள்வது நல்லது. சுமார் 286 கிராம் நடுத்தர அளவிலான தர்பூசணி பழத்துண்டில் 17.7 கிராம் சர்க்கரை நிறைந்துள்ளது. எனவே, நீரிழிவு நோயாளிகள் குறைந்தளவு தர்பூசணியை எடுத்துக் கொள்வது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: Diabetes Weight Loss: சர்க்கரை நோயாளிகளின் உடல் எடை வேகமா குறைய என்ன காரணம் தெரியுமா?
Image Source: Freepik