Causes Of Rapid Weight Loss For Diabetics: இன்று பலரும் பாதிக்கப்படும் நீரிழிவு நோய் உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறைகளில் இடையூறுகளால் ஏற்படும் தீவிரமான நோயாகும். இந்த காலகட்டத்தில் உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். நீரிழிவு நோயாளிகளுக்கு, இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்து காணப்படுவதால், உடலில் இன்சுலின் உற்பத்தி கட்டுப்பாட்டுக்குள் இருக்காது. இதனால் நோயாளிகள் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம்.
பொதுவாக நீரிழிவு நோயாளிகள் தங்களது உடலில் பல்வேறு மாற்றங்களைச் சந்திப்பர். அதில் ஒன்றாகவே உடல் எடை இழப்பும் அமைகிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு உடல் எடை வேகமாக குறையத் தொடங்கும். அதன் படி, இதன் முதல் அறிகுறியாக விரைவான எடை இழப்பு ஏற்படுகிறது. இதில் நீரிழிவு நோயில் திடீரென எடை இழப்பு ஏன் ஏற்படுகிறது மற்றும் அதைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து காணலாம்.
முக்கிய கட்டுரைகள்
இந்த பதிவும் உதவலாம்: Moringa For Diabetes: நீரிழிவு நோய்க்கான சூப்பர் ஃபுட் இதோ! எப்படி சாப்பிடணும் தெரியுமா?
நீரிழிவு நோயில் உடல் எடை குறைய என்ன காரணம்?
சர்க்கரை நோயால் உடல் எடை வேகமாக குறையத் தொடங்குகிறது. இது உணவு முறையை சரியாக எடுத்துக் கொண்ட பிறகும், எதிர்கொள்ள வேண்டிய பிரச்சனையாக அமைகிறது. இது குறித்து பாபு ஈஸ்வர் ஷரன் மருத்துவமனை முதுநிலை மருத்துவர் டாக்டர் சமீர் அவர்கள் கூறுகையில், “நீரிழிவு நோயின் பொதுவான அறிகுறியாக விரைவான உடல் எடை குறைப்பு உள்ளது. இதில், நோயாளியின் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகிறது.
இதனால், நோயாளிக்கு அடிக்கடி சிறுநீர் வெளியேறலாம். இதனால் உடலில் தண்ணீர் பற்றாக்குறை அல்லது நீரிழப்பு ஏற்படலாம். அதிகப்படியான தண்ணீர் பற்றாக்குறை மற்றும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பால், தசை பலவீனம் அடைகிறது. இதனால், குளுக்கோஸ் ஆற்றலாக மாற்றும் செயல்முறை பாதிக்கப்பட்டு, உடல் எடையைக் குறைக்கிறது.” என்று கூறியுள்ளார்.
நீரிழிவு நோயாளியின் விரைவான உடல் எடை இழப்புக்கான காரணங்கள்
- அதிக இரத்த சர்க்கரை
- இன்சுலின் உற்பத்தி பாதிப்பு
- நீர் பற்றாக்குறை
- உணவு உண்ணும் கோளாறுகள்
- குளுக்கோஸ் ஆற்றலாக மாற்றப்படுவது பாதிப்பு
இந்த பதிவும் உதவலாம்: Foods For Diabetes: பாடாய்ப் படுத்தும் சுகர் லெவலை சட்டென குறைந்த இந்த உணவுகளை எடுத்துக்கோங்க
நீரிழிவு நோயில் எடையைக் கட்டுப்படுத்துவது எப்படி?
நீரிழவு நோயாளிகள் உணவு மற்றும் வாழ்க்கை முறைகளில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இதன் மூலம் உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்கலாம். இதைத் தவிர்க்க, நார்ச்சத்து, தாதுக்கள் மற்றும் புரதம் நிறைந்த உணவுகளைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பொதுவாக, டைப் 2 நீரிழிவு நோயுடன் ஒப்பிடுகையில், டைப் 1 நோயாளிகளுக்கு ஏற்படும் உடல் எடை குறையும் அபாயம் குறைவாகும். இந்த சூழ்நிலையில், டைப் 1 நீரிழிவு நோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு விரைவான உடல் எடை ஏற்படுகிறது எனில் மருத்துவரை அணுகுவது நல்லது.
உடல் எடையை சமநிலையில் வைத்திருப்பதன் மூலம் நீரிழிவு நோய் அபாயத்தைக் குறைக்கலாம். இதற்கு புரதம், வைட்டமின்கள், மக்னீசியம், கால்சியம் மற்றும் நார்ச்சத்துக்கள் போன்ற நல்ல ஆரோக்கியமான உணவுகளைச் சேர்த்துக் கொள்வது, உடற்பயிற்சி மற்றும் யோகா போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: Sleep Causing Diabetes: உஷார்! தூங்காம இருந்தாலும் சர்க்கரை நோய் வருமாம். எப்படி தெரியுமா?
Image Source: Freepik