How Eating Tomatoes Can Help Manage Blood Sugar: இன்று சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கும் பொதுவான நோயாக நீரிழிவு நோய் மாறிவிட்டது. இதற்கு ஆரோக்கியமற்ற உணவுமுறை மற்றும் மோசமான வாழ்க்கை முறையே முக்கிய காரணமாகும். நீரிழிவு நோய் முற்றிலும் குணப்படுத்தாததாக இருப்பினும், இதை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். அந்த வகையில், சில ஆரோக்கியமான உணவுப்பொருள்களைக் கொண்டு நீரிழிவு நோயைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கலாம்.
அவ்வாறு, நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைக்க பச்சை தக்காளி பெரிதும் உதவுகிறது. தக்காளியை பச்சையாக எடுத்துக் கொள்வது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இதில் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்க பச்சை தக்காளி எவ்வாறு உதவுகிறது என்பது குறித்து காண்போம்.
இந்த பதிவும் உதவலாம்: Dairy Items For Heart: இதய ஆரோக்கியத்திற்கு நீங்க சாப்பிட வேண்டிய மற்றும் சாப்பிடக்கூடாத பால் பொருள்கள்
நீரிழிவு நோய்க்கு பச்சை தக்காளி தரும் நன்மைகள்
ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்க
புதிய அல்லது சமைத்த தக்காளியை எடுத்துக் கொள்வது நீரிழிவு நோய்க்கு சாதகமாக அமைகிறது. இது நீரிழிவு நோயால் ஏற்படும் வீக்கம், துரிதப்படுத்தப்பட்ட பெருந்தமனி தடிப்பு, ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் போன்ற சோதத்தைக் குறைக்க உதவுகிறது.
குறைந்த கிளைசெமிக் குறியீடு
பச்சைத் தக்காளியில் குறைந்த கிளைசெமிக் இன்டெக்ஸ் மற்றும் அதிக நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது இரத்த சர்க்கரைக் கட்டுப்பாட்டிற்கு உதவுகிறது. இந்த நார்ச்சத்துக்கள் உடல் சர்க்கரை உறிஞ்சுவதை மெதுவாக்குகிறது. கூடுதலாக, தக்காளியில் லைகோபீன் கலவைகள் நிறைந்துள்ளது. இது இன்சுலின் எதிர்ப்பில் நன்மை பயக்கும்.
ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்த
தக்காளியில் லைகோபீன் நிறைந்துள்ளது. இதன் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நீரிழிவு எதிர்ப்பு விளைவுகளைக் கொண்டுள்ளது. மேலும் இது ஃப்ரீ ரேடிக்கல்களின் அளவைக் குறைக்கிறது. இந்த லைகோபீன் இரத்த குளுக்கோஸ் அளவைக் குறைக்கிறது.
இந்த பதிவும் உதவலாம்: Juicing for Healthy Heart: உங்க இதயம் நீண்ட நாள் ஆரோக்கியமாக இருக்க தினமும் இந்த ஜூஸை குடியுங்க!!
குறைந்தளவு கார்போஹைட்ரேட்டுகள்
தக்காளி குறைந்த அளவிலான கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் ஆற்றலைக் கொண்டுள்ளது. இதில் லைகோபீன், பி-கரோட்டீன், ஃபிளவனாய்டுகள், அஸ்கார்பிக் அமிலம் மற்றும் இன்னும் பிற மூலக்கூறுகள் நிறைந்துள்ளன. இந்தக் கலவை நீரிழிவு நோய்க்கு சாதகமானதாக அமைகிறது.
ரெஸ்வெராட்ரோல் நிறைந்த
தக்காளியில் உள்ள மற்றொரு முக்கிய அம்சம் ரெஸ்வெராட்ரோல் ஆகும். இது மைட்டோகாண்ட்ரியல் பயோஜெனீசிஸை மேம்படுத்தவும், மைட்டோகாண்ட்ரியல் சேதம், வீக்கம், கொழுப்பு, கல்லீரல் ஸ்டீடோசிஸ் போன்றவற்றைக் குறைக்கிறது மற்றும் இன்சுலின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது.
எபிகாடெசின்
தக்காளியில் எபிகாடெசின் என்ற கூறு நிறைந்துள்ளது. இது ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. மேலும் இன்சுலின் உணர்திறனை அதிகரிப்பதுடன், இன்சுலின் எதிர்ப்பைக் குறைக்கிறது. இது தசை செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது.
இவை அனைத்தும் பச்சை தக்காளியை உட்கொள்வது நீரிழிவு நோய்க்கு மிகுந்த நன்மை பயக்கும். எனினும் இது அனைவருக்கும் பாதுகாப்பானதா என்பதை உறுதிப்படுத்த மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: Dehydration Causes: நீரிழப்பால் இதயத்துடிப்பு அதிகமாகுமா? நிபுணர் தரும் விளக்கம்
Image Source: Freepik