நமது அன்றாட உணவில் முக்கிய பங்கு வகிக்கும் காய்கறிகளில் ஒன்று தக்காளி. இதனை சமைக்காமல் பச்சையாக சாப்பிட்டால் எவ்வளவு நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? இதன் நன்மைகளை இங்கே காண்போம் வாருங்கள்.

தக்காளியில் வைட்டமின் ஏ, கே, பி7 மற்றும் வைட்டமின் சி போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் இதில் ஃபோலேட், குரோமியம், துத்தநாகம் மற்றும் பாஸ்பரஸ் உள்ளன. குறிப்பாக இதில் உள்ள வைட்டமின் சி, ஆக்ஸிஜனேற்ற பண்புகளை கொண்டுள்ளது. இது ஃப்ரீ ரேடிக்கல்ஸ் சேதத்தில் இருந்து உங்கள் உடலை காக்க உதவுகிறது. மேலும் இதில் உள்ள பொட்டாசியம் உங்கள் இரத்த ஓட்டத்தை சீராக்க உதவுகிறது. மேலும் இது ஹீமோகுளோபினை அதிகபடுத்துகிறது.
தக்காளியில் உள்ள லைக்கோபீன், புற்றுநோயில் இருந்து உங்களை காக்க உதவுகிறது. குறிப்பாக பெருங்குடல், புரோஸ்டேட் போன்ற புற்றுநோயை தடுக்க உதவும். மேலும் இதய ஆரோக்கியத்தை பாதுகாக்க லைக்கோபீன் சிறந்து திகழ்கிறது. இது கெட்ட கொழுப்பை குறைத்து, இதயத்தை காக்கிறது.
தக்காளியை தினமும் உண்பதால், நீரிழிவு நோய் கட்டுக்குள் இருக்கும். இது சர்க்கரை நோயால் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. மேலும் சர்க்கரை நோயால் ஏற்படும் வீக்கம், திசு சேதம் ஆகியவற்றை போக்க தக்காளியை பச்சையாக சாப்பிடுவது நல்லது.
தக்காளியில் குமரிக் மற்றும் க்ளோரோஜெனிக் அமிலங்கள் உள்ளன. இது புகைப்பிடிப்பதால் ஏற்படும் சேதத்தை பாதியாக குறைக்க உதவுகிறது. ஆனால் இதற்காக நீங்கள் புகைப்பிடிக்கலாம் என்று நாங்கள் கூறவில்லை. புகைப்பிடிப்பது உடல் நலத்திற்கு எப்போதும் கேடு தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
தக்காளியில் உள்ள வைட்டமின் ஏ,சி மற்றும் பீட்டா கரோட்டின் ஆகியவை உங்கள் கண் மற்றும் சருமத்திற்கு நன்மை பயக்கிறது. இது பார்வை திறனை மேம்படுத்தவும், உங்கள் சருமத்திற்கு உள்ளிருந்து ஊட்டமளிக்கவும் உதவுகிறது.
உங்களுக்கு ஏதேனும் உணவு ஒவ்வாமை இருந்தால், நீங்கள் புதிதாக ஏதேனும் உட்கொள்ளும் முன், உணவியல் நிபுணர் அல்லது மருத்துவரை அணுகுவது நல்லது.
Image Source: Freepik