Is green tomato good for high blood pressure: தக்காளி இல்லாமல் எந்த வகையான உணவும் முழுமையடையாது. இது உணவின் சுவையை அதிகரிப்பது மட்டும் அல்லாது ஆரோக்கியத்திற்கும் நல்லது. பெரும்பாலும் நாம் சமைக்கவும், சாப்பிடவும் நன்றாக பழுத்த சிவப்பு தக்காளியை மட்டுமே பயன்படுத்துவோம். ஆனால், பழுத்த தக்காளியை விட பச்சை தக்காளி ஆரோக்கியத்திற்கு இன்னும் நல்லது என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், நீங்கள் சரியாகத்தான் படித்தீர்கள்.
சிவப்பு தக்காளியை விட பச்சை தக்காளியில் அதிக ஊட்டச்சத்து உள்ளது. இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். குறிப்பாக, இரத்த அழுத்த நோயாளிகளுக்கு பச்சை தக்காளி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. அத்துடன் இது, கண்பார்வையையும் அதிகரிக்கிறது. பச்சை தக்காளியின் ஆரோக்கிய நன்மைகள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
முக்கிய கட்டுரைகள்
இந்த பதிவும் உதவலாம் : Ghee Benefits: நெய் சாப்பிட்டால் இதெல்லாம் ஆகும்.!!
பச்சை தக்காளியில் காணப்படும் ஊட்டச்சத்துக்கள்

பச்சை தக்காளியில் கால்சியம், பொட்டாசியம், புரதம், மக்னீசியம், பாஸ்பரஸ், வைட்டமின் கே, வைட்டமின் சி, பீட்டா கரோட்டின் மற்றும் அதிக அளவு ஆக்ஸிஜனேற்றம் உள்ளது. இவை உடலில் உள்ள செல்களை மேம்படுத்த உதவுகிறது.
மேலும், இவை சரும சுருக்கங்களை நீங்கி சருமத்தை இளமையாக வைக்கும். பச்சை தக்காளி சாப்பிடுவதால் சளி, காய்ச்சல் போன்ற தொற்று நோய்கள் வரும் அபாயம் குறையும். பச்சை தக்காளியை சாப்பிடுவதன் மூலம் இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.
இந்த பதிவும் உதவலாம் : Murungai Poo Benefits: இவ்வளவு இருக்கா… இது தெரிஞ்சா முருங்கைப் பூவை விடமாட்டீங்க!
பச்சை தக்காளியின் ஆரோக்கிய நன்மைகள் என்ன?

பச்சை தக்காளி சாப்பிடுவது உங்கள் கண்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். உண்மையில், பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் ஏ இதில் காணப்படுகின்றன. இது உங்கள் பார்வையை மேம்படுத்துகிறது. இதனால், விழித்திரை ஆரோக்கியமாகி, கண்களில் வறட்சி பிரச்னை இருக்காது.
வைட்டமின் ஏ கண்களை ஆரோக்கியமாக வைத்திருப்பதிலும், கார்னியாவின் மேற்பரப்பைப் பாதுகாப்பதிலும் பங்கு வகிக்கிறது. எனவே, பச்சை தக்காளியை சாலட்டில் சேர்த்து அல்லது சட்னி செய்தும் சாப்பிடலாம்.
இந்த பதிவும் உதவலாம் : Fruits For Immunity: உங்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த 5 பழங்களை சாப்பிடுங்க!
பச்சை தக்காளி இரத்த அழுத்த நோயாளிகளுக்கு மிகவும் நன்மை பயக்கும். நிபுணர்களின் கூற்றுப்படி, தக்காளியில் குறைந்த சோடியம் மற்றும் அதிக பொட்டாசியம் உள்ளது. இவை நரம்பு மண்டலங்களில் சுவர்களை விரிவு படுத்தும். இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது மற்றும் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. அதே சமயம் பொட்டாசியம் நிறைந்த உணவுகளை உட்கொள்ளும் போது, சோடியம் அதிகமாக வெளியேறும். தக்காளியில் வைட்டமின் கே உள்ளது, இது இரத்த உறைதலைத் தடுக்கிறது.
Pic Courtesy: Freepik