Expert

Tomato For BP: தக்காளி சாப்பிடுவதால் உயர் இரத்த அழுத்தம் கட்டுப்படுமா? உண்மை இங்கே!

  • SHARE
  • FOLLOW
Tomato For BP: தக்காளி சாப்பிடுவதால் உயர் இரத்த அழுத்தம் கட்டுப்படுமா? உண்மை இங்கே!


இது தவிர, தக்காளியில் பொட்டாசியம் உள்ளது. இது சோடியத்தின் தீய விளைவுகளை குறைக்கிறது மற்றும் உடலின் திரவ அளவைக் கட்டுப்படுத்துகிறது. தக்காளி சாப்பிடுவதன் மூலம் பிபியை கட்டுப்படுத்த முடியுமா? இல்லையா என்பதை பற்றி நாம் விரிவாக பார்க்கலாம். இது குறித்த தெளிவான தகவலுக்கு, லக்னோவில் உள்ள கேர் இன்ஸ்டிடியூட் ஆப் லைஃப் சயின்ஸின் மருத்துவர் டாக்டர் சீமா யாதவ், எம்.டி.யிடம் பேசினோம். அவர் கூறிய விஷயங்கள் இங்கே…

இந்த பதிவும் உதவலாம் : Blood Pressure Remedies: உயர் இரத்த அழுத்தத்தை சமாளிக்க உதவும் வீட்டு முறைகள்!

ஆய்வு கூறுவது என்ன?

ஐரோப்பிய ஜர்னல் ஆஃப் ப்ரிவென்டிவ் கார்டியாலஜியில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தக்காளி சாப்பிட்டால், உயர் இரத்த அழுத்தம் பிரச்சனை 36 சதவீதம் குறைவதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் சுமார் 7056 பேர் கலந்து கொண்டனர். இதில் 82.5 சதவீதம் பேருக்கு உயர் இரத்த அழுத்தம் இருந்தது. தக்காளியை தினசரி உணவில் 110 கிராமுக்கு மேல் சேர்த்துக் கொண்டவர்களின் இரத்த அழுத்த பிரச்சினை குறைவதை கவனித்துள்ளனர்.

தக்காளி சாப்பிட்டால் பிபி கட்டுப்படுமா?

லைகோபீன் மற்றும் பொட்டாசியம் தக்காளியில் காணப்படுகிறது. இந்த இரண்டு கூறுகளும் இதயத்திற்கு நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. ஆனால், தக்காளியை மட்டும் சாப்பிட்டால் பிபி கட்டுப்படாது. ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சியின் உதவியுடன் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தலாம். தக்காளி சாப்பிடுவதால் மட்டுமே பிபி கட்டுப்படாது. இருப்பினும், உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களும் உடல் பருமன் குறித்து அடிக்கடி புகார் கூறுகின்றனர்.

இந்த பதிவும் உதவலாம் : Blood Pressure Remedies: இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த அருமையான வீட்டு வைத்தியம்!

தக்காளியில் நார்ச்சத்து உள்ளது, இதை சாப்பிடுவதன் மூலம் எடையைக் கட்டுப்படுத்தலாம். லைகோபீன் தவிர, பீட்டா கரோட்டின், வைட்டமின் சி, பொட்டாசியம், ஃபிளாவனாய்டுகள், ஃபோலேட் மற்றும் வைட்டமின் ஈ போன்ற ஊட்டச்சத்துக்களும் தக்காளியில் உள்ளன. இந்த கூறுகள் வகை 2 நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைக்கின்றன. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் தக்காளியில் காணப்படுகின்றன, இது ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவுகிறது.

Pic Courtesy: Freepik

Read Next

Green Banana vs Yellow Banana: பழுத்த பழமா? பழுக்காத பழமா? எது நல்லது..

Disclaimer