Green Grapes Benefits: உயர் இரத்த அழுத்தத்தால் அவதியா? பச்சை திராட்சை ஒன்னு போதும்.

  • SHARE
  • FOLLOW
Green Grapes Benefits: உயர் இரத்த அழுத்தத்தால் அவதியா? பச்சை திராட்சை ஒன்னு போதும்.

உயர் இரத்த அழுத்தம் காரணமாக பதற்றம், மன அழுத்தம் போன்றவை ஏற்படலாம். மேலும், அதிகப்படியான சோடியம் காரணமாக ஏற்படும் உயர் இரத்த அழுத்தத்தால், சிறுநீரகங்களிலுள்ள இரத்தக் குழாய்கள் சேதமடைகிறது. இது சிறுநீரகத்தின் செயல்பாட்டைத் திறனைக் குறைக்கிறது. உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க சில ஆரோக்கியமான உணவு முறைகளைக் கையாள்வது அவசியமாகும். அந்த வகையில் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க பச்சை திராட்சை பெரிதும் உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Red Banana Eating Time: செவ்வாழைப் பழம் சாப்பிட சரியான நேரம் எது தெரியுமா?

பச்சை திராட்சையின் ஊட்டச்சத்துக்கள்

மற்ற பழங்களைப் போலவே பச்சை திராட்சை பல்வேறு வகையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்றவை நிறைந்துள்ளது. மேலும் இதில் அதிகளவிலான வைட்டமின் சி, கே போன்றவை உள்ளது. இது தவிர, வைட்டமின் பி6, மாங்கனீசு, பொட்டாசியம் சத்துக்கள் காணப்படுகிறது.

ஒரு கப் அளவிலான பச்சை திராட்சை பூஜ்ஜிய கொழுப்பு நிறைந்ததாகும். இதில் 52 கலோரிகள், 2 மில்லி கிராம் அளவிலான சோடியம், 14 கிராம் அளவிலான கார்போஹைட்ரேட்டுகள், 1 கிராம் நார்ச்சத்து மற்றும் 7.75 கிராம் அளவு சர்க்கரை நிறைந்துள்ளது.

திராட்சை ஒரு உயர் பிரக்டோஸ் வகையைச் சார்ந்த பழமாகும். அதிகளவு திராட்சை எடுத்துக் கொள்வது இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கலாம். அதிலும் குறிப்பாக டைப் 2 நீரிழிவு அல்லது பிரக்டோஸ் சகிப்புத் தன்மை கொண்டவர்கள் திராட்சையை குறைந்த அளவு எடுத்துக் கொள்ளலாம் அல்லது முடிந்த வரை தவிர்க்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Pumpkin During Summer: எடை குறைப்பு முதல் இதய நோய் வரை. கோடையில் பூசணி தரும் அற்புத நன்மைகள்

இரத்த அழுத்தத்தைக் குறைக்க பச்சை திராட்சையின் நன்மைகள்

  • உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பச்சை திராட்சை சிறந்த பயனளிக்கிறது. ஏனெனில் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்கான சிறந்த வழி பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்த பழங்களை எடுத்துக் கொள்வதாகும். இந்த பொட்டாசியம் இரத்த ஓட்டத்தில் உள்ள சோடியத்துடன் பிணைக்கப்படுகிறது.
  • பச்சை திராட்சையில் பொட்டாசியம் மற்றும் சோடியம் சத்துகள் நிறைந்து காணப்படுகிறது. இவை இருதய அமைப்பை ஒழுங்குபடுத்தி உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.
  • உயர் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் மாரடைப்பு, பக்கவாதம், மற்றும் இன்னும் பிற விளைவுகளின் அபாயத்தைக் குறைக்க பொட்டாசியம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • உயர் இரத்த அழுத்த நோயாளிகள் பச்சை திராட்சை எடுத்துக் கொள்வது சிஸ்டாலிக், டயஸ்டாலிக் இரத்த அழுத்தம் இரண்டிலும் வினைபுரிகிறது. இவ்வாறு திராட்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் வினைபுரிந்து இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: Kuthiraivali Rice Benefits: சர்க்கரை நோய் முதல் இரத்த சோகை வரை. இந்த அரிசி ஒன்னு போதும்

Image Source: Freepik

Read Next

Dry Ice: தெரியாமல் சாப்பிட்டால் கூட உயிருக்கே ஆபத்து; ட்ரை ஐஸ் என்றால் என்ன தெரியுமா?

Disclaimer