Kuthiraivali Rice Benefits: சர்க்கரை நோய் முதல் இரத்த சோகை வரை. இந்த அரிசி ஒன்னு போதும்

  • SHARE
  • FOLLOW
Kuthiraivali Rice Benefits: சர்க்கரை நோய் முதல் இரத்த சோகை வரை. இந்த அரிசி ஒன்னு போதும்


Is Kuthiraivali Rice Good For Health: நாம் அன்றாடம் எடுத்துக் கொள்ளும் அரிசி வகைகளில் ஏராளமான வகைகள் உள்ளது. அதில் சீரக சம்பா அரிசி, வெள்ளை அரிசி, சாமை அரிசி, சிவப்பு அரிசி, பாஸ்மதி அரிசி, குதிரைவாலி அரிசி போன்றவை அடங்கும். இதில் குதிரைவாலி அரிசி என்பது குதிரையின் வாலைப் போன்று இருப்பதால் இந்த பெயரில் அழைக்கப்படுகிறது. குதிரைவாலி அரிசி மூலம் கிடைக்கும் பெறும் நன்மைகள் குறித்து காணலாம்.

குதிரைவாலி அரிசியின் நன்மைகள்

குதிரைவாலி அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் சிலவற்றைக் காணலாம்.

எலும்பு வலிமைக்கு

குதிரைவாலி அரிசியில் சுண்ணாம்பு சத்து, பாஸ்பரஸ் போன்றவை அதிகளவில் காணப்படுகிறது. குதிரைவாலி அரிசியை சமைக்கும் போது கால்சியம் சத்துக்கள் பாஸ்பேட்டாக மாறுகிறது. இதனால், தினசரி உணவில் குதிரைவாலி அரிசியை எடுத்துக் கொள்வது எலும்பு வலிமைக்கு உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Early Dinner: இரவு உணவு சீக்கிரம் சாப்பிட்டா இந்த பிரச்சனைகளிலிருந்து தப்பிக்கலாம்

குழந்தையின் வளர்ச்சிக்கு

வளரும் குழந்தைகளுக்கு பாஸ்பரஸ், நார்ச்சத்துக்கள், புரதச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து போன்றவை குதிரைவாலி அரிசியில் அதிகம் காணப்படுகிறது. எனவே குதிரைவாலி அரிசியை வளரும் குழந்தைகளுக்கு தினசரி உணவாக சமைத்து கொடுக்கலாம்.

மலச்சிக்கல் பிரச்சனைக்கு

குதிரைவாலி அரிசியில் இரும்புச்சத்துக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் குதிரைவாலி அரிசியை நாள்தோறும் எடுத்துக் கொள்வது நல்ல தீர்வைத் தரும். எனவே மூலம் பிரச்சனை உள்ளவர்களுக்கு குதிரைவாலி அரிசியை ஆய்வுகள் பரிந்துரைக்கப்படுகிறது.

சர்க்கரை நோய்க்கு

பொதுவாக, அதிகளவு கார்போஹைட்ரேட்டுகள் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்வதால் சர்க்கரை நோய் ஏற்படலாம். குதிரைவாலி அரிசியைப் பொறுத்த வரை, நார்ச்சத்துக்கள் மற்றும் புரதச்சத்துக்களே அதிகளவில் உள்ளது. இந்த குதிரைவாலி அரிசியை எடுத்துக் கொள்வது சர்க்கரை நோய்க்கு சிறந்த தேர்வாக அமைகிறது. கோதுமையைக் காட்டிலும் குதிரைவாலி அரிசி உடலில் அதிகளவு சர்க்கரை சேர்க்காமல் இருக்க உதவுகிறது.

உடல் எடையைக் குறைக்க

குதிரைவாலி அரிசியில் மாவுச்சத்து, புரதச்சத்து, தாது உப்புகள், நார்ச்சத்து போன்றவை பெருமளவில் நிறைந்துள்ளது. இது உடல் எடையைக் குறைக்கவும், கொழுப்பைக் கரைக்கவும் உதவுகிறது. மேலும் இது உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Soaked Dry Fruits: ஹெல்த்தியா இருக்க ஊறவைத்த உலர் பழங்களை சாப்பிடுங்க

செரிமான பிரச்சனைக்கு

தினமும் குதிரைவாலி அரிசியை உணவில் எடுத்துக் கொள்வது செரிமான பிரச்சனைக்கு தீர்வு தரலாம். மேலும் இது உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. இதனுடன், முதியவர்களுக்கு ஏற்படக்கூடிய செரிமானக்கோளாறுகளை சரி செய்ய உதவுகிறது.

இதய நோய் அபாயத்திற்கு

இதய நோய் உள்ளவர்கள் குதிரைவாலி அரிசியை தினந்தோறும் எடுத்துக் கொள்வது இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை மெதுவாக கட்டுக்குள் வைக்கிறது. இதனால், இதயத்திற்கு செல்லக்கூடிய இரத்த நாளங்கள் சீராகவும், இதயத்துடிப்பு சீராக இருப்பதையும் உணரலாம்.

சீரான உறக்கத்திற்கு

இன்று பெரும்பாலானோர் சரியான உறக்கம் இல்லாமல் அவதிப்படுகின்றனர். குதிரைவாலி அரிசியில் ரிப்போஃப்ளோவின், தயமின் போன்றவை நிறைந்துள்ளது. இதனைக் கஞ்சியாக இரவு உணவாக எடுத்துக் கொள்வது ஆழ்ந்த உறக்கத்தைத் தருகிறது.

இவ்வாறு குதிரைவாலி அரிசியை எடுத்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகளைத் தருகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Red Banana Eating Time: செவ்வாழைப் பழம் சாப்பிட சரியான நேரம் எது தெரியுமா?

Image Source: Freepik

Read Next

World Sleep Day: இந்த பானங்களை குடித்தால் போதும்.. இரவு படுக்கையில் படுத்ததும் தூங்கிவிடுவீர்கள்!

Disclaimer