Palaya Soru Benefits: இந்த பிரச்சனைக்கு அறுவை சிகிச்சைலாம் வேணாம்! பழைய சோறு ஒன்னு போதும்

  • SHARE
  • FOLLOW
Palaya Soru Benefits: இந்த பிரச்சனைக்கு அறுவை சிகிச்சைலாம் வேணாம்! பழைய சோறு ஒன்னு போதும்


Fermented Rice Benefits In Tamil: நம் முன்னோர்கள் எவ்வளவு வயதானவர்களாக இருந்தாலும் நீண்ட நாள் உடல் வலுவோடு இருக்க முடிந்தது. இதற்கு முக்கிய காரணமாக இருப்பது அவர்கள் எடுத்துக் கொண்ட உணவுமுறையே ஆகும். அதிலும் அவர்களுடைய அன்றாட உணவில் பழைய சோறு இடம் பிடித்திருப்பதே இதற்கு முக்கிய காரணமாகும். இன்று பெரும்பாலானோர் பழைய சோறு என்றாலே தள்ளி நிற்பர். இதில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி பலருக்கும் தெரிவதில்லை.

பழைய சாதத்தையும், அதை ஊறவைத்த நீராகரத்தையும் எடுத்துக் கொள்வது, வழக்கமாக எடுத்துக் கொள்ளும் அரிசி உணவுகளை விட அதிகப்படியான ஊட்டச்சத்துகளைத் தரும் எனக் கூறப்படுகிறது. சாதாரண நீரைக் காட்டிலும், சாதம் ஊறவைத்த நீரில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இதில் பழைய சாதத்தில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்களின் விவரங்கள் குறித்தும், அதன் நன்மைகளையும் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: பற்களின் ஆரோக்கியத்திற்கு நீங்க சாப்பிட வேண்டிய உணவுகள் இது தான்!

பழைய சாதத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

பழைய சோற்றில் நிறைந்திருக்கும் ஊட்டச்சத்துக்கள் உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகளைத் தருகிறது. இதில் கால்சியம், சோடியம், பொட்டாசியம், துத்தநாகம், இரும்பு, வைட்டமின் சி போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும், இதில் அரிதான பி6 மற்றும் பி12 வைட்டமின்களும் காணப்படுகிறது. இந்த வகை வைட்டமின்கள் மற்ற உணவுப் பொருள்களில் எளிதில் கிடைப்பதில்லை. மேலும், இதில் உருவாகும் நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் செரிமான ஆரோக்கியத்திர்கும், பல்வேறு நோயெதிர்ப்புப் பண்புகளையும் கொண்டுள்ளது.

பழைய சோறு சாப்பிடுவதில் உள்ள நன்மைகள்

மீந்து போன சாதத்தை நீரில் ஊறவைத்து அடுத்த நாள் எடுத்துக் கொள்வது என்னென்ன நன்மைகளைத் தரும் என்பது குறித்துக் காண்போம்.

உடல் சோர்வு நீங்க

சாதத்தை நொதிக்க வைத்து தயாரிக்கப்படும் பழைய சாதம் அதிகளவிலான வைட்டமின் டி சத்துக்களைக் கொண்டுள்ளது. இவை அதிகப்படியான உடல் சோர்வை நீக்க உதவுகிறது. மேலும், வயிற்றில் அமிலத்தன்மை மற்றும் வாயுவை அதிகரிக்காமல் பாதுகாப்பதுடன், உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது.

மலச்சிக்கல் பிரச்சனை நீங்க

ஆரோக்கியமான பாக்டீரியாக்கள் செரிமான சக்தியை மேம்படுத்துவதுடன், குடல் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. இது மிகச்சிறந்த மலமிளக்கியாகவும், வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் உதவுகிறது. பழைய சோறு அருந்துவது குடல் இயக்கத்தை சீராக வைத்திருப்பதால் அஜீரணக் கோளாறு, மலச்சிகல் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கவும் உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Ear Healthy Foods: எவ்வளவு வயசானாலும் காது தெளிவா கேட்க இந்த உணவு எடுத்துக்கோங்க.

சருமம் மற்றும் முடி ஆரோக்கியத்திற்கு

நொதிக்க வைக்கப்பட்ட சாதம் மற்றும் அது ஊறவைக்கப்பட்ட தண்ணீர் இரண்டுமே முடி மற்றும் சருமத்திற்குத் தேவையான போதிய ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது. இவை சருமத்தில் கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து, முதுமை எதிர்ப்புக்கு உதவுகிறது.

அதே போல, பழைய சாதத்தில் இருந்து வடிகட்டிய நீரானது முடிக்கு இயற்கையான கண்டிஷனராகச் செயல்பட்டு முடி ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. முடியை ஆழமாக உள்ளிருந்து உறுதியாக மற்றும் பளபளப்பாக வைத்துக் கொள்ள உதவுகிறது. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் வைட்டமின்கள் முடி வளர்ச்சியைத் தூண்ட உதவுகிறது.

குடல் அழற்சி நோய்க்கு சிறந்த தீர்வாக

இன்று பெரும்பாலானோர் குடல் அழற்சி நோயால் பாதிக்கப்படுகின்றனர். இவை குணப்படுத்த முடியாத நோயாகவே கருதப்படுகிறது. இந்த பிரச்சனைக்குத் தீர்வு தரும் விதமாக பழைய சோறு பெரிதும் உதவுகிறது. குறிப்பாக, அறுவை சிகிச்சையைத் தவிர்த்து இது போன்ற பிரச்சனைகளுக்குத் தீர்வாக பழைய சாதத்தினை எடுத்துக் கொள்ளலாம். தீராத ஏப்பம், மலக்குடல் பிரச்சனை உட்பட குடல் சார்ந்த பிரச்சனைகளுக்குத் தீர்வு தரும் விதமாக பழைய சோறு அமைகிறது. தினமும் வெறும் வயிற்றில் பழைய சோற்றை அருந்துவதன் மூலம் குடல் அழற்சி பிரச்சனையைத் தவிர்க்கலாம்.

காலையில் வெறும் வயிற்றில் பழைய சோற்றைக் குடிப்பது குடல் புண், குழந்தையின்மை, மாதவிடாய் பிரச்சனைகள், கர்ப்பப் பை நீர்க்கட்டி போன்ற பிரச்சனைகளுக்குத் தீர்வு தரும் விதமாக பழைய சோறு அமைகிறது. இது தவிர, எலும்புகளை வலுவாக்கவும் பழைய சோறு உதவுகிறது.

குறிப்பு

இவ்வாறு பழைய சாதத்தை எடுத்துக் கொள்வது உடல் நலத்திற்கு பல்வேறு நன்மைகளைத் தருகிறது. எனினும் ஒவ்வாமை அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை உள்ளவர்கள் பழைய சாதத்தினை எடுத்துக் கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: Apricots Benefits: குளிர்காலத்தில் ஆப்ரிகாட் சாப்பிடுவது சருமத்திற்கு எவ்வளவு நல்லது தெரியுமா?

Image Source: Freepik

Read Next

Health Tips: 'இந்த' 5 விஷயங்கள சேர்த்துக்கோங்க… எந்த நோயும் உங்களை நெருங்காது!

Disclaimer