Tips To Maintain Ear Health With Diet: ஆரோக்கியமான உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு ஊட்டச்சத்து மிக்க உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியமாகும். வழக்கமான உணவு முறையில் ஆரோக்கியமான உணவு வகைகளைச் சேர்ப்பதன் மூலம் உடலில் எந்த வித பிரச்சனைகளும் ஏற்படாமல் தடுக்கலாம். அந்த வகையில், ஆரோக்கியமான உணவு முறைகள் உடல் நிறை, எலும்புகள், மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தை பாதிப்பது மட்டுமல்லாமல், காது ஆரோக்கியத்தையும் தீர்மானிப்பதாக அமைகிறது. காது ஆரோக்கியத்தில் உணவின் பங்கு உள்ளதா என்பதில் நிறைய பேருக்கு சந்தேகம் எழும். ஆம். காது ஆரோக்கியத்தில் உணவுமுறை முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் காது ஆரோக்கியத்துடன் உணவு எந்த வகையில் பங்கு வகிக்கிறது என்பது குறித்துக் காணலாம்.
காது ஆரோக்கியத்தைப் பாதிப்பில் ஊட்டச்சத்தின் பங்கு
தேசிய மருத்துவ நூலகம் வெளியிட்ட ஆய்வு ஒன்றில், வைட்டமின் ஏ, பி, சி, டி ஈ போன்ற ஒற்றை ஊட்டச்சத்துகளும், மெக்னீசியம், செலினியம், துத்தநாகம், அயோடின், இரும்பு, கொழுப்பு அமிலங்கள் போன்ற ஒற்றை ஊட்டச்சத்துகள் உட்பட பல்வேறு ஊட்டச்சத்து மாறுபாடுகளால், காதின் கேட்கும் நிலை பாதிப்படையலாம். இந்த ஒவ்வொரு ஊட்டச்சத்து காரணிகளின் தாக்கமும், வயது அல்லது பாலினம் போன்ற மாறிகளைப் பொறுத்து மாறுபடலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Juice For Stress: மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை குறைக்க இந்த ஜூஸ்யை குடியுங்க!
துத்தநாகம், மெக்னீசியம், செலினியம், இரும்பு மற்றும் அயோடின், வைட்டமின் ஏ, பி, சி, டி மற்றும் ஈ போன்ற குறிப்பிட்ட நுண்ணூட்டச்சத்துகளின் குறைபாடு காது கேளாமையின் பரவலை மேம்படுத்துவதாக அமைகிறது என ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளது. மேலும், மோசமான செவிப்புலன் நிலை அதிக கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் எடுத்துக் கொள்ளுதல் அல்லது குறைந்த அளவு புரதங்களை எடுத்துக் கொள்ளுதல் போன்றவற்றுடன் தொடர்புடையதாக அமைகிறது.
அதிக உடல் எடை செவித்திறனை பாதிக்குமா?
உடல் பருமன் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு போன்றவை காது கேளாமைக்கான ஆபத்து காரணியாகவும் அமைகின்றன. செவித்திறன் இழப்பு மற்றும் உடல் பருமன் போன்றவற்றிற்கு இடையேயான தொடர்பில் முக்கியமான ஒன்றாக, அதிக கொழுப்பு திசுக்களால் கேபிலரி சுவர் சிதைக்கப்படுவதால் உணர்திறன் மிக்க உள் காது அமைப்பு சேதமடைவதைக் குறிக்கிறது.
காது ஆரோக்கியத்திற்கு சாப்பிட வேண்டிய உணவுகள்
எந்தெந்த உணவுகள் செவித்திறனை பாதிக்கிறது என்பதை அறிந்து, அதற்கேற்ப ஆரோக்கியமான உணவுமுறையைக் கையாள்வது அவசியம். அதன் படி, அதிக காய்கறிகள் மற்றும் பழங்களை எடுத்துக் கொவது காதுகளின் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது. மேலும், இது உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை வலுவாக வைத்திருப்பதுடன், தொற்றுக்களை எதிர்த்துப் போராட உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: COPD Awareness Day: உங்களுக்கு COPD இருக்கா? அப்ப நீங்க இத மறந்தும் சாப்பிடக்கூடாது.
இதில் வைட்டமின்கள் குறிப்பாக ஏ, பி, சி, டி மற்றும் ஈ போன்ற ஊட்டச்சத்துகளை அளிக்கும் உணவுகளைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். மேலும், துத்தநாகம், இரும்பு, அயோடின், மெக்னீசியம், செலினியம் மற்றும் புரத தேவைகளைப் பூர்த்தி செய்யும் உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். நோயெதிர்ப்பு ஆற்றலைத் தரும் வைட்டமின் சி நிறைந்த ப்ரோக்கோலி, காலிஃபிளவர், பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி, தக்காளி, பப்பாளி, மிளகுத்தூள் போன்றவற்றைச் சேர்த்துக் கொள்ளலாம்.
மேலும், வைட்டமின் ஈ நிறைந்த கடுகு, பூசணி, மற்றும் சூரியகாந்தி விதைகள், வெண்ணெய், மற்றும் மாம்பழம் போன்றவற்றைச் சேர்க்கலாம். ஆப்பிள்கள், வெங்காயம், பிரிஞ்சி, பீன்ஸ், திராட்சை மற்றும் பிளம்ஸ் போன்ற ஆக்ஸிஜனேற்றத்தைத் தரும் உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். இவை ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகளைத் தருகின்றன. துத்தநாகத்தைப் பெற கொட்டைகள், முழு தானியங்களை எடுத்துக் கொள்ளலாம்.
குறிப்பு
மேலே கூறப்பட்டவற்றில், நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில், இவை ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துடன் காதுகளையும் பாதிக்கலாம். எனவே ஊட்டச்சத்து குறைபாடு உள்ளதா என்பதை பரிசோதித்து பின், ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்கவும், காது கேளாமைக்கான காரணங்களை அறிய மருத்துவ ஆலோசனையையும் பெறலாம்.
இந்த பதிவும் உதவலாம்: இனி இந்த கலர் பாக்கெட் பால் கிடையாது. எந்த கலர் பாக்கெட் பால் உடலுக்கு நல்லது தெரியுமா?
Image Source: Freepik