Aavin Milk Packet Colour Difference: இன்று பெரும்பாலான வீடுகளில் பாக்கெட் பால் உபயோகமே அதிகமாக உள்ளது. கிராமங்கள், நகரங்கள் என எல்லா இடங்களிலும் பாக்கெட் பால் விற்பனையே முதன்மையானதாக உள்ளது. ஆனால், இந்த பாக்கெட் பால் வாங்கும் போது, பல்வேறு பாக்கெட் நிறங்களில் பால் விற்பனை செய்வதை பார்த்திருப்போம்.
ஆனால், பலருக்கும் இந்த பல்வேறு வகையான பால் பாக்கெட் கலருக்கு வித்தியாசமே தெரியாமல் உள்ளனர். ஆனால், இந்த கலர் வித்தியாசத்திற்கு தனிக்காரணமே உள்ளது. அதாவது பால் பாக்கெட்டுகளின் நிறமானது அதில் உள்ள கொழுப்பின் அளவை பொறுத்து மாறுபடுகிறது. இவ்வாறு பாலில் சேர்க்கப்பட்ட கொழுப்பைப் பொறுத்து, ஒவ்வொரு நிற பால் பாக்கெட்டுகளும் மாறும். ஆனால், தற்போது பச்சை நிற பால் பாக்கெட்டுகள் நிறுத்தப்போவதாக ஆவின் நிறுவனம் முடிவு செய்துளதாக கூறப்படுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Dalia For Diabetes: சர்க்கரை நோயாளிகளுக்கு உடைத்த கோதுமை தரும் நன்மைகள். இத கட்டாயம் சாப்பிடணும்
பால் பாக்கெட்டுகளின் நிறங்கள்
பால் பாக்கெட்டுகளின் நிறங்களானது, அதில் உள்ள கொழுப்பின் அளவில் மாற்றத்துடன் காணப்படுகின்றன. அதன் படி குழந்தைகள், நோயாளிகள், கர்ப்பிணி பெண்கள் போன்றோர் அவரவர்களுக்கு ஏற்ப பால் பாக்கெட்டுகளை வாங்கிக் கொள்ளலாம். இதில் எந்தெந்த பால் பாக்கெட்டுகளில் எவ்வளவு அளவிலான கொழுப்புச்சத்து நிறைந்துள்ளது என்பது குறித்துக் காண்போம்.
எந்தெந்த பாக்கெட் நிறங்களில் பாக்கெட் பால் உள்ளது?
நீல நிற பாக்கெட் பால்
இது நைஸ் பால் எனவும் அழைக்கப்படுகிறது. இது சமன் செய்யப்பட்ட பால் ஆகும். அதாவது நடுநிலை அளவிலான கொழுப்புச் சத்துகள் காணப்படுகின்றன. இந்த வகை பாலை எடுத்துக் கொள்வது எளிதில் செரிமானம் அடைய உதவுகிறது. எனவே, இந்த பாக்கெட் பால் நோயாளிகள், குழந்தைகள், மற்றும் வயதானவர்கள் என அனைவரும் எடுத்துக் கொள்ளலாம். இந்த நீல நிற பாக்கெட்டின் 100கிராம் பாலில் 3 கிராம் அளவிலான கொழுப்புச் சத்துகள் உள்ளது.
பச்சை நிற பாக்கெட் பால்
பச்சை கலர் பாக்கெட் பால் வகையில், கொழுப்பு சற்று அதிகமாகவே காணப்படுகிறது. அதாவது 100 கிராம் பச்சை நிற பாக்கெட் பாலில் 4.5% அளவிலான கொழுப்பு உள்ளது. எனவே, இந்த அதிக கொழுப்புச் சத்துள்ள பாக்கெட் பாலை வயதானவர்கள், நோயாளிகள் போன்றோர் எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: Ragi Benefits: நீங்க எப்போதும் இளமையா இருக்கணுமா? அப்ப ராகி எடுத்துக்கோங்க.
ஆரஞ்சு நிற பாக்கெட் பால்
மற்ற பால் பாக்கெட்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்த வகையான பாக்கெட் பால் அதிக கொழுப்புச் சத்து மிக்க பாலாகும். அதன் படி, இந்த நிற பாக்கெட்டின் 100 கிராம் பாலில் 6% அளவு கொழுப்புச்சத்தும், 9% இதர சத்துகளும் நிறைந்துள்ளது. எனவே, இதனை வயதானவர்கள், நோயாளிகள் போன்றோர் எடுத்துக் கொள்வதைத் தவிர்ப்பது நல்லது. மேலும், இந்த வகை பால், இனிப்பு பண்டங்கள் தயாரிக்க பெரும்பாலும் பயன்படுகிறது. இது ஃபுல் கிரீம் மில்க் என்றும் அழைக்கப்படுகிறது.
பிங்க் நிற பாக்கெட் பால்
இதர பால் பாக்கெட்டுகளுடன் ஒப்புடும் போது, இந்த பிங்க் நிற பால் பாக்கெட்டில் மிகக் குறைந்த அளவிலான கொழுப்புச் சத்து காணப்படுகிறது. இது டயட் பால் எனவும் அழைக்கப்படுகிறது. மேலும், இது ஆரோக்கியத்திற்கு மிகச்சிறந்த தேர்வாகும். இந்த வகை பாலை வயதானவர்கள், உடல் எடையைக் குறைக்க விரும்புவோர்கள் போன்றோர் எடுத்துக் கொள்ளலாம். ஏனெனில், இதன் 100 கிராம் பாலில் 1.5 கிராம் அளவிலான கொழுப்புகள் மட்டுமே உள்ளன.
இந்த பதிவும் உதவலாம்: Egg With Milk Benefits: பச்சை முட்டையை பாலில் கலந்து குடித்தால், உடலில் என்ன மாற்றம் நடக்கும் தெரியுமா?
Image Source: Freepik