Egg With Milk Benefits: பச்சை முட்டையை பாலில் கலந்து குடித்தால், உடலில் என்ன மாற்றம் நடக்கும் தெரியுமா?

  • SHARE
  • FOLLOW
Egg With Milk Benefits: பச்சை முட்டையை பாலில் கலந்து குடித்தால், உடலில் என்ன மாற்றம் நடக்கும் தெரியுமா?

பச்சை முட்டையை பாலுடன் சேர்த்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

மனநிலை மேம்பாட்டிற்கு

பச்சை முட்டையை பாலுடன் கலந்து குடிப்பது மனநிலை மேம்பாட்டிற்கு உதவுகிறது. இதற்கு இதில் உள்ள வைட்டமின் பி12 ஊட்டச்சத்துக்களே காரணமாகும். முட்டையில் வைட்டமின் பி6, ஃபோலேட் போன்ற பல முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இது மன ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லதாகும்.

இந்த பதிவும் உதவலாம்: Kal Uppu Benefits: கல் உப்பில் உள்ள அற்புத நன்மைகள் இத்தனையா.? கண்டிப்பா தெரிஞ்சிக்கணும்.!

முடி ஆரோக்கியத்திற்கு

பச்சை முட்டை, பால் இரண்டுமே முடிக்குப் பயனுள்ளதாக அமையும். முடி புரதத்தால் ஆனதாகும். எனவே புரதம் நிறைந்த உணவுகளான பால் மற்றும் முட்டைகளை எடுத்துக் கொள்வது தலைமுடிக்கு ஏற்றதாகும். இந்த இரண்டு புரத உணவுகளில் பயோட்டின், வைட்டமின் பி12, மற்றும் பாந்தோதெனிக் அமிலம் போன்றவை நிறைந்துள்ளது. இது முடி உதிர்வைத் தடுக்க உதவுகிறது. மேலும், நரைமுடி பிரச்சனையைப் போக்கவும் இந்த பால், முட்டை கலவை உதவுகிறது.

கண் பாதுகாப்பிற்கு

பச்சை முட்டை மற்றும் பால், கண்களுக்கு நன்மை தருகிறது. NCBI-ல் வெளியிட்ட அறிக்கையின் படி, துத்தநாகம் கண்களுக்குத் தேவையான ஊட்டச்சத்து ஆகும். மேலும் பாலில் ஜிங்க் அதிகம் உள்ளது. முட்டையும் கண் பாதுகாப்பிற்கு உதவுகிறது. மேலும் இதில் லுடீன் மற்றும் ஜியாக்சாந்தின் போன்றவை காணப்படுகின்றன. இவை கண் பாதுகாப்பிற்குப் பெரிதும் உதவுகின்றன. எனவே பால், முட்டை கலவை கண்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க உதவும்.

இந்த பதிவும் உதவலாம்: Benefits of Banana Milkshake: அருமையான நன்மைகளைத் தரும் வாழைப்பழ மில்க் ஷேக்!

எடையை சமநிலையில் வைத்திருத்தல்

சீரான எடை பராமரிப்பிற்கு பச்சை முட்டையை பாலுடன் கலந்து குடிக்கலாம். ஏனெனில் காலையில் அதிக புரத உணவுகளை எடுத்துக் கொள்வது வயிறு நிரம்பிய உணர்வைத் தரும். இது உடலின் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும். மேலும் முட்டை மற்றும் பால் இரண்டும் உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்குகிறது. இது பசியைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

தசைகளை வலுப்படுத்த

பச்சை முட்டையை பாலில் கலந்து குடிப்பது தசைகளை வலுவடையச் செய்ய உதவுகிறது. இதற்கு முட்டை மற்றும் பால் இரண்டும் புரதத்தின் நல்ல ஆதாரமாக இருப்பதே காரணமாகும். முட்டையின் வெள்ளைப் பகுதியில் அல்புமின் என்ற புரதம் உள்ளது. இது உடலில் புரதம் உறிஞ்சுவதை ஊக்குவிக்கிறது. மேலும் இது தசைகளை அதிகரிக்கிறது. எனவே பாலுடன் முட்டையை உட்கொள்வது சிறந்த முறையில் தசைகளை உருவாக்கலாம். இதன் காரணமாகவே மல்யுத்த வீரர்கள் பச்சை முட்டை மற்றும் பால் சாப்பிட விரும்புகின்றனர்.

இந்த பதிவும் உதவலாம்: Dates With Milk Benefits: இரவில் பாலுடன் பேரீச்சம்பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் பல்வேறு நன்மைகள்!

Image Source: Freepik

Read Next

International Year Of Millets 2023: கேழ்வரகு சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

Disclaimer

குறிச்சொற்கள்