Kal Uppu Benefits: கல் உப்பில் உள்ள அற்புத நன்மைகள் இத்தனையா.? கண்டிப்பா தெரிஞ்சிக்கணும்.!

  • SHARE
  • FOLLOW
Kal Uppu Benefits: கல் உப்பில் உள்ள அற்புத நன்மைகள் இத்தனையா.? கண்டிப்பா தெரிஞ்சிக்கணும்.!


பொதுவாக கல் உப்பு அதிக செறிவு கொண்ட தூய வடிவமாக உள்ளது. இது சாதாரண உப்பைப் போல சுத்திகரிக்கப்படாமல், தூய்மையான படிக வடிவத்தில் கிடைக்கக் கூடியதாகும். உப்பு சுத்திகரிப்பு செயல்பாடுகளில், நனைவதைத் தடுப்பதற்காக பல்வேறு தீங்கு விளைவிக்கக் கூடிய இரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. ஆனால், கல் உப்பு சுத்திகரிக்கப்படுவதில்லை என்பதால் இதில் எந்த வித இரசாயனங்களும் கலக்கப்படவில்லை. மேலும், இதனால் எந்த பக்கவிளைவுகளும் இல்லை.

இந்த பதிவும் உதவலாம்: உடல் எடை சீக்கிரம் குறைய இந்த உடற்பயிற்சி செய்யுங்க!

கல் உப்பின் நன்மைகள்

கல் உப்பில் கால்சியம், மக்னீசியம், சோடியம் குளோரைடு, சல்பர், ஆக்ஸிஜன், கோபால்ட் போன்ற பல நுண்ணூட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன. எனவே இது உடலின் பல்வேறு முக்கிய செயல்பாடுகளில் பங்கு வகிக்கிறது. மேலும், உடலை ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது. இதில் கல் உப்பு தரும் சில ஆரோக்கிய நன்மைகளைக் காணலாம்.

நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க

கல் உப்பில் வைட்டமின் கே சத்து நிறைந்துள்ளது. இது உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து, எலும்பு வலுபெற உதவுகிறது. இதனுடன், எலும்பு வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவுகிறது. பல்வேறு நோய்கள் உண்டாவதைத் தடுக்கிறது.

தொண்டைப் புண் குணமாக

சளி, இருமல் வரும் சமயத்தில் தொண்டை புண்ணால் பாதிக்கப்படும் அபாயம் உண்டு. இந்த சமயத்தில், தொண்டைப் புண்ணைக் குணப்படுத்த உப்பு நீரானது இயற்கையான வீட்டு வைத்தியமாகச் செயல்படுகிறது. உப்பு நீரால் தொண்டை வரை நனைத்து வாய் கொப்பளிக்கும் போது தொண்டை புண் ஆறி விடும். இது நுரையீரல் திறனை அதிகரிக்க உதவும் உறுப்பாகவும் செயல்படுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: உடல் எடையை குறைக்க கேரட் ஜூஸ் எப்படி குடிக்கணும்? எவ்வளவு குடிக்கணும்?

சரும ஆரோக்கியத்திற்காக

ஆயுர்வேத முறைப்படி, கல் உப்பு சருமத்தை சுத்தப்படுத்த உதவுகிறது. தோல் திசுக்களை சுத்தப்படுத்துவதுடன், வலுப்படுத்தவும், புத்துணர்ச்சியூட்டவும் உதவுகிறது.

கல் உப்பு முடி பராமரிப்பிலும் பங்கு வகிக்கிறது. இது முடியில் உள்ள அழுக்குகளை அகற்றுவது முடி உதிர்வையும் தடுக்க உதவுகிறது.

மன அழுத்தத்தைக் குறைக்க

அமைதியற்ற நிலையை அடையும் போது, சிறிதளவு கல் உப்பை நீரில் கலந்து குளிக்கும் போது அல்லது உட்கொள்ளும் போது மன அழுத்தம் குறைவதாகக் கூறப்படுகிறது. மேலும், இது மூளையை நன்றாக செயல்படுத்த உதவுகிறது.

செரிமானத்திற்கு கல் உப்பு

கல் உப்பில் தாதுக்கள், வைட்டமின்கள் போன்றவை நிறைந்துள்ளது. மேலும் வயிற்று வலி, நெஞ்செரிச்சல் போன்ற செரிமானம் தொடர்பான பிரச்சனைகளுக்கு கல் உப்பு தீர்வாக அமைகிறது. குடலில் உள்ள நச்சுப் பொருள்களை சுத்தப்படுத்தி குடல் இயக்கத்தை ஊக்குவிக்கிறது. மேலும், கல் உப்பானது உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: உடல் எடையை குறைக்க டீ உதவுமா? வாங்க பாக்கலாம்…

Image Source: Freepik

Read Next

Benefits Of Oats: தினமும் ஓட்ஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

Disclaimer

குறிச்சொற்கள்