Salt Types and Benefits: உப்பில் இத்தனை வகை இருக்கா? இதுல எது பெஸ்ட் தெரியுமா?

  • SHARE
  • FOLLOW
Salt Types and Benefits: உப்பில் இத்தனை வகை இருக்கா? இதுல எது பெஸ்ட் தெரியுமா?


அதன் படி, உப்பில் பல வகைகள் உள்ளன. அவை ஒவ்வொன்று தனித்தனி சிறப்புப் பண்புகளைக் கொண்டுள்ளது. ஆனால், இந்த உப்பில் எந்த வகை உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் பொருத்தமானது என்பதை அறிந்து கொள்வது அவசியமாகும். எந்த வகையான உப்பு சாப்பிடுவதன் மூலம் யார் என்னென்ன நன்மைகளைப் பெற முடியும் என்பதைப் பற்றித் தெரிந்து கொள்வது மிகவும் அவசியமாகும். இதில் உப்பின் வகைகள் மற்றும் அதன் நன்மைகள் குறித்து காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Kal Uppu Benefits: கல் உப்பில் உள்ள அற்புத நன்மைகள் இத்தனையா.? கண்டிப்பா தெரிஞ்சிக்கணும்.!

ஆயுர்வேத கூற்று

ஆயுர்வேதத்தில் ராக் சால்ட் உட்கொள்ளல் ஆனது மற்ற உப்பை விட சிறந்ததாகக் கருதப்படுகிறது. இந்த ராக் உப்பை விரத காலத்தில் பருகலாம். ராக் உப்பு ஆனது வெள்ளை மற்றும் கருப்பு உப்பை விட 84 மடங்கு சிறந்ததாகக் கருதப்படுகிறது. இதுவே உப்பின் சிறப்பாகும். இந்த உப்பில் பொட்டாசியம், மக்னீசியம், கால்சியம், இரும்பு, தாமிரம், துத்தநாகம் மற்றும் செலினியம் போன்ற பல்வேறு தாதுக்கள் நிறைந்துள்ளது. இந்த ஊட்டச்சத்துக்களைக் கொண்ட ராக் உப்பு ஆசிட் ரிஃப்ளக்ஸ், வீக்கம், நெஞ்செரிச்சல், மலச்சிக்கல் மற்றும் செரிமான பிரச்சனைகள் போன்றவற்றை மேம்படுத்த உதவுகிறது.

உப்பின் வகைகளும் அதன் நன்மைகளும்

கருப்பு உப்பு

கருப்பு உப்பின் வேதியியல் கலவை சோடியம் குளோரைடாகக் குறிப்பிடப்படுகிறது. இதில் அதிகளவிலான கந்தகம் நிறைந்துள்ளது. இவை வயிறு ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்துகிறது. இந்த கருப்பு உப்பை உட்கொள்வதன் மூலம் வாயு, மலச்சிக்கல் மற்றும் அஜீரணம் போன்ற செரிமான பிரச்சினைகளிலிருந்து நிவாரணம் பெறலாம். இது தவிர, கருப்பு உப்பு உட்கொள்வது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துதல், உடல் எடையிழப்பு, தசைபிடிப்பு மற்றும் மார்பு எரிச்சலை நீக்க உதவுகிறது.

கடல் உப்பு

கடல் நீரிலிருந்து கடல் உப்பு தயாரிக்கப்படுகிறது. இந்த உப்பில் கால்சியம், மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுக்கள் நிறைந்து காணப்படுகிறது. இந்த உப்பு விலை அதிகமாக இருப்பதுடன், பல்வேறு ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகிறது. இந்த உப்பில் நிறைந்துள்ள கால்சியம் சத்துக்கள் பற்கள் மற்றும் எலும்புகளை பலவீனத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது. இவை இறந்த சரும செல்களை அகற்றுவதற்கு ஒரு சிறந்த வழியாகக் கருதப்படுகிறது. எனினும், கடல் உப்பைக் குறைந்த அளவில் உட்கொள்வது நல்லது. இல்லையெனில் இவை உயர் இரத்த அழுத்தத்தை ஏற்படுத்தக் கூடியதாக அமைகிறது.

இந்த பதிவும் உதவலாம்: இந்துப்பு Vs கடல் உப்பு: எது ஆரோக்கியத்திற்கு நல்லது?

இளஞ்சிவப்பு உப்பு

இந்த வகை உப்பு ஆனது இமயமலையில் இருந்து வருகிறது. இந்த இளஞ்சிவப்பு உப்பில் பல வகையான தாதுக்கள் நிறைந்துள்ளது. இந்த உப்பு இனிப்பு சுவை கொண்டதாகும். இந்த உப்பைத் தவறாமல் மற்றும் மட்டுப்படுத்தி உட்கொள்வது, இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. எனவே உணவு அல்லது பானங்களில் இளஞ்சிவப்பு உப்பு சேர்ப்பது, உடலின் திரவ சமநிலையைப் பராமரிக்க உதவுகிறது. இது உடலில் நீரிழப்பு ஏற்படுவதைத் தடுக்க உதவுகிறது. இந்த இளஞ்சிவப்பு இமயமலை உப்பு ஆனது மூளையில் செரோடோனின் ஹார்மோனை அதிகரிக்கிறது. இதன் மூலம் மன அழுத்தத்தை நீக்கலாம். குறைந்த மன அழுத்தத்தின் மூலம் நல்ல தூக்கத்தைப் பெற முடியும். இது தவிர, இமயமலை இளஞ்சிவப்பு உப்பு சருமத்தை சுத்தம் செய்யவும் உதவுகிறது.

அயோடின் உப்பு

இந்த உப்பில் அயோடின் சத்துக்கள் நிறைந்துள்ளதால் இவை அயோடின் உப்பு எனப்படுகிறது. இது தைராய்டு சுரப்பிக்கு மிகவும் நன்மை பயக்கும். இந்த வகையான உப்புக்களே பொதுவாக வீடுகளில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், மிகக்குறைந்த அளவில் உட்கொள்வதைக் கட்டாயமாக்கிக் கொள்ள வேண்டும். மேலும், இந்த உப்பானது இமயமலை உப்புக்களைப் போலவே மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. மேலும் நகம், முடி, பற்கள் மற்றும் மூளை போன்றவற்றின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவுகிறது.

இது போன்று பல்வேறு உப்புகள், பல நன்மைகளைத் தந்தாலும் அதிகளவு உப்பு சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், இவை மாரடைப்பு, பக்கவாதம், கால்சியம் குறைபாடு மற்றும் உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். இதன் மூலம், உடலில் நீர் உறையத் தொடங்குவதுடன், கைகள் மற்றும் கால்களில் பயங்கரமான வீக்கம் உண்டாகலாம். எனவே குறைந்த அளவு உப்பை உட்கொள்வது நல்லது. எனவே ஏற்கனவே இரத்த அழுத்தம் அல்லது வேறு ஏதேனும் உடல்நலம் தொடர்பான பிரச்சினைகளைப் போராடுவதாக இருப்பின் எந்த உப்பையும் உட்கொள்வதற்கு முன்பு மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: அதிக உப்பு சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

Image Source: Freepik

Read Next

Coffee Before Workout: இவங்க மறந்தும் உடற்பயிற்சிக்கு முன் காபி குடிக்கக் கூடாது!

Disclaimer

குறிச்சொற்கள்