திடீரென உப்பு சாப்பிடுவதை குறைத்தால் உடலில் என்ன மாற்றங்கள் நிகழும் தெரியுமா?

  • SHARE
  • FOLLOW
திடீரென உப்பு சாப்பிடுவதை குறைத்தால் உடலில் என்ன மாற்றங்கள் நிகழும் தெரியுமா?


What happens when you reduce your salt intake: உணவில் உப்பு சேர்ப்பது சுவைக்காக மட்டுமல்லாமல், உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை அளிப்பதற்கும் அவசியமாகக் கருதப்படுகிறது. உப்பு ஆனது சோடியம் குளோரைடு கொண்டதாகும். இது மனித உடலுக்கு மிகவும் இன்றியமையாத கனிமமாக விளங்குகிறது. இந்த சோடியம் குளோரைடானது உடலில் தசை சுருக்கம், திரவ சமநிலை மற்றும் நரம்பு செயல்பாடு உள்ளிட்டவற்றிற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. இது போன்ற ஆரோக்கிய நன்மைகள் இருப்பினும், உப்பு உட்கொள்ளலைக் கண்காணிப்பது முக்கியமாகும்.

ஏனெனில், இது உடலியல் செயல்முறைகளுக்கு உதவுவதாக இருப்பினும், அதிகப்படியான உப்பு உட்கொள்ளல் உடல் ஆரோக்கியத்தைப் பாதிக்கலாம். அதிகப்படியான உப்பு உட்கொள்ளல் ஆனது, உயர் இரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. இது இறுதியில் இதய நோய், பக்கவாதம் மற்றும் சிறுநீரக பிரச்சனை போன்ற அபாயங்களை அதிகரிக்கிறது. குறிப்பாக தொகுக்கப்பட்ட மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் அதிகளவிலான உப்பு நிறைந்துள்ளது. எனவே இதைத் தவிர்க்க வேண்டியது அவசியமாகும். இதில் உப்பு உட்கொள்ளைக் குறைப்பதால் என்னென்ன ஆரோக்கிய நன்மைகளைப் பெறலாம் என்பது குறித்து காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: அதிக உப்பு சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

உப்பு உட்கொள்ளலைக் குறைப்பதால் கிடைக்கும் நன்மைகள்

ஆரோக்கியமான நீரேற்றத்திற்கு

அதிக உப்பு உட்கொள்வதன் காரணமாக உடலின் இயற்கையான நீரேற்றத்தின் சமநிலை சீர்குலைக்கப்படுகிறது. இது கவனிக்கப்படாத போது அல்லது சரியாக நிர்வகிக்கப்படாத போது நீரிழப்புக்கு வழிவகுக்கிறது. எனவே உடலில் திரவ சமநிலையை பராமரிக்க சோடியம் உட்கொள்ளலைக் குறைக்க வேண்டும். இதன் மூலம், நீரேற்றமாக வைப்பதுடன், உடலின் ஒட்டுமொத்த செயல்பாடுகளை மேம்படுத்தலாம்.

இரத்த அழுத்தத்தைக் குறைக்க

உப்பு உட்கொள்ளலைக் குறைப்பதன் மூலம் இரத்த அழுத்தத்தைக் கணிசமாகக் குறைக்கலாம். இது குறிப்பாக உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். சோடியம் உட்கொள்ளல் உடலில் தண்ணீரைத் தக்கவைத்து, இரத்த அளவை அதிகரிக்கிறது. இதன் காரணமாக இரத்த நாளங்களின் சுவர்களில் கூடுதல் அழுத்தத்தை சேர்க்கிறது. எனவே உப்பு உட்கொள்ளலைக் குறைக்கும் போது, உடல் இந்த அதிகப்படியான தண்ணீரை வெளியிடுகிறது. இதன் மூலம் இரத்த அழுத்தத்தைக் குறைக்கலாம். மேலும் பக்கவாதம், மாரடைப்பு மற்றும் சிறுநீரக நோய் அபாயத்தைக் குறைக்கிறது.

சிறுநீரக செயல்பாட்டிற்கு

சிறுநீரகங்கள் சோடியம் சமநிலையை ஒழுங்குபடுத்துவதற்கு உதவுகிறது. இந்நிலையில் அதிக உப்பு உட்கொள்வது சிறுநீரகங்கள் இரத்தத்தில் இருந்து அதை வடிகட்ட கடினமாக உழைக்கலாம். இது காலப்போக்கில் சிறுநீரகங்களின் சாத்தியமான சேதத்திற்கு வழிவகுக்கிறது. உப்பு உட்கொள்ளலைக் குறைப்பதன் மூலம் சிறுநீரகத்தின் பணிச்சுமையைக் குறைக்கிறது. இதன் மூலம் சோடியம் நுகர்வுடன் தொடர்புடைய சிறுநீரக கற்கள் மற்றும் நாள்பட்ட சிறுநீரக நோய் போன்ற சிக்கல்களைத் தடுக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: இந்துப்பு Vs கடல் உப்பு: எது ஆரோக்கியத்திற்கு நல்லது?

இதய ஆரோக்கியம்

அதிகம் சோடியம் நிறைந்த உணவுகளால், இதய நோய்களுக்கு முக்கிய காரணமாக அமைகிறது. இந்நிலையில், உப்பு உட்கொள்ளலைக் குறைப்பதன் மூலம் இதயம் மற்றும் தமனிகளின் அழுத்தத்தைக் குறைக்கலாம். மேலும், இதன் மூலம் இதய செயலிழப்பு மற்றும் கரோனரி தமனி நோய் போன்ற நிலைமைகளைத் தடுக்கலாம். குறைந்த சோடியம் அளவுகள் இரத்த நாளங்களின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது. இதன் மூலம் தமனிகள் நெகிழ்வாகவும், சேதமடையும் வாய்ப்பு குறைவாகவும் இருக்கும்.

எலும்பு ஆரோக்கியத்திற்கு

அதிகளவிலான உப்பு உட்கொள்ளல் காரணமாக சிறுநீரின் மூலம் கால்சியம் இழப்பு அதிகரிக்கலாம். இதன் காரணமாக, காலப்போக்கில் எலும்புகள் பலவீனமடையலாம். குறிப்பாக, ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தில் உள்ளவர்களுக்கு அதிக சோடியம் காரணமாக, எலும்பு ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். இந்நிலையில் அவர்கள் உப்பு உட்கொள்ளலைக் குறைப்பது கால்சியம் வெளியேற்றத்தைக் குறைக்கிறது. இதன் மூலம் எலும்பு முறிவு அபாயம் தடுக்கப்படுவதுடன், வலுவான எலும்புகளுக்கு வழிவகுக்கிறது.

சோடியம் உட்கொள்ளலைக் குறைப்பதன் மூலம் இது போன்ற பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைப் பெறலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Kal Uppu Benefits: கல் உப்பில் உள்ள அற்புத நன்மைகள் இத்தனையா.? கண்டிப்பா தெரிஞ்சிக்கணும்.!

Image Source: Freepik

Read Next

Peanut Ladoo: வெறும் 3 பொருள் இருந்தால் போதும் சுவையான வேர்க்கடலை லட்டு செய்யலாம்!

Disclaimer