$
Ways To Reduce Salt From Daily Meals: அன்றாட உணவில் சுவைக்காக உப்பு சேர்ப்பது இன்றியமையாத ஒன்றாகக் கருதப்படுகிறது. ஆனால், இதன் கூடுதல் அல்லது குறைவான சேர்க்கையானது உணவின் சுவையை ஒட்டுமொத்தமாக மாற்றக் கூடியதாக மாற்றுகிறது. அதிலும் பெரும்பாலான வீடுகளில் உணவில் கூடுதல் உப்பைத் தூவுவதை ஒரு பொதுவான நடைமுறையாகும். ஆனால், இது அதிகப்படியான உப்பு உட்கொள்ளலைத் தூண்டுகிறது. உண்மையில் அதிகப்படியான உப்பை உண்பதால் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கலாம்.
அதிகப்படியான உப்பின் விளைவுகள்
ஆம். அதிகப்படியான உப்பு உட்கொள்ளல் உயர் இரத்த அழுத்தம், பக்கவாதம் மற்றும் இதய நோய் உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். அதாவது அதிகளவு சோடியம் உட்கொள்ளல் உடலில் திரவம் தேக்கம், வீக்கம் போன்றவற்றை ஏற்படுத்தலாம். மேலும் இது நீண்ட காலத்திற்கு சிறுநீரின் மூலம் கால்சியம் இழப்பை ஏற்படுத்துவது எலும்பு ஆரோக்கியத்தையும் பாதிக்கலாம். எனவே உணவிலிருந்து உப்பு உட்கொள்ளைக் குறைக்க வேண்டும். இதில் தினசரி உணவிலிருந்து உப்பின் அளவைக் குறைப்பதற்கான வழிகள் சிலவற்றைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: அதிக உப்பு சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?
உணவிலிருந்து உப்பு மற்றும் அதன் உட்கொள்ளலைக் குறைக்கும் வழிகள்
ஆரோக்கியமான மாற்றுகள்
தினசரி உணவிலிருந்து உப்பைக் குறைக்க உதவும் ஒரு எளிய வழியாக அமைவது ஆரோக்கியமான மாற்றுகளைத் தேர்வு செய்வதாகும். அதன் படி, வழக்கமான உப்பு உட்கொள்ளலுக்குப் பதிலாக ஆரோக்கியமான மாற்றுகளாக கல் உப்பு அல்லது ஹிமாலயன் இளஞ்சிவப்பு உப்பு போன்றவற்றைப் பயன்படுத்தலாம். இது ஆரோக்கியமான மாற்றுகளாக அமைகிறது.

மூலிகைகள், மசாலாப் பொருள்கள் பயன்பாடு
உணவில் சுவையைச் சேர்க்க உப்புக்கு சிறந்த மாற்றாக மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்களை உணவில் சேர்க்கலாம். அதன் படி, துளசி, தைம், ரோஸ்மேரி மற்றும் கொத்தமல்லி பல்வேறு மூலிகைகளைப் பயன்படுத்தலாம். மேலும் மிளகு, மஞ்சள், இலவங்கப்பட்டை மற்றும் சீரகம் போன்ற மசாலா பொருள்களைப் பரிசோதனை செய்யலாம். இந்த பொருள்கள் தங்கள் உணவுகளின் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், கூடுதல் ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது.
உருளைக்கிழங்கு சேர்ப்பது
சூப்கள், கறிகள் மற்றும் குழம்புகள் போன்றவற்றிலிருந்து உப்பைக் குறைப்பதற்கு எளிதான வழியாக அமைவது உருளைக்கிழங்கு சேர்ப்பதாகும். கறியில் உருளைக்கிழங்கு சேர்ப்பது உப்பைக் குறைக்க உதவுகிறது. உருளைக்கிழங்கு சேர்ப்பது இயற்கையாகவே அதிகப்படியான உப்பை உறிஞ்சி சுவையை சமநிலைப்படுத்த உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Kal Uppu Benefits: கல் உப்பில் உள்ள அற்புத நன்மைகள் இத்தனையா.? கண்டிப்பா தெரிஞ்சிக்கணும்.!
புளிப்புப் பொருள்களைச் சேர்ப்பது
உணவுகளில் உள்ள சுவைகளைச் சமன்படுத்த வினிகர், சிட்ரஸ் பழம் மற்றும் எலுமிச்சைச் சாறு போன்ற அமிலப் பொருட்களைச் சேர்க்கலாம். இது உப்பின் தேவையைக் குறைக்கிறது. கூடுதல் சோடியம் சேர்க்காமல், சுவையை அதிகரிக்க இறைச்சிகள், சாலட்கள், சாஸ்கள் போன்றவற்றில் வினிகர் அல்லது எலுமிச்சைச் சாற்றைச் சேர்க்க வேண்டும்.
புதிய பொருட்களைத் தேர்ந்தெடுப்பது
பொதுவாக, பதப்படுத்தப்பட்ட மற்றும் தொகுக்கப்பட்ட உணவுகளில் சோடியம் மற்றும் இன்னும் பிற சேர்க்கைகள் நிறைந்திருக்கிறது. எனவே இந்த வகை உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. மேலும் தினசரி உணவில் உப்பு உள்ளடக்கத்தை குறைக்க பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

தயிர் சேர்ப்பது
உணவிலிருந்து அதிகப்படியான உப்பின் அளவைக் குறைக்க மற்றொரு சிறந்த வழியாக தயிர் அமைகிறது. இது உணவில் சுவை மற்றும் அமைப்பை மாற்றாமல், உப்பை உறிஞ்சுவதற்கு உதவுகிறது.
இந்த வழிகளைத் தேர்வு செய்வதன் மூலம் உணவில் சேர்க்கும் உப்பின் அளவைக் குறைக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Mutton Cutlet Recipe: பக்ரீத் ஸ்பெஷல் சுவையான மற்றும் மொறுமொறுப்பான மட்டன் கட்லெட்!
Image Source: Freepik