Doctor Verified

நல்ல உணவு தான்.. ஆனால் எப்படி சாப்பிட்டா நல்லது தெரியுமா.? மருத்துவர் விளக்கம்..

ஆரோக்கிய உணவுகளை தவறான முறையில் சாப்பிடினால் முழு நன்மை கிடையாது என்கிறார் டாக்டர் ஐஸ்வர்யா செல்வராஜ். குக்கும்பர், சியா விதைகள், தக்காளி, கீரை, அவகேடோ, மஞ்சள் பால் போன்றவற்றை எந்த முறையில் சாப்பிட வேண்டும் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.
  • SHARE
  • FOLLOW
நல்ல உணவு தான்.. ஆனால் எப்படி சாப்பிட்டா நல்லது தெரியுமா.? மருத்துவர் விளக்கம்..


ஆரோக்கியமான உணவுகள் சக்தி வாய்ந்தவை.. ஆனால் சரியான முறையில் உட்கொள்ளும்போது மட்டுமே.. என்று வலியுறுத்துகிறார் டாக்டர் ஐஸ்வர்யா செல்வராஜ். பலர் தினசரி ஆரோக்கிய உணவுகளை எடுத்துக்கொள்வதற்குப் பழகியிருக்கிறார்கள். ஆனால், அவற்றை தவறான முறையில் சாப்பிடுவதால் அதன் முழு நன்மைகள் உடலுக்கு சேராமல் போகிறது. அதனால், சில உணவுகளை சரியான முறையில் சாப்பிட வேண்டும் என்றார் அவர்.

எந்த உணவை எப்படி சாப்பிடனும்.?

வெள்ளரி (Cucumber)

பொதுவாக வெள்ளரி தோல் சீவி சாப்பிடுவோம். ஆனால், தோலை சீவாமல் சாப்பிடும்போது Collagen உற்பத்தி அதிகரித்து, தோல் ஆரோக்கியம் மற்றும் எலும்பு பலம் மேம்படும்.

சியா விதைகள் / சப்ஜா விதைகள் (Chia Seeds / Sabja Seeds)

சியா விதைகள் Fiber அதிகம் கொண்டவை. ஆனால், அவற்றை 15 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைத்த பிறகே சாப்பிட வேண்டும். இல்லையெனில் அது கழுத்தில் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்படுத்தும் அபாயம் உண்டு.

தக்காளி (Tomato)

பச்சையாக சாப்பிடுவதற்கு பதிலாக, தக்காளியை லேசாக வேக வைத்து சாப்பிடுவது சிறந்தது. இதனால் Lycopene என்னும் சக்திவாய்ந்த Anti-oxidant உடலில் எளிதில் உறிஞ்சப்படும். இது உங்களுக்கு “Internal SPF” ஆக செயல்பட்டு, தோல் சூரிய கதிர்வீச்சிலிருந்து பாதுகாப்பு அளிக்கும்.

இந்த பதிவும் உதவலாம்: ஓட்ஸ் முதல்.. வாழைப்பூ வரை.. குடல் ஆரோக்கியத்திற்கான நார்ச்சத்து நிறைந்த உணவுகள் இங்கே.. டாக்டர் பால் பரிந்துரை..

கீரை (Spinach)

கீரையை நேரடியாகக் காய்ச்சி சாப்பிடுவதை விட, Steam செய்து சாப்பிட்டால் அதில் உள்ள விடாமின்கள், கனிமச்சத்துகள், நார்ச்சத்து அனைத்தும் பாதுகாக்கப்படும்.

அவகேடோ (Avocado)

அவகேடோவை over-blend செய்யாமல், light blending செய்து சாப்பிட வேண்டும். இதனால் அதில் உள்ள healthy fats உடலில் இயல்பாக உறிஞ்சப்பட்டு, மன அழுத்தம் குறைவு, மூளை ஆரோக்கியம், சரும பளபளப்பு போன்ற பல நன்மைகள் கிடைக்கும்.

மஞ்சள் பால் (Turmeric Milk)

இரவு படுக்கும் முன் Turmeric milk சாப்பிடுவோர் அதிகம். ஆனால், அதை Dairy milk வைத்து சாப்பிடக்கூடாது. பால் inflammatory தன்மை கொண்டது. குறிப்பாக இரவில் குடிப்பது skin inflammation, pimples போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதற்குப் பதிலாக non-dairy milk (ஆல்மண்ட் மில்க், ஓட்ஸ் மில்க்) பயன்படுத்துவது ஆரோக்கியத்திற்கு சிறந்தது.

இறுதியாக..

“நல்ல உணவுகள் எல்லாம் ஆரோக்கியம் தரும்” என்பது பாதி உண்மை. ஆனால், அவற்றை சரியான முறையில் சாப்பிடும் பழக்கம் தான் உண்மையான ஆரோக்கியத்தை அளிக்கும். எனவே இந்த சிறிய மாற்றங்கள் உங்கள் உடல், சருமம், மன ஆரோக்கியத்திற்கு மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும்.

Disclaimer: இந்தக் கட்டுரை டாக்டர் ஐஸ்வர்யா செல்வராஜ் அவர்களின் ஆலோசனையின் அடிப்படையில் எழுதப்பட்டது. இதில் கூறப்பட்டவை பொதுவான தகவல்களுக்காக மட்டுமே. உடல் நல பிரச்சனைகள் இருந்தால், மருத்துவரின் தனிப்பட்ட ஆலோசனையை பெறுவது அவசியம்.

Read Next

ஓட்ஸ் முதல்.. வாழைப்பூ வரை.. குடல் ஆரோக்கியத்திற்கான நார்ச்சத்து நிறைந்த உணவுகள் இங்கே.. டாக்டர் பால் பரிந்துரை..

Disclaimer

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

  • Sep 16, 2025 22:50 IST

    Published By : ஐஸ்வர்யா குருமூர்த்தி

குறிச்சொற்கள்