Expert

Dalia For Diabetes: சர்க்கரை நோயாளிகளுக்கு உடைத்த கோதுமை தரும் நன்மைகள். இத கட்டாயம் சாப்பிடணும்

  • SHARE
  • FOLLOW
Dalia For Diabetes: சர்க்கரை நோயாளிகளுக்கு உடைத்த கோதுமை தரும் நன்மைகள். இத கட்டாயம் சாப்பிடணும்

உண்மையில் கஞ்சி ஒரு சத்தான உணவாகும். இதில் பல்வேறு வைட்டமின்கள் மற்றும் புரதங்கள் நிறைந்துள்ளன. மேலும் கஞ்சியில் நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், மக்னீசியம், தயாமின், பொட்டாசியம், கார்போஹைட்ரேட்டுகள், தாதுக்கள், துத்தநாகம் மற்றும் இரும்புச்சத்து போன்றவை நிறைந்துள்ளன. இது இன்சுலின் அதிகரிப்பதைத் தடுத்து, இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. நீரிழிவு நோய் உள்ளவர்கள் கஞ்சி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து குர்கானில் உள்ள டயட் கிளினிக் மற்றும் டாக்டர் ஹப் கிளினிக்கின் டயட்டீஷியன் அர்ச்சனா பத்ரா அவர்கள் விரிவாக கூறுகிறார்.

நீரிழிவு நோய்க்கு டாலியா தரும் நன்மைகள்

நீரிழிவு நோயைக் குணப்படுத்த உடைத்த கோதுமை எனப்படும் டாலியா சாப்பிடுவதால் கிடைக்கும் பல்வேறு நன்மைகளைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Fruits for diabetics: சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற பழங்கள் என்னென்ன?

வயிற்று பசியை குறைக்க

மீண்டும் மீண்டும் பசியை உணரும் போது, கஞ்சி சாப்பிடலாம். ஏனெனில் ஓட்மீலில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது வயிறு நிரம்பிய உணர்வை ஏற்படுத்துகிறது. இது உடல் எடையை அதிகரிக்காது. மாலை நேர சிற்றுண்டியாகவும் கஞ்சியை எடுத்துக் கொள்ளலாம்.

டைப் 2 நீரிழிவு நோய்க்கு

ஓட்ஸ் மற்றும் மற்ற முழு தானியங்களில் மெக்னீசியம் நிறைந்துள்ளது. உடலின் முக்கியமான நொதிகளை உருவாக்க மெக்னீசியம் அவசியமாகும். குறிப்பாக இன்சுலின் உற்பத்திக்கு உதவுகிறது. இவை இரத்தத்திற்கு தேவையான குளுக்கோஸை வழங்குகிறது. எனவே தினமும் கஞ்சியை உட்கொள்வது, ப்ரீ டயாபடிஸ் அல்லது டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் இல்லை. இந்த கஞ்சியை காலை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.

சருமத்திற்கு டாலியா தரும் நன்மைகள்

கஞ்சி சாப்பிடுவது சருமத்தை நன்றாக வைத்திருக்க உதவும். இதற்கு, இதில் உள்ள மாங்கனீசு, துத்தநாகம், வைட்டமின்கள், தாதுக்கள் போன்றவையே ஆகும். இது சருமத்தை பளபளப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Hyperglycemia Symptoms: ஹைப்பர் கிளைசீமியாவின் அறிகுறிகளும், சிகிச்சை முறைகளும்

உடல் எடையைக் குறைக்க

நீரிழிவு நோயாளிகள் உடல் எடை அதிகரிப்பது குறித்து கவலைப்படுகிறார்கள். உடல் எடையைக் குறைப்பதுடன், நீரிழிவு நோய் பிரச்சனையைத் தவிர்க்க காலை அல்லது இரவு உணவாக கஞ்சியை எடுத்துக் கொள்ளலாம். கஞ்சியில் ஏராளமான நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது உடல் எடையைக் கட்டுக்குள் வைக்க உதவும். மேலும் இது எளிதில் செரிமானம் அடைவதால் அஜீரணம், வயிற்று வலி பிரச்சனைகளிலிருந்து விடுவிக்கிறது.

குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ்

கிளைசெமிக் இன்டெக்ஸ் என்பது, உணவுப் பொருள்களில் உள்ள சர்க்கரையைக் குறிப்பதாகும். எனவே இரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்த, கிளைசெமிக் குறியீடுகள் குறைவாக உள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும். இது சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும். கஞ்சியில் கிளைசெமிக் இன்டெக்ஸ் மதிப்பெண் குறைவாக உள்ளது. எனவே, நீரிழிவு நோயாளிகள் எந்த பயமுமின்றி கஞ்சியை உட்கொள்ளலாம்.

நீரிழிவு நோயாளிகளுக்குக் கஞ்சி சிறந்த நன்மைகளைத் தரும். அதே சமயம், இனிப்பு கஞ்சிகளைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில், இனிப்பு கஞ்சிகள் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும். இதற்கு பதிலாக உப்பு கஞ்சியை சாப்பிடலாம். உப்பு கஞ்சி செய்யும் போது உங்களுக்குப் பிடித்த காய்கறிகள், சிறிது இலவங்கப்பட்ட தூள் போன்றவை சேர்ப்பது கூடுதல் சுவையுடன், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Diabetes Green Juice: நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும் ஆரோக்கியமான பச்சைச் சாறுகள்

Image Source: Freepik

Read Next

Amla Salad: நெல்லிக்காய் சாலட் செய்முறையும், ஆரோக்கிய நன்மைகளும்!

Disclaimer

குறிச்சொற்கள்