Pickles during winter: இந்த வின்டரில் ஊறுகாய் சாப்பிடுவது எவ்வளவு நல்லது தெரியுமா?

Is it good to eat pickles in the winter: குளிர்காலத்தில் உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பது அவசியமாகும். அந்த வகையில், ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவு வகையான ஊறுகாயை உட்கொள்வது உடலுக்கு மிகுந்த நன்மை பயக்கும். இதில் குளிர்ந்த காலநிலையில் ஊறுகாய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து காணலாம்.
  • SHARE
  • FOLLOW
Pickles  during winter: இந்த வின்டரில் ஊறுகாய் சாப்பிடுவது எவ்வளவு நல்லது தெரியுமா?

Benefits of pickles during winter: இன்று பெரும்பாலானோர் ஊறுகாய் இருந்தால் தான் சோறு இறங்கும் என்று சொல்வார்கள். பொதுவாக ஊறுகாய் ஆனது உப்பு, மிளகாய்த்தூள், எண்ணெய் போன்றவற்றைச் சேர்த்துத் தயாரிக்கப்படும் சுவையான உணவுப்பொருளாகும். எனவே தான் உணவுப் பிரியர்களின் பிரதானப் பட்டியலில் ஊறுகாயும் இடம் பெறுகிறது. ஆனால், நம்மில் பலர் ஊறுகாய் நம் ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்கும் என கூறுவர். உண்மையில், ஊறுகாய் உட்கொள்வது நாவிற்கு சுவையைத் தருவது மட்டுமல்லாமல், உடல் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும்.

அவ்வாறு கேரட், தக்காளி, மாம்பழம், எலுமிச்சை மற்றும் இன்னும் பல்வேறு பொருள்களைக் கொண்டு ஊறுகாயைத் தயார் செய்யலாம். இது நடைமுறையில் அனைத்து இந்திய உணவுகளிலும் நன்றாக வேலை செய்யும் ஒரு பக்க உணவாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, குளிர்ந்த காலநிலையில் ஊறுகாய் ஒரு நல்ல தேர்வாக அமைகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம். உண்மையில் குளிர்காலத்தில் ஊறுகாய் உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மை பயக்கும். இதில் குளிர்ந்த காலநிலையில் ஊறுகாய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் சிலவற்றைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Raw Mango Pickle: மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்பெஷல் பச்சை மாங்காய் ஊறுகாய் ரெசிபி!

குளிர்காலத்தில் ஊறுகாய் சாப்பிடுவதன் நன்மைகள்

உடல் எடையிழப்பை ஊக்குவிக்க

மோசமான உணவு பழக்கவழக்கங்கள் மற்றும் மன அழுத்தம் காரணமாக பலரும் உடல் ஆரோக்கியத்தை புறக்கணித்து, உடல் எடை அதிகரிப்பு பிரச்சனையைச் சந்திக்கின்றனர். குறிப்பாக, குளிர்காலத்தில் உடல் பருமன் அதிகரிப்பது வழக்கமான ஒன்றாகும். இந்நிலையில் ஊறுகாயை சிறிதளவு சாப்பிட்டால் உடல் எடையைக் குறைக்கலாம் எனக் கூறப்படுகிறது. ஏனெனில், ஊறுகாய் உட்கொள்வது பசியைக் கட்டுப்படுத்தி, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

எனினும், கடைகளில் ஊறுகாயை வாங்குவதை விட, வீட்டிலேயே ஊறுகாய் செய்து, சாதம், சப்பாத்தி அல்லது பராத்தா போன்ற பிற உணவுகளுடன் சேர்த்து சாப்பிடலாம். இது மிகவும் புத்துணர்ச்சியுடனும், ஆரோக்கியமாகவும் வைக்க உதவுகிறது.

கொலஸ்ட்ராலைக் குறைக்க

ஊறுகாய் வகையயான வெள்ளரி ஊறுகாய் நம் உடலில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது. இது கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்தவும், உடல் ஆரோக்கியத்தை பராமரிக்கவும் கேரட், வெள்ளரிக்காய், காலிஃபிளவர் போன்ற காய்கறிகளைப் பயன்படுத்தி, புதிய ஊறுகாய்களைத் தயார் செய்யலாம். நாம் சாதாரண உணவுடன் புளித்த ஊறுகாயை உட்கொள்ளும்போது நமது உடல் சரியாக வேலை செய்கிறது. மேலும், ஊறுகாயில் உள்ள பீட்டா கரோட்டின் சில வகையான இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.

அல்சரைக் குறைப்பதற்கு

மோசமான உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் திசுக்களுடன் அமிலம் தொடர்புகொள்வதால் அல்சர் ஏற்படுகிறது. அல்சர் புண்கள் வலிமிகுந்தவையாகும். இரைப்பை புண்கள் மற்றும் அதி அமிலத்தன்மை இரண்டுமே சளி சவ்வுகளின் மெலிவினால் ஏற்படக்கூடியதாகும். மோசமான உணவுப் பழக்கம் உடல் ஆரோக்கியத்தை நிரந்தரமாக பாதிக்கும் என்பதால், ஒவ்வொரு நாளும் என்ன சாப்பிடுகிறோம் என்பதைக் கவனிக்க வேண்டும். இந்நிலையில் நோய்வாய்ப்படாமல் இருக்க ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Spicy Milagai chutney: கார சாரமான ஆந்திரா ஸ்டைல் காய்ந்த மிளகாய் சட்னி செய்முறை!

குடல் ஆரோக்கியத்திற்கு

ஊறுகாய் குடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். நொதித்தல் செயல்முறை ஊறுகாயை ஓரளவு செரிமானம் அடையவைத்து, அதிக ஊட்டச்சத்துக்களை வெளியிடுகிறது. இது உடல் குறைந்த உடல் உழைப்புடன் அதிக ஊட்டச்சத்தை உறிஞ்சுவதற்கு உதவுகிறது. மேலும் குடலுக்கு மிகவும் தேவையான தளர்வை அளிக்கிறது. ஊறுகாயில் சில நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை ஃப்ரீபயாடிக்குகளாக செயல்பட்டு, குடல் பாக்டீரியாக்களுக்கான உணவு மற்றும் ஆரோக்கியமான குடல் தாவரங்களுக்கு உணவளிக்கிறது.

தசை வலியைக் குறைப்பதற்கு

தசை பிடிப்புகள் ஏற்படும் போது வலி மற்றும் உடல் செயல்பாடுகளை சமாளிப்பது சில சமயங்களில் கடினமாக இருக்கலாம். ஏனெனில், இவை பிடிவாதமாக இருக்கலாம். பொதுவாக கடினமான தசைகள் நாம் நகரக்கூடிய திறனைத் தடுக்கிறது. மேலும் இது தசைகள் திறம்பட செயல்பட அனுமதிக்காது. தசை வலியைக் குறைக்க மதிய உணவோடு ஒரு ஸ்பூன் ஊறுகாயை சாப்பிட முயற்சிக்கலாம்.

புற்றுநோயை எதிர்த்துப் போராட

காய்கறிகளில் கரோட்டின் நிறைந்துள்ளது. இது புற்றுநோயை எதிர்த்துப் போராட உதவுகிறது. எனவே உடலுக்குத் தேவையான சத்துக்களைப் பெறுவதற்கு, அன்றாட உணவை ஒரு ஸ்பூன் ஊறுகாயுடன் சேர்த்து எடுத்துக் கொள்ளலாம். அதே சமயம், வீட்டில் தயார் செய்யப்பட்ட ஆர்கானிக் ஊறுகாய்களை முயற்சிப்பது மிகவும் நன்மை பயக்கும். ஒரு சில பொருள்களைக் கொண்டு ஊறுகாயைத் தயார் செய்வது எளிதானது.

இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil FacebookOnlymyhealth Tamil Instagram

இந்த பதிவும் உதவலாம்: Amla pickle benefits: இந்த குளிருல உடல் சூடாக மட்டுமல்ல, ஹெல்த்தியாவும் இருக்க இந்த ஊறுகாயை சாப்பிடுங்க

Image Source: Freepik

Read Next

Kidney Stones: சிறுநீரக கற்களால் முதுகு வலி ஏற்படுமா? மருத்துவர் கூறுவது என்ன?

Disclaimer

குறிச்சொற்கள்