Health Benefits Of Ragi: முந்தைய காலத்தில் நன்கு அறியப்பட்ட ஆரோக்கியமான தானியங்களில் ஒன்றான ராகி, இன்று பலரின் உணவுப் பழக்க வழக்கங்களிலிருந்து நீங்கி விட்டது. இது மனித உடலுக்கு ஆரோக்கியத்தைத் தருவதுடன், பல்வேறு வகையானநோய்களை நீக்க உதவுகிறது. உடல் ஆரோக்கியம் மட்டுமல்லாமல், சரும ஆரோக்கியத்திற்கும் நன்மை தருகிறது.
ராகியில் உள்ள ஊட்டச்சத்துகள்
மற்ற தானியங்களில் இருப்பதை விட, ராகியில் 5-30 மடங்கு அதிகமாகவே கால்சியம் நிறைந்துள்ளது. இவை எலும்பு வலிமைக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் இதில் பொட்டாசியம், பாஸ்பரஸ், இரும்பு போன்ற தாதுப்பொருள்களும் அதிகளவில் உள்ளது.
இந்த பதிவும் உதவலாம்: Dry Fruits Tips: உலர் பழங்களை இப்படி சாப்பிட்டால் அதீத நன்மைகள்
ராகி தரும் அற்புத நன்மைகள்
உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கும் தானியமான ராகி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் சிலவற்றைக் காணலாம்.
இதய நோய் தடுப்பாக
சிறு தானியமான ராகி, உடலில் உள்ள டிரை கிளிசரைடுகளின் செறிவைக் குறைக்கிறது. மேலும், எல்டிஎல் என்ற கெட்ட கொலஸ்ட்ரால் அளவையும், அதன் ஆக்ஸிஜனேற்றத்தையும் தடுக்கிறது. ஏனெனில், கெட்ட கொழுப்பு ஆக்ஸிஜனேற்றப்படும் போது தொந்தரவை ஏற்படுத்தும். குறிப்பாக ஆக்ஸிஜனேற்றப்பட்ட எல்டிஎல், தமனிகளை வீக்கப்படுத்துகிறது. இதைத் தவிர்க்க ராகி உதவுகிறது. இதன் மூலம் மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்கலாம்.
தாதுக்கள் நிறைந்த ராகி
பல்வேறு வகையான தாதுப்பொருள்கள் நிறைந்த தானியங்களில் ராகியும் ஒன்று. இதில் எலும்புகளை வலுவாக்க உதவும் கால்சியம் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. மேலும், இதில் உள்ள பாஸ்பரஸ், இரும்பு, பொட்டாசியம் உள்ளிட்ட தாதுக்களும் உடல் ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன. இது குறிப்பாக ஆஸ்டியோபோரோசிஸ் அல்லது குறைவான ஹீமோகுளோபின் கொண்டவர்களுக்கு மாத்திரைக்கு பதிலாக, சிறந்த மருந்தாக இந்த சிறுதானிய உணவு பயன்படுத்தப்படுகிறது. மேலும், இது ஊட்டச்சத்து மிக்க சிறந்த காலை உணவாகும்.
இந்த பதிவும் உதவலாம்: Platelet Count Increase Food: இரத்த பிளேட்லெட் எண்ணிக்கையை இயற்கையாக எப்படி அதிகரிப்பது?
நுண்ணுயிர் எதிர்ப்புத் தன்மை
ராகியில் நுண்ணுயிர் எதிர்ப்புத் தன்மைகள் நிறைந்துள்ளன. இவை உணவை கெட்டுப்போகச் செய்யும் பாக்டீரியாவான பேசிலஸ் செரஸ், சருமத்தில் அரிப்பை ஏற்படுத்தும் ஸ்டெபிலோகாக்கஸ் ஆரிஸ் போன்ற பல்வேறு வகையான பாக்டீரியாக்களை எதிர்த்து செயலாற்றுகிறது.
இளமையாக வைத்திருக்க ராகி
சிறுதானியங்களான ராகி, வரகு போன்றவை முதுமையைத் தடுக்க உதவும் ஃபினாலிக் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகளைக் கொண்டுள்ளது. மேலும் இதில் கொலாஜன் கிராஸ்-லிங்கிங் என்ற மூலக்கூறு குறுக்கு இணைவைத் தடுக்கும் பிரத்யேக ஆற்றல் உள்ளன. திசுக்களுக்கு அவற்றின் நெகிழ்ச்சித் தன்மையை அளிக்க கொலாஜன் உதவுகிறது. கொலாஜன் கிராஸ்-லிங்கிங் என்பது தசைநார்கள், தோல் மற்றும் இரத்த நாளங்களில் கொலாஜன் மூலக்கூறுகளுக்கு இடையில் குறுக்கு இணைப்பு உருவாகும் செயல்முறையாகும்.
புற்றுநோயை எதிர்க்க ராகி
ராகி ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் நிறைந்த சிறந்த தானியமாகும். ராகியின் மேற்புறத் தோலில் உள்ள ஃபினாலிக் அமிலங்கள், ஃபிளவனாய்டுகள் மற்றும் டான்னீஸ் போன்றவை சிறப்பான ஆன்டி ஆக்ஸிடன்ட் மூலக்கூறுகளைக் கொண்டுள்ளன. எசோஃஃபகீல் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு ஆனது, கோதுமை, மைதா உணவுகள் எடுத்துக் கொள்பவர்களைக் காட்டிலும், சிறுதானிய உணவை உட்கொள்பவர்களுக்குக் குறைவாகவே உள்ளது.
இந்த பதிவும் உதவலாம்: Benefits of Banana Milkshake: அருமையான நன்மைகளைத் தரும் வாழைப்பழ மில்க் ஷேக்!
நீரிழிவைக் கட்டுப்படுத்த உதவும் ராகி
இன்று பொதுவான நோயாக பெரும்பாலானோர் பாதிக்கப்படும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த ராகி உதவுகிறது. இதில் கார்போஹைட்ரேடுக்களுடன், அதிகளவு நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் இதில் நோயை எதிர்த்துப் போராடும் திறனுடன் முக்கிய காரணிகளைக் கொண்ட தாவரங்களில் பெறப்பட்ட ஃபைட்டோகெமிக்கல்ஸ் நிறைந்துள்ளன. இந்த பண்புகள் அனைத்தும் பொதுவாக தானியங்களின் வெளிப்புற தோல்பகுதி அல்லது விதையின் மேற்புறத்தில் உள்ளன. எனவே தானியங்களை தோலுரிக்காமல், முழுமையாக உட்கொள்வதே சிறந்தது. இவ்வாறு எடுத்துக் கொள்வது, உடலில் இரத்த சர்க்கரை அளவு, ஹைப்பர் கிளைசெமிக் மற்றும் ஆக்ஸிடேட்டிவ் அழுத்தம் உள்ளிட்டவற்றைக் கட்டுப்படுத்துகிறது.
புரதச்சத்து மிக்க ராகி
அரிசியுடன் ஒப்பிடுகையில் ராகியின் புரத அளவு அதிகமாக உள்ளது. சிலவகை ராகியின் புரத அளவு, அரிசியை விட இரு மடங்காக இருக்கலாம். முக்கியமாக இந்த புரதம் தனிச்சிறப்பு கொண்டதாகும். மேலும் இதில் டிரைப்டோபன், கிரிஸ்டைன், மெத்யோனைன் போன்றவை குறிப்பிடத்தக்க அளவில் கலவையாக இருப்பதால், இவை மனிதனின் உடல் ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன.
இந்த பதிவும் உதவலாம்: High Cholesterol Foods: உங்களுக்கு அதிக கொலஸ்ட்ரால் இருக்கா? இந்த உணவுகளை எடுக்க வேண்டாம்….
Image Source: Freepik