$
Ajwain Tea Benefits In Summer: கோடைக்காலத்தில் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தரும் விதத்திலேயே உணவுப் பொருள்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் சில கோடைக்கால பிரச்சனைகளைத் தவிர்க்க முடியும். அந்த வகையில் கோடைக்காலத்தில் ஓமம் டீ குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது.
ஆயுர்வேதத்தில் அஜ்வைன் என்பது ஒரு சக்தி வாய்ந்த சுத்தப்படுத்தியாகும். இந்த வலிமையான மசாலா அமிலத்தன்மை, வீக்கம் மற்றும் மலச்சிக்கல் உள்ளிட்டவற்றை நீக்கி குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதன் வழக்கமான நுகர்வு, உடலுக்கு கூடுதல் நன்மைகளைத் தருகிறது. இந்த மசாலா, அதிக கொழுப்பின் அளவைக் குறைப்பதைத் தவிர, பூஞ்சை மற்றும் பாக்டீரியா தொற்றுக்களிலிருந்து எதிர்த்துப் போராட உதவுகிறது. அஜ்வைனில் உள்ள அழற்சி எதிர்ப்பு மற்றும் வேறு சில பண்புகள் வயிற்றுப் புண்களைக் குணப்படுத்தவும், இரத்த அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Blood Sugar Reducing Drinks: வேகமா ஏறும் சுகரை விவேகமா குறைக்கும் டாப் 7 ஆயுர்வேத பானங்கள்
ஓமம் டீ தயாரிப்பது எப்படி
ஒரு டீஸ்பூன் ஓமத்தை ஒரு கப் வெந்நீரில் சேர்த்து காய்ச்சலாம். இதை சில நிமிடங்கள் ஊறவைத்து, பின் இதை வடிகட்டி ஒரு கப்பில் ஊற்றி காலை வெறும் வயிற்றில் குடிக்கலாம். இதில் சுவைக்கேற்ப தேன், எலுமிச்சைச் சாறு போன்றவற்றைச் சேர்த்துக் கொள்வது அதன் சுவையை அதிகரிக்கும். கோடைக்காலத்தில் வெறும் வயிற்றில் அஜ்வைன் டீயை வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்வது சிறந்த பலனளிக்கும்.

வெறும் வயிற்றில் அஜ்வைன் டீயின் நன்மைகள்
கோடைக்காலத்தில் வெறும் வயிற்றில் அஜ்வைன் தேநீர் அருந்துவது உடலுக்கு அற்புதமான நன்மைகளைத் தருகிறது.
செரிமான ஆரோக்கியத்திற்கு
அஜ்வைன் தேநீர் செரிமானத்தை மேம்படுத்துவதற்கும் நல்ல குடல் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. இதில் உள்ள தைமால் மற்றும் இன்னும் சில பொருள்கள், இரைப்பை சாறுகளின் சுரப்பைத் தூண்டுவதற்கு உதவுகிறது. இது செரிமானத்தை மேம்படுத்துவதுடன், அஜீரணம் மற்றும் அமிலத்தன்மை போன்ற அறிகுறிகளை நீக்குகிறது. உணவுக்குப் பின் வயிற்று வலி அல்லது செரிமான பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு அஜ்வைன் டீ சிறந்த தேர்வாகும். இது வயிற்றில் அமைதியான விளைவுகளைத் தருகிறது.
வயிற்று உப்புசம் நீங்க
வயிற்று உப்புசம் மற்றும் வாயுத்தொல்லை நீங்க அஜ்வைன் டீ சிறந்த தேர்வாக அமைகிறது. அஜ்வைனில் உள்ள கார்மினேட்டிவ் குணங்கள், வீக்கம் மற்றும் அதிகப்படியான வாய்வு அறிகுறிகளிலிருந்து விடுவிக்கிறது. மேலும், இது வாயு மற்றும் செரிமான அசௌகரியம் பிரச்சனையைக் குறைக்கிறது. இவை நாள் முழுவதும் அதிக ஆறுதல் மற்றும் நிவாரணத்தைத் தருகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Herbs For Body Heat: உடம்பு ரொம்ப ஹீட்டா இருக்கா? கூலா வெச்சிக்க இந்த ஆயுர்வேத மூலிகைகள் எடுத்துக்கோங்க
நச்சுத்தன்மையை நீக்க
அஜ்வைன் டீ குடிப்பது கூடுதல் நச்சுத் தன்மையை நீக்க உதவுகிறது. இதிலுள்ள டையூரிக் குணங்கள் சிறுநீர் கழிப்பதன் மூலம் கழிவுகள் மற்றும் பிற நச்சுகளை வெளியேற்ற உடலை ஊக்குவிக்கிறது. இந்த தேநீர் அருந்துவது உடலின் இயற்கையான நச்சுத்தன்மை செயல்முறைகளை ஆதரிப்பதாக அமைகிறது. இது பொது ஆரோக்கியம் மற்றும் உடலில் ஆற்றலை அதிகரிக்கவும் உதவுகிறது.

பசியை மேம்படுத்த
அஜ்வைன் டீ பசியைத் தூண்டுவதாக கூறப்படுகிறது. அஜ்வைன் டீ செரிமான அமைப்பைத் தூண்டி, ஆரோக்கியமான பசியை ஊக்குவிக்கிறது. இது ஆற்றலுடன் இருக்கக்கூடிய ஊட்டச்சத்துக்கள் பெறுவதை உறுதி செய்கிறது.
வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்க
அஜ்வைன் தேநீர் உடலில் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. இதனை ஆரோக்கியமான உணவு மற்றும் வழக்கமான உடற்பயிற்சியுடன் இணைப்பது கலோரிகளை மிகவும் திறம்பட எரிக்க உஹவுகிறது. இது எடை இழப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த அஜ்வைன் தேநீரைப் பயன்படுத்துவது ஒட்டுமொத்த வளர்ச்சிதை மாற்ற ஆரோக்கியத்தையும் மேம்படுத்டுகிறது. இந்த ஆரோக்கியமான வளர்ச்சிதை மாற்றம் எடை மேலாண்மைக்கு உதவுகிறது.
கோடைகாலத்தில் காலை எழுந்தவுடன் அஜ்வைன் டீ அருந்துவது நிறைய ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது. இது செரிமானம் மற்றும் பொது ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், உடலை சுத்தப்படுத்தவும் இயற்கையான மற்றும் எளிதான தீர்வைத் தருகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Herbs for Weight Loss: எடையைக் குறைக்கும் சிறந்த ஆயுர்வேத மூலிகைகள்
Image Source: Freepik