Summer Empty Stomach Drinks: சுட்டெரிக்கும் வெயிலில் வெறும் வயிற்றில் ஜில்லுனு இந்த டிரிங்ஸ் குடிங்க

  • SHARE
  • FOLLOW
Summer Empty Stomach Drinks: சுட்டெரிக்கும் வெயிலில் வெறும் வயிற்றில் ஜில்லுனு இந்த டிரிங்ஸ் குடிங்க

கோடைகாலத்தில் வெறும் வயிற்றில் அருந்த வேண்டிய பானங்கள்

கற்றாழை சாறு

பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்ட கற்றாழை சாறு சிறந்த ஆரோக்கியமிக்க பானமாகும். இது செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும் இது உடலிலிருந்து நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. எனவே கற்றாழை சாற்றை வெறும் வயிற்றில் அருந்துவது உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைத்து சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: டன் கணக்குல மீல்மேக்கர் சாப்டுரீங்களா? அப்போ நல்லது கெட்டத தெரிஞ்சிகோங்க பாஸ்…

கிரீன் டீ

உடல் எடை இழப்புக்கு உதவும் கிரீன் டீ காலை நேர சிறந்த பானமாகும். இந்த ஊட்டச்சத்து மிக்க ஆரோக்கியமான பானத்தை அருந்துவது உடலில் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. இது மூளையின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது. இந்த கிரீன் டீயை வெறும் வயிற்றில் அருந்துவது செரிமானத்தை மேம்படுத்துவதுடன், உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.

புதினா டீ

இது ஒரு புத்துணர்ச்சியூட்டும் மற்றும் சிறந்த ஆரோக்கியமான பானமாகும். புதினா டீ அருந்துவது செரிமான ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. மேலும், உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கவும் புதினா டீயை அருந்தலாம். குறிப்பாக, இது ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்த நல்ல மூலமாகும். இதன் மூலம் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கலாம். புதினா டீயை வெறும் வயிற்றில் அருந்துவது குமட்டல், வாந்தி போன்றவற்றைக் குறைக்க உதவுகிறது.

வெள்ளரிக்காய் சாறு

கோடைக்காலத்தில் ஆரோக்கியமிக்க புத்துணர்ச்சியளிக்கக் கூடிய பானங்களில் ஒன்றே வெள்ளரிக்காய் சாறு ஆகும். வெறும் வயிற்றில் வெள்ளரிக்காய் சாறு அருந்துவது மிகுந்த நன்மை பயக்கும். இது உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைப்பதுடன் நீரேற்றம் மிகுந்த காய்கறியாக இருப்பதால், நீரிழப்பைத் தடுக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Soaked Walnuts Benefits: தினமும் ஒரு கைப்பிடி ஊறவைத்த வால்நட் சாப்பிடுவது இவ்வளவு நல்லதா?

எலுமிச்சை சாறு

இந்த சூடான கோடைக்கால நாட்களில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டிய சிறந்த பானம் எலுமிச்சைச் சாறு ஆகும். இது ஒரு இயற்கையான நச்சு நீக்கியாக செயல்படுகிறது. இவை உடலிலிருந்து நச்சுக்களை வெளியேற்ற உதவும் பானமாகும். எலுமிச்சை வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்ததாகும். இது நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும், பல்வேறு நோய்களிலிருந்து பாதுகாக்கவும் உதவுகிறது. மேலும் உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க எலுமிச்சைச் சாறு சிறந்த தேர்வாக அமைகிறது.

தர்பூசணி சாறு

இது ஆரோக்கியமிக்க சுவையான பழச்சாறு ஆகும். குறிப்பாக கோடைக்காலத்தில் வெப்ப சூழ்நிலையில் உடலை குளிர்ச்சியாக வைப்பதுடன், நீரேற்றமாக வைக்க உதவும் சிறந்த பழமாகும். தர்பூசணி பழமும் வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்தது. இது உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவுகிறது. வெறும் வயிற்றில் தர்பூசணி பழத்தின் சாற்றை அருந்துவது செரிமானத்தை மேம்படுத்துகிறது.

தேங்காய் தண்ணீர்

இது கோடைக்காலத்திற்கு சிறந்த ஆரோக்கியமிக்க பானமாகும். இதனை அருந்துவது வெப்பமான கோடைக்காலத்திற்கு ஏற்றதாகும். கூடுதலாக, தேங்காய் தண்ணீரில் குறைந்தளவு கலோரிகள் மற்றும் அதிகளவு பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. எனவே வெறும் வயிற்றில் தேங்காய் தண்ணீர் அருந்துவது வயிற்றில் ஏற்படும் அமிலத்தன்மையைக் குறைக்க உதவுகிறது.

இந்த பானங்கள் அனைத்தும் கோடைக்காலத்தில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டிய பானங்களாகும்.

இந்த பதிவும் உதவலாம்: Seeds During Summer: வெயில்ல உடம்பு சூட்டைத் தணிக்க சாப்பிட வேண்டிய விதைகள்

Image Source: Freepik

Read Next

கொத்து, கொத்தா முடி கொட்டுதா?… இந்த ஊட்டச்சத்து குறைபாடா இருக்கலாம்!

Disclaimer