கோடையில் வெறும் வயிற்றில் அஜ்வைன் டீ குடிப்பதால் என்ன மாற்றங்கள் நடக்கும் தெரியுமா?

  • SHARE
  • FOLLOW
கோடையில் வெறும் வயிற்றில் அஜ்வைன் டீ குடிப்பதால் என்ன மாற்றங்கள் நடக்கும் தெரியுமா?

ஆயுர்வேதத்தில் அஜ்வைன் அல்லது கேரம் விதைகள் ஒரு சக்திவாய்ந்த சுத்தப்படுத்தியாக செயல்படுகிறது. வெறும் வயிற்றில் இந்த டீ அருந்துவது மலச்சிக்கல், அமிலத்தன்மை போன்றவற்றை நீக்கி குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. கோடைகாலத்தில் காலை நேரத்தில் அஜ்வைன் டீ அருந்துவதன் ஆரோக்கிய நன்மைகள் சிலவற்றைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Protein Powder Side Effects: அதிகப்படியான புரோட்டீன் பவுடர் எடுத்துக்கிட்டா இந்த பிரச்சனை எல்லாம் வருமாம்

அஜ்வைன் டீ அருந்துவதன் சாத்தியமான நன்மைகள்

பசி அதிகரிப்பு

சில ஆய்வுகளில் அஜ்வைன் தேநீரை உட்கொள்வது பசியைத் தூண்டுவதாகக் கூறப்படுகிறது. இது கோடை வெப்பத்தில் உடலுக்குத் தேவையான ஆற்றலைத் தருவதற்கு தூண்டுகோலாக விளங்குகிறது.

மேம்படுத்தப்பட்ட செரிமானம்

இந்த அஜ்வைன் தேநீர் அருந்துவது செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், நல்ல குடல் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. இது இரைப்பை சாறுகளின் சுரப்பைத் தூண்டுவதற்குத் தேவையான காரணிகளைக் கொண்டுள்ளது. இவையே செரிமான மேம்பாட்டிற்கும், அமிலத்தன்மை மற்றும் அஜீரணம் போன்ற அறிகுறிகளை நீக்கவும் உதவுகிறது.

நச்சுத்தன்மை நீக்கியாக

காலை நேரத்தில் இந்த டீயை அருந்துவது உடலிலிருந்து நச்சுத்தன்மையை எளிதில் நீக்க உதவுகிறது. இதில் டையூரிக் பண்புகள் நிறைந்துள்ளன. இவை சிறுநீர் கழிப்பதன் மூலம் கழிவுகள் மற்றும் பிற நச்சுகளை வெளியேற்ற உடலை ஊக்குவிக்க உதவுகிறது. இதன் மூலம் உடலின் இயற்கையான நச்சுத்தன்மை செயல்முறைகளை ஆதரிக்க அஜ்வைன் டீ உதவுகிறது. இது உடலில் ஆற்றலை அதிகரிக்கவும் உதவுகிறது.

வளர்ச்சிதை மாற்ற மேம்பாட்டிற்கு

உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்துவதில் அஜ்வைன் டீ முக்கிய பங்கு வகிக்கிறது. வழக்கமான முறையில் இந்த டீயை எடுத்துக் கொள்வதுடன், உடற்பயிற்சிகளை இணைப்பது உடலில் உள்ள கலோரிகளை திறம்பட எரிக்க உதவுகிறது. இது உடல் எடை இழப்புக்கும், உடலின் ஒட்டுமொத்த வளர்ச்சிதை மாற்றத்திற்கும் உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Body Heat Reduce Foods: சுட்டெரிக்கும் வெயிலில் ஜில்லுனு இருக்க இந்த உணவுகளை சாப்பிடுங்க

வயிற்று உப்புசம் நீங்க

அஜ்வைன் டீ அருந்துவது வயிற்று உப்புசம் மற்றும் வாயுத்தொல்லை போன்றவற்றிற்கு சிறந்த தேர்வாகும். இதன் கார்மினேடிவ் குணங்கள், வீக்கம் மற்றும் அதிகப்படியான வாய்வு அறிகுறிகளை விடுவிக்கிறது. மேலும், வாயு மற்றும் செரிமான அசௌகரிய பிரச்சனையையும் குறைக்கிறது. நாள் முழுவதும் நிவாரணத்தையும் வழங்குகிறது.

சுவாச நிவாரணியாக

கோடைகால ஒவ்வாமைகளால் இருமல் மற்றும் நெரிசல் போன்ற பிரச்சனைகள் அதிகமாகலாம் என கூறப்படுகிறது. அஜ்வைன் தேநீரில் நிறைந்துள்ள பண்புகள் இருமல் மற்றும் நெரிசலில் இருந்து நிவாரணத்தைத் தருகிறது.

அஜ்வைன் டீ செய்வது எப்படி?

அஜ்வைன் டீ தயார் செய்ய, ஒரு கப் வெந்நீரில் ஒரு டீஸ்பூன் அஜ்வைன் அல்லது கேரம் விதைகளைச் சேர்த்து காய்ச்ச வேண்டும். இதை சில நிமிடங்கள் ஊறவைத்து, பிறகு அதை வடிகட்டி கோப்பை ஒன்றில் ஊற்றி, காலை பானமாக எடுட்துக் கொள்ளலாம். இதில் சுவைக்காக, தேன், ஒரு துளி எலுமிச்சைச் சாறு, கருப்பு உப்பு போன்றவற்றை சேர்ப்பது அதன் சுவையை அதிகரிக்கும்.

எப்போது எடுத்துக் கொள்வது?

வெறும் வயிற்றில் அஜ்வைன் டீ அருந்துவது செரிமான அமைப்பில் அதிக விளைவை ஏற்படுத்தலாம். இது சிலருக்கு வயிற்றுப் புறணியை எரிச்சலடையச் செய்வதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே, லேசான உணவுக்குப் பிறகு மெதுவாகத் தொடங்குவது நல்லது.

இவ்வாறு கோடைக்காலத்தில் வெறும் வயிற்றில் அஜ்வைன் டீயை எடுத்துக் கொள்வது உடலுக்கு புத்துணர்ச்சியூட்டும் சிறந்த பானமாக உள்ளது. மேலும் உடல் ஆரோக்கியத்திற்கும் பல்வேறு நன்மைகளைத் தருகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Cinnamon Water: வெறும் வயிற்றில் பட்டை தண்ணீர் குடிக்கலாமா? என்ன ஆகும்?

Image Source: Freepik

Read Next

பிரஷர் குக்கரில் சமைக்கிறீர்களா? நல்லது கெட்டதை தெரிஞ்சிகோங்க

Disclaimer