Sattu drink recipe: சுட்டெரிக்கும் வெயிலில் உடலை ஜில்லுனு வைக்க நிபுணர் சொன்ன இந்த ஜூஸ் குடிங்க

How to make sattu drink to cool the body in summer: கோடைக்காலத்தில் உடலைக் குளிர்விக்க பலரும் கூல்ட்ரிங்ஸ், ஐஸ்கிரீம் போன்றவற்றையே விரும்புகின்றனர். ஆனால், இயற்கையான மற்றும் ஆரோக்கியமான வகையில் உடலைக் குளிர்விப்பதற்கு சட்டு ட்ரிங்க் உதவுகிறது. இதில் உடலை குளிர்ச்சியாக வைக்க சத்து ட்ரிங்க் செய்வது எப்படி என்பதைக் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
Sattu drink recipe: சுட்டெரிக்கும் வெயிலில் உடலை ஜில்லுனு வைக்க நிபுணர் சொன்ன இந்த ஜூஸ் குடிங்க

How to make sattu drink for summer: கோடைக்காலம், குளிர்காலம் என எந்தக் காலமாக இருப்பினும், உடலை ஆரோக்கியமான முறையில் பாதுகாக்க வேண்டியது அவசியமாகும். பெரும்பாலும், மக்கள் குளிர்ச்சியான காலத்தில் உடலை சூடாக வைத்திருக்கவும், கோடைக்கால வெப்பத்தில் உடலைக் குளிர்ச்சியாகவும் வைத்திருக்க விரும்புகின்றனர். அவ்வாறு, தற்போது கோடைக்காலம் நெருங்கி வரும் இந்த சூழ்நிலையில் உடலை வெப்பத்திலிருந்து தணிக்கவே விரும்புவர். எனவே தான் கடைகளில் விற்பனை செய்யப்படும் ட்ரிங்ஸ், ஐஸ்கிரீம் போன்ற குளிர்ச்சி மிக்க பொருள்களின் மீது அதிக நாட்டம் கொள்கின்றனர்.

நீங்கள் எடுத்துக் கொள்ளும் இந்த பானங்கள் உடலுக்குப் பாதுகாப்பானதா என்பதை யோசித்திருக்கிறீர்களா? உண்மையில் இல்லை என்றே கூறலாம். இவற்றை மிதமாக உட்கொள்வது நல்லது எனினும், அதிகளவு எடுத்துக் கொள்வது உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். எனவே, தான் சிலர் உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரக்கூடிய இயற்கையான பானங்களை முயற்சிக்கின்றனர். அவ்வாறு எளிதான மற்றும் இயற்கையான தேர்வாக உடலுக்குக் குளிர்ச்சியைத் தரக்கூடிய பானங்களில் சத்து ட்ரிங்க் (Sattu Drink) மிகுந்த நன்மை பயக்கும். அதன் படி, ஊட்டச்சத்து நிபுணரான திஷா சேதி அவர்கள் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் உடலைக் குளிர்ச்சியாக வைக்க உதவும் ட்ரிங்க் ரெசிபி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவும் உதவலாம்: Summer Weight Loss Drink: உடல் எடையை வேகமாக குறைக்க சப்ஜா விதைகளுடன் இவற்றை சேர்த்து சாப்பிடுங்க!

உடலைக் குளிர்ச்சியாக வைக்கும் சத்து ட்ரிங்க் தயாரிக்கும் முறை

தேவையான பொருள்கள்

  1. சத்து பொடி - சிறிதளவு
  2. சியா விதைகள் - 1 டீஸ்பூன் (ஊறவைத்தது)
  3. எலுமிச்சை சாறு - தேவையான அளவு
  4. புதினா இலைகள் - சிறிதளவு
  5. கருப்பு உப்பு - 1/4 டீஸ்பூன்

சத்து ட்ரிங்க் ரெசிபி தயார் செய்யும் முறை

  • முதலில் ட்ரிங்க் தயார் செய்யும் முன்னதாக, 1 டீஸ்பூன் அளவிலான சியா விதைகளை ஊறவைத்துக் கொள்ள வேண்டும்.
  • பின், பாத்திரம் ஒன்றில் சத்து பவுடரை எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • பிறகு இதில் கால் டீஸ்பூன் அளவிலான கருப்பு உப்பு மற்றும் புதினா இலைகளைச் சேர்க்கலாம்.
  • இதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும்.
  • அதன் பிறகு, அரைத்த கலவையை ஒரு டம்ளரில் ஊற்றி, அதில் 1 டீஸ்பூன் அளவிலான சியா விதைகளைச் சேர்க்கலாம்.
  • பின்னர், அதை நன்கு கலந்து, சிறிது எலுமிச்சைச் சாறு சேர்க்க வேண்டும்.
  • இப்போது சுவையான சத்து ட்ரிங்க் ரெசிபி தயாராகி விட்டது.

இந்த பதிவும் உதவலாம்: சுட்டெரிக்கும் வெயிலில் குளுகுளுனு இருக்க நிபுணர் சொன்ன இந்த மூன்றை மட்டும் எடுத்துக்கோங்க

சத்து ட்ரிங்க் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்

சத்து ட்ரிங்க் குடிப்பது உடலுக்குப் பல ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது. இந்த ட்ரிங்க் புரதம் மற்றும் கால்சியம் சத்துக்கள் நிறைந்ததாகும். இது வீக்கத்தைக் குறைக்கவும், உடலைக் குளிர்விக்கவும் உதவுகிறது. மேலும், இது குறைந்த கிளைசெமிக் குறியீட்டு பானமாக இருப்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றதாக அமைகிறது.

சத்து மாவு

சத்து மாவு அல்லது health mix powder என்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமான உணவுப்பொருளாகும். இது பல்வேறு இயற்கை பொருட்களைக் கொண்டு தயார் செய்யப்படுகிறது. இது உடலின் சக்தி, நோய் எதிர்ப்பு சக்தி, மற்றும் செரிமான செயல்பாடுகளை மேம்படுத்த உதவுகிறது.

சியா விதைகள்

கோடைக்காலத்தில் உடலை நீரேற்றமாக வைத்திருக்கவும், உடல் சூட்டைக் குறைக்கவும் சியா விதைகள் சிறந்த தேர்வாகும். சியா விதை ஊறவைத்த நீரை உட்கொள்வது கோடைக்காலத்தில் நல்ல தேர்வாக அமைகிறது.

எலுமிச்சைச் சாறு

கோடைக்காலத்தில் உடலைக் குளிர்விக்க உதவும் சிறந்த பானங்களில் எலுமிச்சைச் சாறு சிறந்த தேர்வாகும். இதன் அமிலத்தன்மை செரிமான அமைப்பு மற்றும் கல்லீரலில் உள்ள நரம்புகளை எழுப்பி நல்ல செரிமானம் மற்றும் குடல் இயக்கத்தை ஊக்குவிக்கிறது.

புதினா இலைகள்

இந்த வெப்ப காலத்தில் புதினா இலைகளை அதிகம் பயன்படுத்தலாம். ஏனெனில் இது குளிர்ச்சித் தன்மை நிறைந்ததாகும். மேலும், இது பல்வேறு ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது.

கருப்பு உப்பு

பொதுவாக கருப்பு உப்பு உடல் ஆரோக்கியத்திற்குப் பல நன்மைகளை அள்ளித் தருகிறது. குறிப்பாக, கோடைக்காலத்தில் தூக்கமின்மை, வாயு பிரச்சனைகள் மற்றும் செரிமானம் சார்ந்த பிரச்சனைகள் போன்றவற்றை சரி செய்ய கருப்பு உப்பு உதவுகிறது.

இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil FacebookOnlymyhealth Tamil Instagram

இந்த பதிவும் உதவலாம்: கோடை காலத்தில் சியா விதைகளை ஊறவைத்த தண்ணீரை குடிச்சால் இவ்வளவு நல்லதா?

Image Source: Freepik

Read Next

மாதவிடாய் வலியால் ரொம்ப அவதியா? கவலையே வேணாம்! இந்த ஒரு பொருளை உங்க டயட்ல சேர்த்துக்கோங்க

Disclaimer