கோடைக்காலம் தொடங்கி விட்டாலே, ஐஸ்கிரீம், ஐஸ் மிட்டாய் மற்றும் கூல் பானங்களின் மீதான ஈடுபாடும் சற்று அதிகரித்தே காணப்படுகிறது. அதிலும் எந்த காலமாக இருந்தாலும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே ஐஸ்கிரீம் சாப்பிடுவதில் மிகுந்த விருப்பம் இருக்கும். இதில் இனிப்பு சுவை, கலரிங், குளிர்ச்சித் தன்மை போன்றவை இருப்பினும், சில உடல்நல அபாயங்களும் ஏற்படலாம். அவ்வாறு சமீபத்தில் கர்நாடகாவில் ஐஸ்கிரீம், கூல்ட்ரிங்ஸ் போன்றவற்றில் சோப்புப் பொடி மற்றும் எலும்புகளை பலவீனப்படுத்தும் இரசாயனங்கள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து விரிவாகக் காணலாம்.
அறிக்கைகளின்படி, கர்நாடகாவின் உள்ளூர் ஐஸ்கிரீம் ஐஸ் மிட்டாய் மற்றும் கூல் பான உற்பத்தி அலகுகள் சுகாதாரமற்ற நிலையில் தரமற்ற பொருட்களை விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறையால் (FDA) ஆய்வுகள் நடத்தப்பட்டது. அதன்படி, 220 கடைகளில் 97 கடைகளுக்கு சரியான சேமிப்பு நிலைமைகளைப் பராமரிக்கத் தவறியதற்காக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும் இதில் பலர் கிரீமி அமைப்பை உருவாக்க கிரீம்களில் சோப்புப் பொடியைப் பயன்படுத்துவதும், குளிர் பானங்களில் பாஸ்போரிக் அமிலம் ஃபிஸ்ஸை அதிகரிக்கப் பயன்படுத்துவதும் கண்டறியப்பட்டுள்ளது. பாஸ்போரிக் அமிலம் பெரும்பாலும் எலும்புகளை பலவீனமடையச் செய்யலாம்.
இந்த பதிவும் உதவலாம்: சந்தையில் விற்கப்படும் போலி உப்பு... கலப்பட உப்பை கண்டறிய FSSAI கூறிய டிப்ஸ்!
சோதனைகளில் கண்டுபிடிக்கப்பட்டவை
பல சந்தர்ப்பங்களில், உற்பத்தியாளர்கள் செலவுகளைக் குறைப்பதற்காக, சோப்பு, யூரியா அல்லது ஸ்டார்ச் ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்பட்ட செயற்கைப் பாலைப் பயன்படுத்தி உள்ளனர். இது தவிர, இயற்கை சர்க்கரைக்குப் பதிலாக சுவை மற்றும் நிறத்தை அதிகரிக்க சாக்கரின் மற்றும் அங்கீகரிக்கப்படாத சாயங்கள் போன்ற தீங்கு விளைவிக்கும் சேர்க்கைகளைச் சேர்த்து தயாரித்துள்ளனர்.
கூடுதலாக, இன்னும் சில உற்பத்தியாளர்கள் ஐஸ் மிட்டாய்கள் மற்றும் குளிர்பானங்களில் மாசுபட்ட அல்லது குடிக்க முடியாத தண்ணீரைப் பயன்படுத்தியதாகவும், அனுமதிக்கப்பட்ட வரம்புகளுக்கு அப்பால் அதிக அளவு சுவையூட்டும் பொருட்களைச் சேர்த்ததாகவும் தெரியவந்துள்ளது.
சோப்புப் பவுடர் உட்கொள்வதால் ஏற்படும் விளைவுகள்
உணவுப்பொருள்களில் சோப்புப் பொடியைப் பயன்படுத்துவது உடலுக்குப் பல்வேறு தீங்கு விளைவிக்கலாம்.
இந்த கலப்பட பொருள்களின் பயன்பாடு காரணமாக குமட்டல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற செரிமானப் பிரச்சினைகள் ஏற்படும்.
சோப்புப் பொடியில் உள்ள வலுவான கார மற்றும் அமிலக் கூறுகள் வயிறு, தொண்டை மற்றும் உணவுக்குழாயில் காயங்களை ஏற்படுத்தக்கூடும்.
மேலும், இதை உட்கொள்ளும் போது உள்ளிழுப்பதால், இருமல், மூச்சுத்திணறல் மற்றும் சுவாசிப்பதில் சிரமங்கள் போன்றவை ஏற்பட வாய்ப்புண்டு.
அதிகளவில் பயன்படுத்துவது அல்லது நீண்ட நேரம் வெளிப்படுவது போன்றவை சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரலில் அதிகப்படியான அழுத்தத்தை ஏற்படுத்தி உறுப்பு சேதத்திற்கு வழிவகுக்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: மக்களே உஷார்! FDA-ஆல் தடை செய்யப்பட்ட இந்த உணவுகளை சாப்பிட்டா ஆபத்து உங்களுக்குத்தான்
பாஸ்போரிக் அமிலத்தின் பக்க விளைவுகள்
இது நிறமற்ற, மணமற்ற மற்றும் அமிலத்தன்மை கொண்ட இரசாயனமாகும். இது உணவு, தொழில்துறை செயல்முறைகள் மற்றும் துப்புரவுப் பொருட்களில் பரவலாகப் பயன்படுத்தக்கூடியதாகும்.
பொதுவாக கோலா போன்ற குளிர்பானங்கள், உரங்கள், துரு நீக்கிகளில் காணப்படுகிறது. இதன் அதிகப்படியான நுகர்வு சிறுநீரக கற்கள் மற்றும் சிறுநீரக நோய் அபாயத்தை அதிகரிக்கக்கூடும். குறிப்பாக, ஏற்கனவே சிறுநீரக நிலைமைகள் உள்ளவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம்.
மேலும் இது எலும்பு தொடர்பான ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் பல் சிதைவுக்கு பங்களிக்கிறது.
அதிகப்படியான பாஸ்போரிக் அமிலத்தை உட்கொள்வதால் இரத்த அழுத்த ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தி மாரடைப்பு மற்றும் இதய நோய்கள் அபாயத்தை அதிகரிக்கலாம்.
சில ஆய்வுகளின்படி, பாஸ்போரிக் அமிலத்தை நீண்ட நேரம் உட்கொள்வது புற்றுநோய் போன்ற கொடிய நோய்களுக்கு வழிவகுக்கலாம். குறிப்பாக, கோலா பானங்களில் உள்ள பாஸ்போரிக் அமிலம், வயிறு மற்றும் செரிமான அமைப்பு புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கலாம்.
ஐஸ்கிரீமில் சோப்புப் பொடி இருக்கிறதா என்பதை எப்படி சரிபார்ப்பது? (How to check detergent powder in ice cream?)
ஐஸ்கிரீம் கொஞ்சம் கசப்பாகவோ, சோப்பாகவோ அல்லது வித்தியாசமாகவோ இருப்பின், அதில் சோப்பு கலந்திருக்கலாம். அதே போல, ஐஸ்கிரீம் உருகிய பிறகு நுரை அல்லது ஒட்டும் அடுக்கை உருவாக்கினால் அது சோப்பு இருப்பதைக் குறிக்கலாம்.
உருகிய ஐஸ்கிரீமை எடுத்துக் கொண்டு, அதை ஒரு கிளாஸ் நீரில் கலந்து கவனமாக பார்க்க வேண்டும். தண்ணீரில் நுரைவர ஆரம்பித்தால் அல்லது குமிழ்கள் தோன்றினால், ஐஸ்கிரீமில் சோம்பு இருக்க வாய்ப்புள்ளது. மேலும் தண்ணீர் கொஞ்சம் வெண்மையாகவும், சோப்பு கலந்ததாகவும் தெரிந்தால் அது ஆபத்தான அறிகுறியாக இருக்கலாம்.
சிறிய உருகிய ஐஸ்கிரீமை எடுத்துக் கொண்டு, விரல்களுக்கு இடையில் தேய்க்க வேண்டும். பின்னர், அதை தண்ணீரில் கழுவலாம். ஐஸ்கிரீம் சோம்பு போல மென்மையாகவோ அல்லது வழுக்கும் தன்மையாகவோ உணர்ந்தால், அதில் சோப்பு சேர்க்கப்பட்டிருக்கலாம். நுரை உருவாக ஆரம்பித்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram
இந்த பதிவும் உதவலாம்: Ice Cream in Monsoon: மழைக்காலத்தில் ஐஸ் சாப்பிடுவது நல்லதா? விஷயமே வேற..
Image Source: Freepik