Mango Ice Cream Recipe In Tamil: யாருக்குத்தான் ஐஸ்கிரீம் பிடிக்காது?... பல் முளைக்காத குழந்தைகள் முதல்… பல்லு போன ஆயா வரை அனைவருக்கும் ஐஸ்கிரீம் என்ற பெயரை கேட்டாலே நாவில் எச்சில் ஊரும். சிலருக்கு வெயில் காலத்தில் அடிக்கடி ஐஸ்கிரீம் சாப்பிட பிடிக்கும், இன்னும் சிலருக்கு மழையில் ஐஸ்கிரீம் சாப்பிட பிடிக்கும், சிலருக்கு காரமான உணவுகளை சாப்பிட்ட பின் ஐஸ்கிரீம் சாப்பிட பிடிக்கும். எப்போதுமே கடையில் வாங்கி சாப்பிடும் ஐஸ்கிரீமை எப்போதாவது வீட்டில் முயற்சி செய்தது உண்டா? வாருங்கள் வீட்டிலேயே சுவையான மாம்பழ ஐஸ்கிரீம் செய்வது எப்படி என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
அல்போன்சா மாம்பழம் - 5
ஸ்வீட் விப்பிங் கிரீம் - 400 மி.லி.
பால் - 500 மி.லி.
குங்குமப்பூ - 4
சர்க்கரை - 1 கப்
இந்த பதிவும் உதவலாம்: Nungu Recipes : எப்பவும் நுங்குவை ஒரே மாதிரி சாப்பிட்டு போர் அடிக்குதா? - சம்மர் ஸ்பெஷல் ஜூஸ் ரெசிபி உங்களுக்காக...!
மாம்பழ ஐஸ்கிரீம் செய்முறை:
- கடாயில் பால் ஊற்றி அதில் குங்குமப்பூ மற்றும் சர்க்கரை சேர்த்து கலந்து 15 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும்.
- மாம்பழத்தை தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும் .
- மிக்ஸியில் நறுக்கிய மாம்பழம் மற்றும் தயார் செய்த கன்டென்ஸ்டு மில்க் சேர்த்து நன்கு விழுதாக அரைக்கவும்.
- ஸ்வீட் விப்பிங் கிரீமை நன்கு அடித்து கொள்ளவும். பின்பு அரைத்த மாம்பழத்தை சேர்த்து நன்கு கலந்து மீண்டும் நன்கு அடித்து கொள்ளவும்.
- பிறகு பாத்திரத்தில் ஊற்றி 12 மணிநேரம் பிரீஸரில் வைக்கவும்.
- அட்டகாசமான மாம்பழ ஐஸ்கிரீம் தயார்!!
மாம்பழ ஐஸ்கிரீம் சாப்பிடுவதன் நன்மைகள்
வைட்டமின்கள் ஏ மற்றும் சி: மாம்பழங்களில் இந்த வைட்டமின்கள் நிறைந்துள்ளன. அவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முக்கியம்.
ஆக்ஸிஜனேற்றிகள்: மாம்பழத்தில் ஐசோகுவெர்சிட்ரின், குவெர்செடின் மற்றும் கேலிக் அமிலம் உள்ளிட்ட பல்வேறு ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளன. அவை புற்றுநோயிலிருந்து பாதுகாக்க உதவும்.
நார்ச்சத்து: மாம்பழம் உணவு நார்ச்சத்தின் நல்ல மூலமாகும். இது செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் கொழுப்பின் அளவைக் குறைக்க உதவும்.
இந்த பதிவும் உதவலாம்: கோடை காலத்தை குளு குளுவென அனுபவிக்க இதை குடிங்க.. செஃப் தாமுவின் அசத்தல் ரெசிபி!
பிற ஊட்டச்சத்துக்கள்: மாம்பழத்தில் வைட்டமின் பி6, மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் ஆகியவை உள்ளன. இவை அனைத்தும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.
பிற நன்மைகள்: புத்துணர்ச்சி மற்றும் குளிர்ச்சி: மாம்பழ ஐஸ்கிரீம் வெப்பமான காலநிலையில் குளிர்விக்க ஒரு சிறந்த வழியாகும்.
இயற்கை இனிப்பு: மாம்பழத்தில் இயற்கையான இனிப்பு உள்ளது. எனவே, ஐஸ்கிரீமில் சர்க்கரை குறைவாக சேர்க்க வேண்டியிருக்கலாம். இது ஆரோக்கியமான விருப்பமாக அமைகிறது. மேலும், மாம்பழம் ஒரு கிரீமி அமைப்பைக் கொண்டுள்ளது. இது மென்மையான மற்றும் சுவையான ஐஸ்கிரீமுக்கு பங்களிக்கிறது.
Pic Courtesy: Freepik