Fri Sep 11, 2026 | 11:10 PM IST

Mangalore Bun: ரெண்டே ரெண்டு வாழைப்பழம் இருந்தால் போதும் சுவையான மங்களூர் பன்ஸ் தயார்!

உங்க வீட்டு குழந்தைகளுக்கு ஏதாவது புதுசா ஸ்நாக்ஸ் செஞ்சி கொடுக்க ஆசைப்படுறீங்களா? அப்போ, மங்களூர் பன்ஸ் செய்து கொடுங்க. இதோ உங்களுக்கான ரெசிபி.

How To Make Mangalore Buns Recipe: பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு வித விதமாக மாலைநேர ஸ்நாக்ஸ் செய்து கொடுப்பது வழக்கம். எப்பவும் ஓரே மாதிரியான ஸ்நாக்ஸ் செய்து கொடுத்து உங்களுக்கு சலித்து போயிருந்தால் இந்த முறை இந்த பான் ரெசிபியை ட்ரை செய்து பாருங்க. வாருங்கள் மங்களூர் பன்ஸ் ரெசிப்பி எப்படி செய்வது என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

வாழைப்பழம் - 3
சீரகம் - 1/2 தேக்கரண்டி
துருவிய வெல்லம் - 2 தேக்கரண்டி
தயிர் - 1 மேசைக்கரண்டி
உப்பு – 1 சிட்டிகை
சர்க்கரை - 1 1/2 தேக்கரண்டி
பேக்கிங் சோடா - 1 சிட்டிகை
மைதா - 1 1/2 கப்
எண்ணெய் - பொரிப்பதற்கு

இந்த பதிவும் உதவலாம்: Bread Pakoda: ரோட்டுக்கடை ஸ்டைல் பிரட் பக்கோடா எப்படி செய்யணும் தெரியுமா? 

மங்களூர் பன்ஸ் செய்முறை:

Mangalore Buns + Video! - Ruchik Randhap

  • வாழைப்பழத்தை எடுத்து நன்கு மசித்து, சீரகம், வெல்லம், தயிர், உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
  • இதனுடன் சக்கரை, சமையல் சோடா, மைதா மாவு சேர்த்து கலந்து ஆறு மணி நேரம் ஊற வைக்கவும்.
  • மாவை சிறு சிறு உருண்டைகளாக பிரித்து, தடிமனும் இல்லாமல், மெல்லிசாக இல்லாமல் திரட்டவும்.
  • சூடான எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
  • சுவையான மங்களூர் பன்ஸ் பரிமாறாக தயாராக உள்ளது.

மங்களூர் பன்ஸ் சாப்பிடுவதன் பயன்கள்:

Aarti's Mangalore Buns – Diaspora Co.

பொட்டாசியம்: வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகமாக உள்ளது. இது இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும்.
நார்ச்சத்து: வாழைப்பழத்தில் நார்ச்சத்து உள்ளது. இது செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் குடல் இயக்கங்களை ஒழுங்குபடுத்துகிறது.
வைட்டமின் பி6: வாழைப்பழங்களில் வைட்டமின் பி6 இன் நல்ல மூலமாகும்.
வைட்டமின் சி: வாழைப்பழங்களில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது.

இந்த பதிவும் உதவலாம்: Muttaikose Pakoda: வெங்காய பக்கோடா சாப்பிட்டிருப்பீங்க... முட்டைக்கோஸ் பக்கோடா சாப்பிட்டிருக்கீங்களா?

எதிர்ப்புத் திறன் கொண்ட ஸ்டார்ச்: பழுக்காத வாழைப்பழங்களில் எதிர்ப்புத் திறன் கொண்ட ஸ்டார்ச் உள்ளது. இது எடை இழப்பு, கொழுப்பைக் குறைத்தல் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் அபாயத்தைக் குறைத்தல்.
பிரக்டோலிகோசாக்கரைடுகள் (FOS): வாழைப்பழத்தில் FOS உள்ளது. இது உங்கள் கீழ் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் சமநிலையை பராமரிக்க உதவும்.

Pic Courtesy: Freepik

Read Next

Muttaikose Pakoda: வெங்காய பக்கோடா சாப்பிட்டிருப்பீங்க... முட்டைக்கோஸ் பக்கோடா சாப்பிட்டிருக்கீங்களா?

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Devaki Jeganathan

Devaki Jeganathan

Senior Sub Editor

நான் தேவகி ஜெகநாதன், டிஜிட்டல் மீடியாவில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். கல்வி, வேலைவாய்ப்பு, லைஃப்ஸ்டைல் மற்றும் ஜோதிடம் மீது அதீத ஆர்வம் கொண்டவர். தற்போது, குழந்தை நலன், வீட்டு வைத்தியம், அழகு குறிப்பு, உடற்பயிற்சி மற்றும் உணவு தொடர்பான தலைப்புகளில் கட்டுரைகளை எழுதி வருகிறேன். மக்களுக்கு தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் அவர்களை விழிப்புணர்வுடன் வைத்திருப்பதே எனது நோக்கம். எனக்கு பயணம் செய்வதும், புகைப்படம் எடுப்பதும் பிடிக்கும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content