How To Make Bread Pakora Recipe: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ரோட்டுக்கடை உணவுகள் என்றாலே ரொம்ப பிடிக்கும். அதுவும் பஜ்ஜி, போண்டா, மெதுவடை, பானி பூரி, பேல் பூரி என அனைத்திற்கும் நம்மில் பலர் அடிமை. நாம் என்னதான் வீட்டில் சில விஷயங்களை சமைத்தாலும், அவை கடையில் வாங்கு சுவைக்கு வருவதில்லை என நம்மில் பலர் யோசித்திருப்போம்.
அந்தவகையில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் விரும்பி சாப்பிடும் பிரட் பக்கோடா வீட்டிலேயே மிகவும் எளிமையான முறையில் எப்படி செய்வது என இந்த தொகுப்பில் பார்க்கலாம். இது மாலை நேர டீயுடனான தீனிக்கு மிகவும் ஏற்றது.
இந்த பதிவும் உதவலாம்: கடலை பர்பி சாப்பிட்டிருபீங்கா பிரட் பர்பி சாப்பிட்டிருக்கீங்களா? இதோ ரெசிபி!
தேவையான பொருட்கள்:
பிரட் - 4 துண்டு.
எண்ணெய் - பொரிப்பதற்கு
உருளைக்கிழங்கு மசாலா செய்ய
உருளைக்கிழங்கு - 4 வேகவைத்தது
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
வெங்காயம் - 1 நறுக்கியது
பச்சை மிளகாய் - 2 நறுக்கியது
இஞ்சி - 1 துண்டு நறுக்கியது
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
காஷ்மீரி மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
சீரக தூள் - 1 தேக்கரண்டி
தனியா தூள் - 1 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி
உப்பு - 1 தேக்கரண்டி
சாட் மசாலா தூள் - 1 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லி இலை நறுக்கியது
மாவு கலவை செய்ய
கடலை மாவு - 1 கப்
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
உப்பு - 1/2 தேக்கரண்டி
ஓமம் - 1 தேக்கரண்டி
பேக்கிங் சோடா - 1 சிட்டிகை
இந்த பதிவும் உதவலாம்: Aval Kesari: ரவை கேசரி.. சேமியா கேசரி தெரியும்.. அவல் கேசரி தெரியுமா? இதோ ரெசிபி!
செய்முறை:
- ஒரு அகலமான பானில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும்.
- அடுத்து மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், சீரக தூள், தனியா தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து கலந்து விடவும்.
- பின்னர், வேகவைத்த உருளைக்கிழங்கை சேர்த்து மசிக்கவும்.
- சாட் மசாலா தூள், கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விடவும். உருளைக்கிழங்கு மசாலா தயார்.
- இரண்டு பிரட் துண்டுகளை எடுத்து அதில் ஒரு துண்டின் மீது உருளைக்கிழங்கு மசாலாவை பரப்பி அதன் மேலே மற்றொரு பிரட் துண்டை வைத்து அழுத்தவும்.
- தயார் செய்த சான்விச்சை இரண்டாக கட் செய்யவும்.
- ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, ஓமம் சேர்த்து கலந்து விட்டு பின்னர் தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் கரைக்கவும்.
- பேக்கிங் சோடா சேர்த்து கலந்து விடவும்.
- கட் செய்த சான்விச்சை தயார் செய்த கடலை மாவு கலவையில் முக்கி எடுத்து சூடான எண்ணையில் சேர்த்து இருபுறமும் வேகவைத்து எடுக்க சுவையான பிரட் பக்கோடா தயார்.
இந்த பதிவும் உதவலாம்: வெறும் 4 துண்டுகள் பிரட் போதும்... 10 நிமிடத்தில் சுவையான பிரட் அல்வா தயார்!
பிரட் பக்கோடா சாப்பிடுவது நல்லதா?
ஆற்றல்: ரொட்டி பக்கோராவில் கார்போஹைட்ரேட்டுகள், புரதம் மற்றும் கொழுப்பு உள்ளது. அவை அன்றாட நடவடிக்கைகளுக்கு ஆற்றலை வழங்குகின்றன. குறிப்பாக உடல் ரீதியாக கடினமான நாளுக்குப் பிறகு, இது ஆற்றல் அளவை மீட்டெடுக்க உதவும்
நார்ச்சத்து: பிரெட் பக்கோராவில் பயன்படுத்தப்படும் முழு கோதுமை ரொட்டியில் நார்ச்சத்து உள்ளது. இது செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. நார்ச்சத்து உங்களுக்கு வயிறு நிரம்பியதாக உணரவும் இரத்த சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்தவும் உதவும்.
புரதம்: ரொட்டி பக்கோராவை மூடுவதற்குப் பயன்படுத்தப்படும் கடலை மாவு பேஸ்டில் புரதம் நிறைந்துள்ளது. இது தசை வளர்ச்சி மற்றும் பழுதுபார்ப்புக்கு அவசியம். நிரப்புதலில் பனீர் அல்லது பருப்பு வகைகள் இருந்தால், அது புரதத்தின் நல்ல மூலமாக இருக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Walnut Halwa: ஒரு கப் வால்நட்ஸ் இருந்தால் போதும்… ஆரோக்கியமான வால்நட்ஸ் அல்வா செய்யலாம்!
ஆன்டிஆக்ஸிடன்ட்கள்: மஞ்சள் மற்றும் அஜ்வைன் (கேரம் விதைகள்) போன்ற ரொட்டி பக்கோராவில் பயன்படுத்தப்படும் சில மசாலாப் பொருட்கள் ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் மற்றும் வீக்கத்திலிருந்து உடலின் செல்களைப் பாதுகாக்க உதவுகின்றன.
வைட்டமின்கள்: ரொட்டி பக்கோராவில் வைட்டமின்கள் ஏ, சி, கே மற்றும் நியாசின் ஆகியவை இருக்கலாம். அவை தோல் மற்றும் ஆற்றல் அளவைப் பராமரிக்க முக்கியம்
தாதுக்கள்: ரொட்டி பக்கோராவில் துத்தநாகம், இரும்பு, பொட்டாசியம், கால்சியம் மற்றும் சோடியம் போன்ற தாதுக்கள் இருக்கலாம்.
Pic Courtesy: Freepik