How To Make Stuffed Bread Pakoda: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ரோட்டுக்கடை உணவுகள் என்றாலே ரொம்ப பிடிக்கும். அதுவும் பஜ்ஜி, போண்டா, மெதுவடை, பானி பூரி, பேல் பூரி என அனைத்திற்கும் நம்மில் பலர் அடிமை. நாம் என்னதான் வீட்டில் சில விஷயங்களை சமைத்தாலும், அவை கடையில் வாங்கு சுவைக்கு வருவதில்லை என நம்மில் பலர் யோசித்திருப்போம்.
அந்தவகையில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் விரும்பி சாப்பிடும் பன்னீர் பிரட் பக்கோடா வீட்டிலேயே மிகவும் எளிமையான முறையில் எப்படி செய்வது என இந்த தொகுப்பில் பார்க்கலாம். இது மாலை நேர தீனிக்கு மிகவும் ஏற்றது.
இந்த பதிவும் உதவலாம் : உடல் எடையை குறைக்கும் குதிரைவாலி சூப் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள் :
பன்னீர் - 1 கப்.
வெங்காயம் - 2.
பச்சை மிளகாய் - 3.
இஞ்சி_பூண்டு விழுது - 1 ஸ்பூன்.
சீரக பொடி - 1 ஸ்பூன்.
மல்லி பொடி - 1 ஸ்பூன்.
சாட் மசாலா - 1 ஸ்பூன்.
பிரட் துண்டுகள் - 2.
கடலை மாவு - 3 ஸ்பூன்.
உப்பு, எண்ணெய் - தேவையான ஆளவு.
செய்முறை :
- இதற்கு முதலில், வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை நன்கு பொடியாக நறுக்கி தனியே வைக்கவும்.
- இப்போது எடுத்துக்கொண்ட பன்னீரை நன்கு துருவி பன்னீர் தருவல் தயார் செய்யவும்.
- தற்போது அகன்ற பாத்திரம் ஒன்றை எடுத்து அதில் வெங்காயம், பன்னீர் துருவல், பச்சை மிளகாய், இஞ்சி விழுது, பூண்டு விழுது, சீரகத் தூள், கொத்தமல்லி தூள், சாட் மசாலா, உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும்.
இந்த பதிவும் உதவலாம் : Garlic Mushroom: நாவில் எச்சில் ஊறவைக்கும் பட்டர் கார்லிக் காளான் எப்படி செய்யணும் தெரியுமா?
- இதனிடையே எடுத்துக்கொண்ட பிரட்டினை வேண்டிய அளவில் வெட்டி - தண்ணீரில் முக்கி ஊற வைத்து தனியே தயாராக எடுத்து வைக்கவும்.
- அதேநேரம் ஒரு தனி கிண்ணத்தில், கடலை மாவுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கடலை மாவு கரைச்சல் தயார் செய்துக்கொள்ளவும்.
- பின்னர், பக்கோரா பொரித்து எடுக்க கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து போதுமான அளவு எண்ணெய் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.
- இதற்கிடையில் தயாரா உள்ள பிரட் துண்டுகளுக்கு இடையில் பிசைந்து வைத்த மாவு போதுமான அளவு வைத்து திணித்து - கிண்ணத்தில் உள்ள கடலை மாவில் முக்கி கொதிக்கும் எண்ணெயில் சேர்த்து, பொன்னிறமாக பொரித்து எடுக்க சுவையான பிரட் பக்கோரா தயார்.
இந்த பதிவும் உதவலாம் : குக் வித் கோமாளி சுஜிதா இளநீர் கொத்து கறி & தேங்காய் பால் சாதம் ரெசிபி
- சுவையான இந்த பிரட் பக்கோராவினை சுட சுட ஒரு தட்டில் வைத்து உங்களுக்கு பிடித்த சட்னியுடன் சேர்த்து பரிமாறவும்.
பன்னீர் சாப்பிடுவதன் நன்மைகள்:

எலும்புகளை வலுவாக்கும்: கால்சியம் நிறைந்த சீஸ் எலும்புகளை வலுப்படுத்த மிகவும் முக்கியமானது. மூட்டு வலி வராமல் தடுக்கவும் உதவுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது: ஊட்டச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்திருப்பதால், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இது மிகவும் உதவியாக இருக்கும். இது தொற்றுநோயைத் தடுக்கவும் அதிலிருந்து விரைவாக மீட்கவும் உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம் : Irfan Meen Kulambu Recipe: இர்ஃபான் ஸ்டைல் மீன் குழம்பு ரெசிபி
இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கும்: பொட்டாசியம், கால்சியம் மற்றும் மெக்னீசியம் ஆகியவை சாதாரண இரத்த அழுத்தத்தை பராமரிப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. பனீரில் இவை அனைத்தும் நல்ல அளவில் இருப்பதால், ரத்த அழுத்த நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
தோல் மற்றும் முடி ஆரோக்கியம்: பனீரில் உயர்தர புரதம் உள்ளது, இது உடலின் பல முக்கிய செயல்பாடுகள் சரியாக இயங்குவதற்கு மிகவும் முக்கியமானது. தோல் மற்றும் முடி ஆரோக்கியமாக இருக்க, உணவில் போதுமான புரதம் இருக்க வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம் : Mint Leaves Benefits: நோயெதிர்ப்பு சக்தி முதல் மன அழுத்தம் வரை! புதினா இலை தரும் அற்புத நன்மைகள்
எடையை நிர்வாகிக்க உதவுகிறது: சீஸ் உட்கொள்வது எடை இழப்பு மற்றும் அதிகரிப்பு ஆகிய இரண்டிற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உங்கள் குறிக்கோளுக்கு ஏற்ப சரியான அளவில் அதை உட்கொள்ள வேண்டும்.
தசையை கட்டமைக்க உதவுகிறது: தசைகள் வளர மற்றும் வலுப்படுத்த, போதுமான புரதம் தேவைப்படுகிறது, இது பாலாடைக்கட்டியில் ஏராளமாக உள்ளது.
Pic Courtesy: Freepik