Bread Halwa Recipe in Tamil: நம்மில் பலருக்கு அல்வா பிடிக்கும். கருப்பட்டி அல்வா, கேரட் அல்வா, பாதாம் அல்வா, கோதுமை அல்வா, தேங்காய் பால் அல்வா என பல வகையான ஹல்வா கிடைக்கிறது. இருப்பினும், தற்போதும் பிரியாணியுடன் பிரட் அல்வா வைத்து சாப்பிடும் மோகம் மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. வீட்டிலேயே சுவையான பிரட் அல்வா செய்வது எப்படி என இங்கே பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பிரட் - 4 துண்டுகள்
நெய் - 6 தேக்கரண்டி
தண்ணீர் - 1 கப்
சர்க்கரை - 100 கிராம்
ஏலக்காய் தூள் - 3/4 தேக்கரண்டி
ரோஸ் எசென்ஸ் - 1/2 தேக்கரண்டி
பேரீச்சம் பழம் - 4 விதை நீக்கி நறுக்கியது
காய்ச்சி ஆறவைத்த பால் - 2 கப்
வறுத்த முந்திரி பருப்பு - 10
வறுத்த திராட்சை - 8
இந்த பதிவும் உதவலாம்: Walnut Halwa: ஒரு கப் வால்நட்ஸ் இருந்தால் போதும்… ஆரோக்கியமான வால்நட்ஸ் அல்வா செய்யலாம்!
பிரட் அல்வா செய்முறை:
- பிரட் துண்டின் ஓரங்களை நீக்கி, சிறிய துண்டுகளாக நறுக்கவும்.
- கடாயில் நெய் ஊற்றி, பிரட் துண்டுகளை டோஸ்ட் செய்யவும்.
- இருபுறமும் பொன்னிறமானதும், எடுத்து வைக்கவும்.
- அடுத்து பேன்'னில் தண்ணீர் ஊற்றி, சர்க்கரை போட்டு கரைக்கவும்.
- சர்க்கரை கரைந்ததும், இதில் ஏலக்காய் தூள் மற்றும் ரோஸ் எசென்ஸ் சேர்த்து கொதிக்கவைக்கவும்.
- சர்க்கரை பாகு சிறிது கெட்டியானதும், இதில் பேரீச்சம் பழம் போட்டு 3 நிமிடம் கொதிக்கவிடவும்.
- அடுத்து இதில் டோஸ்ட் செய்த பிரட் துண்டுகளை போட்டு கிளறவும்.
- இதில் பால் ஊற்றி கிளறவும்.
- இறுதியாக நெய், வறுத்த முந்திரி பருப்பு, வறுத்த திராட்சை சேர்த்து கிளறவும்.
இந்த பதிவும் உதவலாம்: Suraikaai Payasam: பால் பாயாசம் சாப்பிட்டிருப்பீங்க... எப்போதாவது சுரைக்காய் பாயாசம் சாப்பிட்டிருக்கீர்களா?
பிரட் அல்வா நன்மைகள்:
இந்திய இனிப்பு வகையான பிரெட் ஹல்வா, இரும்புச்சத்து, நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் போன்ற ஊட்டச்சத்துக்களைக் கொண்டிருப்பதால் சில ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டிருக்கலாம். இருப்பினும், இதில் அதிக அளவு சர்க்கரை மற்றும் நிறைவுற்ற கொழுப்பும் உள்ளது. எனவே, இதை மிதமாக சாப்பிட வேண்டும்.
இரும்பு: மூளைக்கு ஆக்ஸிஜன் ஓட்டத்தை உதவுகிறது.
நார்ச்சத்து: உணவு நார்ச்சத்தின் நல்ல ஆதாரம்.
ஆக்ஸிஜனேற்றிகள்: ஏலக்காயில் ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளன, அவை செரிமான பிரச்சினைகள், வாய் துர்நாற்றம் மற்றும் வாய் துவாரங்களுக்கு உதவக்கூடும்.
Pic Courtesy: Freepik