ஒரு வாழை இலை போதும்! அருமையான சுவையில் வாழை இலை அல்வா ரெடி.. இப்படி செஞ்சி பாருங்க

How to make sweet banana leaf halwa: அன்றாட வாழ்வில் நாவிற்கு சுவையைக் கூட்டவும், உணவை ஆரோக்கியமாக மாற்றவும் ஏராளமான ரெசிபிகளை நம் வீட்டிலேயே செய்து சாப்பிடலாம். அவ்வாறு நாம் வாழை இலை கொண்டு தயார் செய்யப்படும் இனிப்பான அல்வா தயார் செய்யும் முறை குறித்து காணலாம். மேலும், வாழை இலையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளைக் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
ஒரு வாழை இலை போதும்! அருமையான சுவையில் வாழை இலை அல்வா ரெடி.. இப்படி செஞ்சி பாருங்க

How to make sweet banana leaf halwa at home: முக்கனிகளான மா, பலா மற்றும் வாழை என மூன்றுமே பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்கக்கூடியதாகும். குறிப்பாக, இதில் எண்ணற்ற நன்மைகளை அளிக்கக் கூடிய வகையில் வாழை தனிச்சிறப்பு பெற்று விளங்குகிறது. ஏனெனில் வாழை மரத்தின் இலை, தண்டு, பூ, பழம் போன்ற அனைத்துமே சாப்பிடக் கூடியதாகவும், உடலுக்குப் பல நன்மைகளை வழங்கக் கூடியதாகவும் விளங்கக்கூடிய சிறப்பு மிக்க ஒன்றாகும். இது வாழையைத் தவிர வேறு எந்த மரத்திற்கும் சாத்தியமாகாது. இதில் அனைவருக்கும் ஒரு கேள்வி எழும்.

வாழை இலையில் சாப்பிட முடியும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், வாழை இலையையே சாப்பிட முடியுமா என்ற கேள்வி அனைவருக்கும் எழும். ஆம். உண்மையில், வாழை இலையைக் கொண்டு அருமையான சுவையில் வாழை இலை அல்வாவைத் தயார் செய்யலாம். நீங்கள் படித்தது உண்மை தான். நாம் பலவிதமான அல்வாவை சுவைத்திருப்போம். ஆனால், இந்த அல்வா சுவையானது மட்டுமல்லாமல், ஆரோக்கியம் நிறைந்ததும் ஆகும். இதில் ஆரோக்கியம் நிறைந்த வாழை இலை அல்வாவைத் தயார்செய்யும் முறை மற்றும் அதன் நன்மைகள் குறித்து காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Banana Leaf Benefits: ஆரோக்கியமான ருசியை சுவைக்க வாழை இலையில் சாப்பிடுங்க!

வாழை இலை அல்வா தயாரிக்கும் முறை

தேவையான பொருள்கள்

  • சாப்பாட்டு வாழை இலை - 1
  • கான்பிளவர் மாவு - 1/2 கப்
  • ஏலக்காய் பொடி - ஒரு டீஸ்பூன்
  • முந்திரி - 10
  • சர்க்கரை - 100 கிராம்
  • தண்ணீர் - முக்கால் கப் முதல் 1 கப் வரை

வாழை இலை அல்வா செய்வது எப்படி?

  • முதலில் வாழை இலையை எடுத்து, அதை நன்றாக கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
  • பிறகு அதை மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் விட்டு அரைத்துக்கொள்ளலாம்.
  • அதன் பின், அரைத்த விழுதை வடிகட்டிக் கொள்ள வேண்டும்.
  • வடிகட்டிய விழுதுடன் கான்பிளவர் மாவை சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.
  • பின் கடாய் ஒன்றில் நெய் விட்டு சூடானதும் முந்திரியை சேர்த்து வறுத்து தனியே எடுத்து வைத்துக் கொள்ளலாம்.
  • மீதியுள்ள அதே நெய்யில் கரைத்து வைத்த வாழை இலை கலவையை சேர்த்து கலக்க வேண்டும்.
  • இதில் ஏலக்காய் பொடி மற்றும் சர்க்கரை போன்றவற்றை சேர்த்து கலக்கலாம்.
  • இதைக் கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.
  • இது நன்றாக சுருண்டு வரும் அளவு கிளறி அதில் ஒரு டேபிள்ஸ்பூன் நெய் மற்றும் முந்திரியை சேர்த்து கலக்கலாம்.
  • இப்போது சுவையான வாழை இலை அல்வா தயாராகி விட்டது.

வாழை இலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

செரிமான ஆரோக்கியத்திற்கு

வாழை இலைகளில் உள்ள பயோஆக்டிவ் பைட்டோநியூட்ரியண்ட்கள் செரிமான பிரச்சனைகளை மேம்படுத்த உதவுகிறது. இதில் உள்ள ப்ரீபயாடிக்குகள் நல்ல குடல் தாவரங்களை வளர்க்கவும், நல்ல ஆரோக்கியத்திற்கு அவசியமான நுண்ணுயிரியல் சமநிலையை ஆதரிக்கவும் உதவுகின்றன. மேலும் இதில் உள்ள நார்ச்சத்துக்கள் மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து விடுபட உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு முதல்.. புற்றுநோய் எதிர்ப்பு வரை.. வாழை இலை செய்யும் அற்புதங்கள் இங்கே..

ஃப்ரீ ரேடிக்கல்களுக்கு எதிராக

வாழை இலைகளில் உள்ள பாலிபினால்கள் ஒரு கரிம ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது. இது செல்களுக்குத் தீங்கு விளைவிக்கும் மற்றும் பல உடல்நலப் பிரச்சினைகளுடன் தொடர்புடைய ஃப்ரீ ரேடிக்கல்களுக்கு எதிராக உடலைப் பாதுகாக்க உதவுகிறது. மேலும் இது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது.

image
digestion

இயற்கை கிருமி நாசினியாக

வாழை இலையில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உணவில் உள்ள ஆபத்தான பாக்டீரியாக்களை இயற்கையாகவே அழிக்க உதவுகிறது. வாழை இலைகளைப் பயன்படுத்தி உணவு உண்பது, உணவு மூலம் பரவும் தொற்றுகளால் ஏற்படும் நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது.

சளி மற்றும் காய்ச்சலுக்கு வாழை இலை

இன்று மக்கள் பெரும்பாலும் சளி மற்றும் இருமலால் அவதியுறுகின்றனர். ஆனால், இந்த வகையான நோய்களுக்கு வாழை இலைகளைப் பயன்படுத்தி சிகிச்சையளிக்கலாம். மேலும், இதில் காணப்படக்கூடிய சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றிகள் லேசான நோய்களில் சிலவற்றின் சுய சிகிச்சைக்கு உதவுகிறது.

வாழை இலைகளை உட்கொள்வதாலோ அல்லது வாழை இலைகளில் உணவை உட்கொள்வதன் மூலமோ இது போன்ற ஏராளமான நன்மைகளைப் பெறலாம். எனினும், வேறு சில உடல்நலப் பிரச்சனைகளைக் கொண்டிருப்பவர்கள் வாழை இலை அல்வா சாப்பிடுவதற்கு முன்னதாக மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: Vaazhai ilai Nanmai: வாழை இலையில் உணவு சாப்பிட்டால் இவ்வளவு நல்லதா?

Image Source: Freepik

Read Next

சீனி சாப்பிடுவதை சட்டுனு நிறுத்தினால் என்ன ஆகும் தெரியுமா.?

Disclaimer