Bread Burfi in Tamil: நம்மில் பலருக்கு பர்பி பிடிக்கும். கடலை பர்பி, தேங்காய் பர்பி என பல வகையான பர்பிகளை சாப்பிட்டிருப்போம். ஆனால், எப்போதாவது பிரட் பர்பி பற்றி கேள்விப்பட்டதுண்டா? வெறும் 4 துண்டு பிரட் இருந்தால் போதும் சுவையான பிரட் பர்பி செய்யலாம். வாருங்கள் வெறும் 20 நிமிடத்தில் ஆரோக்கியமான மற்றும் சுவையான பிரட் பர்பி செய்வது எப்படி என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பிரவுன் பிரட் தூள் - 2 கப்
பால் - 1 1/2 கப்
துருவிய தேங்காய் - 1 கப்
சர்க்கரை - 1 கப்
நெய் - கால் கப்
ஏலக்காய்த்தூள் - 1/2 தேக்கரண்டி
ரோஸ் வாட்டர் - 3/4 தேக்கரண்டி
முந்திரி பருப்பு - 10
திராட்சை - 8
இந்த பதிவும் உதவலாம்: Suraikaai Payasam: பால் பாயாசம் சாப்பிட்டிருப்பீங்க... எப்போதாவது சுரைக்காய் பாயாசம் சாப்பிட்டிருக்கீர்களா?
பிரட் பர்பி செய்முறை:
- பிரட் துண்டுகளை மிக்ஸியில் போட்டு தூளாக அரைக்கவும்.
- அரைத்த தூளை கிண்ணத்தில் போட்டு, பால் ஊற்றவும்.
- பத்து நிமிடம் ஊறவைக்கவும். சூடு செய்து, நெய் ஊற்றவும்.
- துருவிய தேங்காய் போட்டு, 2 - 3 நிமிடம் வறுக்கவும்.
- அடுத்து இதில் சர்க்கரை போட்டு கிளறவும்.
- சர்க்கரை சிறிது கரைந்ததும், பிரட் பால் கலவை'யை போடவும்.
- பால் சுண்டும் வரை கிளறவும்.
- அடுத்து நெய் ஊற்றி கிளறவும்.
- இறுதியாக ஏலக்காய் தூள், ரோஸ் வாட்டர் சேர்த்து கிண்டவும்.
- முந்திரி பருப்பு, திராட்சை போட்டு கிண்டவும்.
- தட்டை நெய் ஊற்றி நன்கு தடவி வைக்கவும்.
- செய்த பிரட் பர்பி கலவையை தட்டில் போட்டு சமன் செய்யவும்.
- சூடாக இருக்கும் போதே கத்தியால் மார்க்கிங் செய்யவும்.
- 2 மணி நேரம் பிரிட்ஜ்'ஜில் வைக்கவும்.
- பின் துண்டுகளாக வெட்டவும்.
- ஒவ்வொரு துண்டிலும் பாதாம் வைத்து பரிமாறவும்.
பிரட் சாப்பிடுவதன் நன்மைகள்:
நார்ச்சத்து
ரொட்டியில் நார்ச்சத்து உள்ளது. இது செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் வயிறு நிரம்பியதாக உணர உதவுகிறது. நார்ச்சத்து இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்கவும் உதவும்.
வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள்
ரொட்டியில் பி வைட்டமின்கள், ஃபோலேட், மாங்கனீசு, செலினியம், துத்தநாகம், மெக்னீசியம், கால்சியம், இரும்பு மற்றும் வைட்டமின் டி உள்ளிட்ட பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன.
இந்த பதிவும் உதவலாம்: வெறும் 4 துண்டுகள் பிரட் போதும்... 10 நிமிடத்தில் சுவையான பிரட் அல்வா தயார்!
புரதம்
ரொட்டியில் புரதம் உள்ளது. இது திசுக்களை உருவாக்குவதற்கும் சரிசெய்வதற்கும், நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆதரிப்பதற்கும், தசை வெகுஜனத்தை பராமரிப்பதற்கும் முக்கியமானது.
எடை இழப்பு
ரொட்டியில் உள்ள நார்ச்சத்து நீண்ட நேரம் முழுதாக உணர உதவும். இது எடை இழப்புக்கு உதவும்.
நீரிழிவு மேலாண்மை
முழு தானிய ரொட்டியில் உள்ள நார்ச்சத்து இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதைத் தடுக்க உதவும். இது நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும்.
இந்த பதிவும் உதவலாம்: Aval Kesari: ரவை கேசரி.. சேமியா கேசரி தெரியும்.. அவல் கேசரி தெரியுமா? இதோ ரெசிபி!
கர்ப்பம்
ரொட்டியில் உள்ள ஃபோலேட் (ஃபோலிக் அமிலம்) ஸ்பைனா பிஃபிடா போன்ற நரம்புக் குழாய் குறைபாடுகளைத் தடுக்க உதவும்.
Pic Courtesy: Freepik