Raksha Bandhan Special: உங்க அண்ணனுக்கு இப்படி ஒரு அசத்தலான ஸ்வீட் செஞ்சி கொடுங்க.. நிறைய கிஃப்ட் கிடைக்கும்.!

Sweet Without White Sugar: ராக்ஷாபந்தன் அன்று, உங்கள் சகோதரருக்கு இந்த ஸ்வீட் செஞ்சி கொடுங்க. இதில் எந்த ப்ரிசர்வேட்டிவ்களும் கிடையாது. ரொம்ப நல்லது. ஸ்வீட் ரெசிபி இங்கே.
  • SHARE
  • FOLLOW
Raksha Bandhan Special: உங்க அண்ணனுக்கு இப்படி ஒரு அசத்தலான ஸ்வீட் செஞ்சி கொடுங்க.. நிறைய கிஃப்ட் கிடைக்கும்.!


சகோதரன்–சகோதரிக்கு இடையிலான பாசத்தை நினைவுகூரும் ராக்ஷாபந்தன் பண்டிகை வந்துவிட்டது. இனிப்புகள் இல்லாமல் அது நிறைவடையாது. ஆனால் இன்றைய காலத்தில் அதிக அளவில் சேர்க்கப்படும் வெள்ளை சர்க்கரை, கெடுபிடியான நிறமூட்டிகள், ப்ரிசர்வேட்டிவ்கள் போன்றவை உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடும். அதனால், ஆரோக்கியத்தையும், பாசத்தையும் இணைக்கும் "இயற்கை இனிப்பு" ரெசிபி தான் இப்போது பார்க்கப் போகிறோம்.

சர்க்கரை மாற்று..

நாம் உணவில் உபயோகிக்கும் வெள்ளை சர்க்கரை ரத்த சர்க்கரையை திடீரென உயர்த்தி, உடல் எடையை அதிகரித்து, நீரிழிவு, இதய நோய் போன்ற பிரச்சனைகளை உண்டாக்கும் அபாயம் அதிகம். எனவே, இயற்கையாக இனிப்பளிக்கும் பனங்கற்கண்டு, தேன், பேரீச்சம்பழம், நாட்டுச் சர்க்கரை போன்ற பொருட்களை பயன்படுத்தினால், உடல் நலனும், சுவையும் இரண்டும் கைகூடும்.

artical  - 2025-08-08T230106.744

ஆரோக்கியமான.. அசத்தலான ஸ்வீட் ரெசிபி

தேவையான பொருட்கள்

  • பேரீச்சம்பழம் – 1 கப் (கொட்டைகள் நீக்கி)
  • பச்சை பயறு – 1/2 கப்
  • முந்திரி – 10
  • பாதாம் – 10
  • பிஸ்தா – 5
  • நெய் – 2 டேபிள் ஸ்பூன்
  • ஏலக்காய் பொடி – 1/2 டீஸ்பூன்
  • பனங்கற்கண்டு பொடி – 2 டேபிள் ஸ்பூன் (தேவைப்பட்டால் மட்டும்)

இதையும் படிங்க: ஹல்வாவை மிஞ்சும் சுவை.. செஞ்ச உடனே காலியாகும் அசத்தல் ஸ்வீட்.. செட்டிநாடு ஸ்பெஷல் உக்கரை.. இப்போவே செஞ்சி பாருங்க..

செய்முறை

  • வாணலியில் நெய் சேர்த்து பச்சை பயிறை மிதமான சூட்டில் வறுத்துக்கொள்ளவும். லேசாக பொன்னிறமாகி, வாசனை வரும் வரை வறுக்கவும். வறுபட்டதும், அதை குளிர வைத்து, மிக்ஸியில் சேர்த்து பொடியாக்கி எடுத்துக்கொள்ளவும்.
  • அதே வாணலியில் முந்திரி, பாதாம், பிஸ்தாவை நெய்யில் லேசாக வறுக்கவும். குளிர்ந்ததும் கொஞ்சம் தட்டி, சிறிய துண்டுகளாக வைத்துக் கொள்ளவும்.
  • பேரீச்சம்பழங்களை மிக்சியில் மென்மையாக அரைக்கவும். பேரீச்சம்பழமே இனிப்புக்கு போதுமானது, ஆனால் அதிக இனிப்பு விரும்புவோர் பனங்கற்கண்டு பொடி சேர்க்கலாம்.
  • வாணலியில் 1 டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து, அரைத்த பேரீச்சம் பழத்தை சேர்த்து 2–3 நிமிடம் கிளறவும். அதில் வறுத்த பருப்பு பொடியைச் சேர்த்து, நன்கு கலக்கவும். வறுத்த முந்திரி, பாதாம், பிஸ்தா, ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  • கைகளில் நெய் தடவி, சூடாக இருக்கும்போதே சிறிய உருண்டைகளாக உருட்டி எடுக்கவும்.
  • அவ்வளவு தான் அற்புதமான பாசி பயிறு லட்டு ரெடி. இது சுவையி மட்டுமல்ல, ஆரோக்கியத்திலும் சிறந்தது.
  • லட்டுகளை காற்று புகாத டப்பாவில் வைத்து, 7–10 நாட்கள் வரை சேமிக்கலாம்.
  • ராக்ஷாபந்தன் தினத்தில் அழகான தட்டில் வைத்து, சகோதரனுக்கு பரிமாறி, பாச பந்தத்தை இனிமையாக்குங்கள்.

artical  - 2025-08-08T225954.961

ஆரோக்கிய நன்மைகள்

பேரீச்சம்பழம்: இரும்புச் சத்து, நார்ச்சத்து நிறைந்து, இரத்தசோகையை தடுக்கும்.

பச்சைப் பயறு பருப்பு: புரதம் நிறைந்ததால் தசைகள் மற்றும் எலும்புகள் வலுவாகும்.

முந்திரி, பாதாம், பிஸ்தா: நல்ல கொழுப்புச்சத்து, மூளைக்குச் சக்தி.

பனங்கற்கண்டு: உடல் வெப்பத்தை குறைத்து, சக்தியை அதிகரிக்கும்.

உடலுக்கு – பாசத்துக்கும் நல்லது!

ராக்ஷாபந்தன் என்றால் பாசம், பாசம் என்றால் இனிப்பு. ஆனால் இன்று பாசத்தையும் ஆரோக்கியத்தையும் சேர்க்கும் வகையில், ரசிக்கத்தக்க இயற்கை இனிப்பு செய்வது தான் சிறந்த தேர்வு. இந்த ஆரோக்கிய லட்டு ரெசிபி, உங்கள் உறவுகளை இன்னும் இனிமையாக்கும்.

 

Read Next

அடிச்சி நவுத்து.! Cancer முதல்.. Weight loss வரை.. கோவக்காய் செய்யும் அற்புதங்கள் இங்கே..

Disclaimer