நம்ம ஊருக்கே உரிய காய்கறிகளில் ஒன்றான கோவக்காய் (Ivy Gourd) — “மலை வெள்ளரி” என்றும் சில இடங்களில் அழைக்கப்படுகிறது. பொரியல், குழம்பு, சட்னி, அவியல் என பலவிதமாக சமைத்து சாப்பிடக்கூடிய இந்த காய்கறி, சுவையோடு மட்டுமல்லாமல், பல அற்புதமான மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது.
குறிப்பாக புற்றுநோய் தடுப்பதில் இருந்து உடல் எடை குறைக்கும் வரை பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கோவக்காய் வழங்குகிறது என்பது விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. கோவக்காயின் முழுமையான மருத்துவ குணங்கள், அதை எவ்வாறு தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளலாம், மற்றும் நம் உடலுக்கு தரும் அற்புத பலன்கள் பற்றி இங்கே விரிவாக பார்ப்போம்.
கோவக்காய் சாப்பிடுவதன் நன்மைகள்
புற்றுநோயைத் தடுக்கக் கூடிய சக்தி
கோவக்காய், இயற்கையான ஆன்டி-ஆக்ஸிடென்ட்களான பிளேவோனாய்ட்ஸ் மற்றும் பீட்டா கரோட்டின் போன்ற ஊட்டச்சத்துக்களை அதிக அளவில் கொண்டுள்ளது. இவை நம் உடலில் உள்ள Free Radicals என்பவற்றை நீக்கி, செல்களின் சேதத்தைத் தடுக்கும். இதனால், புற்றுநோய் ஏற்படும் ஆபத்து குறைகிறது. குறிப்பாக மார்பக புற்றுநோர், குடல் புற்றுநோய் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கும் திறன் கோவக்காயில் உள்ளது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
உடல் எடையை குறைக்க உதவும்
உடல் எடையை குறைக்க முயற்சி செய்பவர்களுக்கு கோவக்காய் ஒரு சிறந்த நண்பன். இதில் குறைந்த கலோரி மற்றும் அதிக நார்ச்சத்து உள்ளது. இது நீண்ட நேரம் பசியை அடக்கி வைக்கிறது. இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தி, தேவையற்ற கொழுப்பு சேர்வதை தடுக்கும். பொரியல், கூட்டு, சாலட் போன்ற வடிவங்களில் கோவக்காயை சேர்த்துக்கொள்வதால், டயட் பிளானில் பெரிய மாற்றத்தை காணலாம்.
மேலும் படிக்க: Egg Lover-களுக்கான Good News! இதை தினமும் சாப்பிடுவதால் ஏற்படும் ஆச்சரியங்கள்!
நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும்
கோவக்காய், இன்சுலின் சென்சிடிவிட்டியை அதிகரித்து, இரத்த சர்க்கரையை இயற்கையாக கட்டுப்படுத்தும் திறன் கொண்டது. சில மருத்துவ ஆய்வுகள், தினசரி கோவக்காய் சாப்பிடுவதால், நீரிழிவு நோயாளிகளின் Fasting Blood Sugar அளவு குறைந்தது என்று காட்டுகின்றன.
செரிமானத்தை மேம்படுத்தும்
கோவக்காயில் உள்ள நார்ச்சத்து, குடல் இயக்கத்தை சீராக்கி, மலச்சிக்கலைத் தடுக்கும். மேலும், வயிற்றில் அமிலம் அதிகரிப்பதை குறைத்து, அஜீரணம், வயிறு உப்புசம் போன்ற பிரச்சினைகளில் நிவாரணம் தருகிறது.
இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும்
கோவக்காய், கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து, இரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுவதைத் தடுக்கிறது. இதனால், இதயக் கோளாறுகள் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் குறைகிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை உயர்த்தும்
விட்டமின் C, விட்டமின் A, துத்தநாகம் (Zinc) மற்றும் இரும்பு (Iron) நிறைந்த கோவக்காய், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மழைக்காலம், குளிர்காலம் போன்ற காலங்களில் தொற்றுநோய்கள் தாக்காமல் காக்கும் இயற்கை கவசமாகும்.
கல்லீரல் ஆரோக்கியம்
கோவக்காய், கல்லீரலில் கொழுப்பு தேங்குவதைத் தடுத்து, Fatty Liver நோயிலிருந்து பாதுகாக்கும். மேலும், கல்லீரல் செயல்பாடுகளை சீராக வைத்திருக்க உதவுகிறது.
தோல் மற்றும் முடி ஆரோக்கியம்
கோவக்காயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடென்ட்கள், தோலின் முதுமையை தாமதப்படுத்தி, பிம்பிள், கரும்புள்ளி போன்ற பிரச்சினைகளை குறைக்கும். இரும்பு மற்றும் விட்டமின் B-காம்ப்ளக்ஸ் நிறைந்ததால், முடி வளர்ச்சிக்கும் உதவுகிறது.
கோவக்காயை சாப்பிடும் சிறந்த முறைகள்
பொரியல்
சாம்பார் / கூட்டு
சாலட்
சட்னி
கவனிக்க வேண்டியவை
கோவக்காய் நன்றாக கழுவி சமைக்க வேண்டும். அதிக எண்ணெயில் வறுக்காமல், வேகவைத்தோ, சின்ன அளவு எண்ணெயில் பொரித்தோ சாப்பிடுவது சிறந்தது.
குறிப்பு
புற்றுநோய் தடுப்பு முதல் உடல் எடை குறைப்பு, நீரிழிவு கட்டுப்பாடு முதல் இதய ஆரோக்கியம் வரை, கோவக்காய் நம் உடலுக்குத் தரும் நன்மைகள் அளவிட முடியாதவை. இந்த மலிவு விலை, எளிதில் கிடைக்கும் காய்கறியை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வது, ஒரு இயற்கை மருத்துவத்தையே நம் வீடு வரை கொண்டு வரும்.