is eating ivy gourd good for diabetics patients: முன்பெல்லாம் முதியவர்கள் மட்டுமே நீரிழிவு நோய்க்கு பாதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது சிறுவர்களும் சர்க்கரை நோயால் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு பல காரணங்கள் இருந்தாலும், செயலாற்ற வாழ்க்கை முறையும் தவறான உணவு பழக்கமும் முக்கிய காரணமக கருதப்படுகிறது. சர்க்கரை நோயை முழுமையாக குணப்படுத்த முடியாது என்றாலும், உணவு கட்டுப்பாடு மூலம் இதை கட்டுக்குள் வைக்கலாம்.
சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி கோவக்காய் சாப்பிடுவதை நாம் பார்த்திருப்போம். இது நீரிழிவு நோயாகிகளுக்கு மிகவும் நல்லதாக கருதப்படுகிறது. கோவக்காயில் வைட்டமின்-பி2 மற்றும் பி-6 உள்ளது. இந்த கூறுகள் உடலில் ஆற்றலை உற்பத்தி செய்து, சருமத்தை பளபளப்பாக்குகிறது மற்றும் கண்களுக்கு நன்மை பயக்கும். எனவே, சர்க்கரை நோயாளிகள் தவிர யார் வேண்டுமானாலும் தங்கள் உணவில் கோவக்காயை சேர்த்துக்கொள்ளலாம்.
முக்கிய கட்டுரைகள்
இந்த பதிவும் உதவலாம் : Pulses For Diabetes: சர்க்கரை நோயாளிகள் எந்த பருப்பு உட்கொள்வது நல்லது தெரியுமா?
ஆனால், கோவக்காய் நீரிழிவு நோயாளிகளுக்கு பயனுள்ளதாக இருக்க முடியுமா அல்லது அது அவர்களின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்குமா என்ற கேள்வி உங்களுக்கு இருக்கிறதா? டயட் என் க்யூர் டயட்டீஷியன் மற்றும் ஊட்டச்சத்து நிபுணரான திவ்யா காந்தி இதற்கான விளக்கத்தை நமக்கு வழங்கியுள்ளார். அதை பற்றி இங்கே பார்க்கலாம்.
நீரிழிவு நோயாளிகள் கோவக்காய் சாப்பிடுவது நல்லதா?

நிபுணர்களின் கூற்றுப்படி, கோவக்காய் ஒரு சிறந்த காய்கறி. குறிப்பாக கோடையில் இதை உணவில் சேர்த்துக்கொள்வது மிகவும் நல்லது. ஆனால், நீரிழிவு நோயாளிகள் இதை உட்கொள்ளலாமா? வேண்டாமா? என்பது அவர்களின் உடல்நிலையைப் பொறுத்தது.
கோவக்காய் இரத்த சர்க்கரையை சீராக்க உதவுகிறது என்பது உண்மைதான். எனவே, நீரிழிவு நோயாளிகள் கோவக்காயை உட்கொள்ளலாம். ஏனென்றால், கோவக்காய் இரத்த சர்க்கரை அளவையும் கணிசமாகக் குறைக்கிறது என்பதை மறுக்க முடியாது.
ஒருவேளை உங்களுக்கு இரத்தச் சர்க்கரைக் குறைவு பிரச்சனை இருந்தால், கோவக்காயை உட்கொள்ளக்கூடாது. அதே போல, ஒரு நீரிழிவு நோயாளி இரத்த சர்க்கரையை சமன் செய்ய வழக்கமான மருந்துகளை எடுத்துக் கொண்டால், கோவக்காயை தனது உணவில் சேர்த்துக்கொள்வதற்கு முன் நிபுணர் ஆலோசனையையும் பெற வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம் : Diabetics Fruits: சர்க்கரை வியாதியா? இந்த 3 பழங்களை மட்டும் தோலுடன் சாப்பிட்டு பாருங்கள்!
சர்க்கரை நோயாளிகள் கோவக்காய் சாப்பிடுவதன் நன்மைகள்

எடையைக் கட்டுப்படுத்த உதவும்
நீரிழிவு நோயாளிகள் எப்போதும் தங்கள் எடையைக் கட்டுப்படுத்த வேண்டும். எடை அதிகரித்தால், இரத்த சர்க்கரை அளவுகளில் எதிர்மறையான தாக்கம் உள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே, நிபுணர்கள் எப்போதும் எடையை நிர்வகிக்க பரிந்துரைக்கின்றனர். கோவக்காயில் கலோரிகள் குறைவாகவும், உணவு நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது.
இரத்த அழுத்தத்தை சீராக்கும்
நிபுணர்களின் கூற்றுப்படி, நீரிழிவு நோயாளிகள் தங்கள் இரத்த அழுத்தத்தையும் கண்காணிக்க வேண்டும். கோவக்காய் பொட்டாசியத்தின் நல்ல மூலமாகும். பொட்டாசியம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல், இருதய நோய் அபாயத்தையும் குறைக்கிறது. இந்த வழியில் பார்த்தால், நீரிழிவு நோயாளிகளுக்கும் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த பதிவும் உதவலாம் : Diabetes Risk: எந்த வயதினருக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பும் அதிகம்?
நீரிழிவு நோயாளிகள் கோவக்காயை தங்கள் சமச்சீர் உணவின் ஒரு பகுதியாக மாற்ற முடியுமா இல்லையா என்பது அவர்களின் ஆரோக்கியமான நிலையைப் பொறுத்தது. கோவக்காயின் உதவியுடன் இரத்த சர்க்கரை அளவை குறைக்க முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே, நீங்கள் அதை உங்கள் உணவின் ஒரு பகுதியாக மாற்றும் போதெல்லாம், நிச்சயமாக நிபுணர்களின் ஆலோசனையைப் பெறுங்கள்.
Pic Courtesy: Freepik