Diabetics Fruits: சர்க்கரை வியாதியா? இந்த 3 பழங்களை மட்டும் தோலுடன் சாப்பிட்டு பாருங்கள்!

  • SHARE
  • FOLLOW
Diabetics Fruits: சர்க்கரை வியாதியா? இந்த 3 பழங்களை மட்டும் தோலுடன் சாப்பிட்டு பாருங்கள்!


Diabetics Fruits: உணவே மருந்து என கூறுவதுண்டு. இது யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ சர்க்கரை நோயாளிகளுக்கு முற்றும் பொருத்தமாக இருக்கும். சர்க்கரை நோயாளிகளுக்கு உணவு முறை என்பது மிக முக்கியம். உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது மிக முக்கியம்.

குறிப்பாக கோடை காலத்தில் அலட்சியமாக இருக்கக் கூடாது. கோடை காலத்தில் உணவு முறையில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். கோடையில் சர்க்கரை நோயாளிகள் மட்டுமல்ல அனைவரும் உணவு முறையில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

தோலுடன் சாப்பிட வேண்டிய பழங்கள்

கோடையில் உணவு முறையில் பழங்களை கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும். பழச்சாறு போன்றவைகளையும் உணவுமுறையில் கட்டாயம் சேர்த்துக் கொள்ளலாம். பழங்களில் இனிப்பு தன்மை இருக்கும் இதனால் சர்க்கரை நோயாளிகள் பழங்களை சாப்பிடலாமா வேண்டாமா என்ற சந்தேகம் வரும்.

குறிப்பிட்ட 3 பழங்கள் சாப்பிடவது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகுந்த நன்மை பயக்கும். அதுவும் தோலுடன் சாப்பிட்டால் ஆகச்சிறந்த நன்மை.

சர்க்கரை நோயாளிகள் தோலுடன் இந்த பழங்களை சாப்பிட்டு பாருங்கள்

சர்க்கரை நோயாளிகளுக்கு ஆப்பிள் நன்மைகள்

சர்க்கரோ நோயாளிகளுக்கு ஆப்பிள் மிகவும் நன்மை பயக்கும். தாராளமாக தினமும் ஒரு ஆப்பிளை சர்க்கரை நோயாளிகள் தோலுடன் சாப்பிடலாம். இது ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது.

சர்க்கரை நோயாளிகளுக்கும் இது ஒரு நல்ல பழமாகும். சர்க்கரை நோயாளிகள் விரும்பினால் இதை ஒரு சிற்றுண்டியாகவும் சாப்பிடலாம். ஆப்பிள் தோல்களில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ மற்றும் நார்ச்சத்து போன்ற பல ஊட்டச்சத்துக்கள் இருப்பதாக நிபுணர்கள் நம்புகின்றனர். இதன்காரணமாக இதை தோலுடன் அப்படியே முழுமையாக சாப்பிடலாம்.

கொய்யா சாப்பிடலாம்

கொய்யாப்பழம் நீரிழிவு நோயாளிகளுக்கும் மிகவும் பயனுள்ள பழமாகும். இது குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது. இந்த பழம் வகை -1 மற்றும் வகை -2 நீரிழிவு நோயாளிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். எந்தவொரு பழத்தையும் குறைந்த அளவில் மட்டுமே உட்கொள்ள வேண்டும்.

எந்தவொரு பழத்தையும் குறைந்த அளவில் மட்டுமே உட்கொள்ள வேண்டும். இது தவிர, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சமன் செய்ய விரும்பும் அனைவருக்கும் இந்த பழம் நன்மை பயக்கும். கொய்யாப்பழத்தை பொறுத்தவரை அதன் தோல்கள் மிக ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது. இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சமன் செய்ய விரும்பும் அனைவருக்கும் இந்த பழம் நன்மை பயக்கும்.

கொய்யா தோல்கள் மற்றும் விதைகளில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, மெக்னீசியம், இரும்பு, பொட்டாசியம், பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இது தவிர, இதில் புற்றுநோய் எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு மற்றும் செரிமானத்தை மேம்படுத்தும் கூறுகள் உள்ளன. இது நீரிழிவு நோயாளிகளுக்கும் நன்மை பயக்கும்.

வாழைப்பழ தோல்

வாழைப்பழம் மிக ஆரோக்கியமான பழமாகும். வாழைப்பழம் மட்டுமல்ல அதன் தோலும் மிக ஆரோக்கியம் வாய்ந்ததாகும். நீரிழிவு நோயாளிகளுக்கு வாழைப்பழத் தோல்கள் மிகவும் நன்மை பயக்கும்.

வாழைப்பழத் தோலில் ஃபிளாவனாய்டுகள், டானின்கள் போன்ற பைட்டோ கெமிக்கல் கலவைகள் காணப்படுகின்றன. இது இரத்த சர்க்கரையை நிர்வகிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிப்பதைத் தடுக்கிறது மற்றும் இரத்த சர்க்கரையை நிர்வகிக்க உதவுகிறது.

Image Source: FreePik

Read Next

Meal Timing for Diabetes: சர்க்கரை நோயாளிகள் டின்னர் சாப்பிட சரியான நேரம் எது?

Disclaimer

குறிச்சொற்கள்