Best And Worst Time To Eat Dinner For Diabetics: செயலாற்ற வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவுப்பழக்கத்தால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பல்வேறு நோய்க்கு பலியாகி வருகின்றனர். குறிப்பாக பத்தில் இருவர் சர்க்கரை நோயால் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றனர். நீரிழிவு நோயாளிகள் சரியான உணவைப் பின்பற்றுவது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு சரியான நேரத்தில் உணவைச் சாப்பிடுவதும் முக்கியம். ஒரு நபர் சரியான நேரத்திற்கு உணவை உண்ணும்போது, அவரது உடல்நிலை மேம்படும்.
மேலும், அவர் அதிகமாக சாப்பிடுவதைத் தவிர்க்கிறார் மற்றும் செரிமான பிரச்சனையும் குறையும். குறிப்பாக, நீரிழிவு நோயாளிகளுக்கு இது மிகவும் முக்கியமானது, இதனால் அவர்களின் இரத்த சர்க்கரை அளவு சீராக இருக்கும். அத்துடன், அவர்கள் இரத்த சர்க்கரையை சமநிலைப்படுத்த கூடுதல் கடினமாக உழைக்க வேண்டியதில்லை. என்னதான் நீரிழிவு நோய் குறித்து பெரும்பாலான தகவல் நமக்கு தெரிந்திருந்தாலும், சில கேள்விகள் நமது மனதில் எப்போதும் இருக்கும்.
முக்கிய கட்டுரைகள்
இந்த பதிவும் உதவலாம் : Vegetables For Diabetics: சர்க்கரை நோயாளிகள் கோடை காலத்தில் கட்டாயம் சாப்பிட வேண்டிய காய்கறிகள்!
குறிப்பாக, நீரிழிவு நோயாளிகள் இரவு உணவு சாப்பிட சரியான நேரம் எது? என்ற கேள்வி. ஆரோக்கியமான ஒருவர் இரவில் எப்போது வேண்டுமானாமலும் இரவு உணவை சாப்பிடுவார். ஏனென்றால், அவருக்கு இதனால் எந்த எதிர்மறையான தாக்கமும் ஏற்படாது. ஆனால், நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும். டயட் என் க்யரின் டயட்டீஷியனும் ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா காந்தி, நீரிழிவு நோயாளிகள் இரவு உணவு சாப்பிட சரியான நேரம் எது? என்பது பற்றி நமக்கு கூறியுள்ளார்.
சர்க்கரை நோயாளி இரவு உணவு சாப்பிட சரியான நேரம் எது?
சர்க்கரை நோயாளிகள் எவ்வளவு முன்னதாக இரவு உணவை சாப்பிடுகிறாரோ, அவ்வளவுக்கு அவர்களின் உடல் நலத்திற்கு அதிக நன்மை கிடைக்கும். சீக்கிரம் சாப்பிடுவது கிளைசெமிக் மேலாண்மை மற்றும் இரத்த சர்க்கரை அதிகரிப்பதைத் தடுக்க உதவும்.
சீக்கிரம் இரவு உணவை உட்கொள்வது கூட, இரவில் இரத்த சர்க்கரை அளவுகளில் தொந்தரவுகள் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது. நிபுணர்களின் கூற்றுப்படி, நீரிழிவு நோயாளிகள் இரவு உணவை மாலை 6 முதல் 7 மணிக்குள் சாப்பிட வேண்டும். இரவு 6 மணி முதல் 7 மணிக்குள் இரவு உணவு உண்பவர்களுக்கு, இரவு 9 மணிக்கு இரவு உணவு உண்பவர்களை விட, ரத்தத்தில் சர்க்கரை அளவு சீராக இருக்கும்.
இந்த பதிவும் உதவலாம் : நீரிழிவு நோயாளிகள் மறந்தும் இந்த பழங்களை சாப்பிடக்கூடாது!
நீரிழிவு நோயாளிகள் இரவு உணவு எப்போது சாப்பிடக்கூடாது?
நீரிழிவு நோயாளிகள் தாமதமாக இரவு உணவை உட்கொள்ளக்கூடாது. இரவு உணவை தாமதமாக சாப்பிடுவது, அவர்களின் இரத்த சர்க்கரை அளவை மோசமாக்கலாம். பொதுவாக, சர்க்கரை நோயாளிகள் இரவு 10.00 மணிக்கு மேல் இரவு உணவு சாப்பிடக் கூடாது. இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திலும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.
சர்க்கரை நோயாளிகள் சரியான நேரத்தில் இரவு உணவை உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்
- நீரிழிவு நோயாளிகள், சரியான நேரத்தில் இரவு உணவை உட்கொள்வதால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைத்திருப்பது மட்டுமல்லாமல், எடையும் கட்டுக்குள் இருக்கும்.
- சரியான நேரத்தில் உணவை உட்கொள்வது தூக்க முறையை மேம்படுத்துகிறது, இது மன ஆரோக்கியத்தில் நல்ல விளைவை ஏற்படுத்துகிறது.
இந்த பதிவும் உதவலாம் : Watermelon Vs Muskmelon: சர்க்கரை நோயாளிகளுக்கு எந்த பழம் சிறந்தது? டாக்டர் கூறுவது இங்கே!
- இது தவிர, இரவு உணவை சீக்கிரமாகச் சாப்பிட்டால், நீரிழிவு நோயாளிகளின் உடலுக்கு உணவை ஜீரணிக்க நேரம் கிடைக்கும். இதனால் இரவில் வயிற்று உப்புசம், அமிலத்தன்மை போன்ற பிரச்சனைகள் ஏற்படாது. கொழுப்பு கூட எளிதில் எரிகிறது.
- சரியான நேரத்தில் உணவு உட்கொள்வதால் செரிமான பிரச்சனைகள் குறைவதோடு, வயிறு தொடர்பான நோய்களும் வராமல் தடுக்கிறது.
Pic Courtesy: Freepik