Are Apples Good for Diabetes: நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவில், குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டிருப்பதால், இரத்த சர்க்கரை அளவை சமநிலைப்படுத்த உதவுகிறது. சர்க்கரை நோயாளிகள் தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துவதை நீங்கள் அடிக்கடி பார்த்திருப்பீர்கள். ஏனெனில், இதில் குறைந்த அளவு சர்க்கரை உள்ளது மற்றும் இரத்த சர்க்கரையை அதிகரிக்காது.
ஆனால், சர்க்கரை நோயாளிகளுக்கு அதிக பலனை தருவது சிவப்பு ஆப்பிளா அல்லது பச்சை ஆப்பிளா? இதில் எது சிறந்தது. உண்மையில், சிவப்பு ஆப்பிளை விட பச்சை ஆப்பிள் அதன் சொந்த சிறப்புகளுக்கு பெயர் பெற்றது. இதில், அதிக அளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. எனவே, நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவில் பச்சை ஆப்பிளை எடுத்துக் கொள்வது நல்லது. இது குறித்த விரிவான தகலவை டயட் என் க்யரின் டயட்டீஷியனும் ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா காந்தி நமக்கு வழங்கியுள்ளார். அவற்றை பற்றி இங்கே பார்க்கலாம்_
முக்கிய கட்டுரைகள்
இந்த பதிவும் உதவலாம் : நீரிழிவு நோயாளிகள் மறந்தும் இந்த பழங்களை சாப்பிடக்கூடாது!
சர்க்கரை நோயாளிகள் சிவப்பு ஆப்பிள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

நிபுணர்களின் கூற்றுப்படி, நீரிழிவு நோயாளிகள் சிவப்பு ஆப்பிள் சாப்பிடலாம். இது ஒரு நல்ல சிற்றுண்டி விருப்பமாக உள்ளது. ஏனெனில், இதில் நல்ல அளவு நார்ச்சத்து உள்ளது. நார்ச்சத்து உட்கொள்வது இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க உதவுகிறது.
இது தவிர, இன்சுலின் அளவை நிர்வகிப்பதிலும் இது முக்கிய பங்கு வகிக்கிறது. இது மட்டுமின்றி, ஆப்பிளில் உள்ள கார்போஹைட்ரேட்டுகளின் அளவு குறைவாக இருப்பதோடு, எடையை சீராக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது. இந்த வழியில் பார்த்தால், நீரிழிவு நோயாளிகள் ஆப்பிளை தங்கள் சமச்சீர் உணவின் ஒரு பகுதியாக மாற்றலாம்.
இந்த பதிவும் உதவலாம் : Diabetes and Sleep: எச்சரிக்கை! தூக்கமின்மையால் ஏற்படும் நீரிழிவு நோய், எப்படி தவிர்ப்பது?
சர்க்கரை நோயாளிகள் பச்சை ஆப்பிள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

சர்க்கரை நோயிலும் பச்சை ஆப்பிளை சாப்பிடலாம். இதில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. பச்சை ஆப்பிளில் உள்ள நார்ச்சத்தை உட்கொள்வதால் நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும். இது டைப்-2 நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைக்கும். அதுமட்டுமின்றி பச்சை ஆப்பிளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது.
இதில், கார்போஹைட்ரேட் மற்றும் இயற்கை சர்க்கரையும் உள்ளது. கார்போஹைட்ரேட்டுகள் நீரிழிவு நோயாளிகளை நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வைத்திருக்கும். இது தவிர, பச்சை ஆப்பிளில் குறைந்த கிளைசெமிக் குறியீடு உள்ளது, இது நீரிழிவு நோயாளிகளுக்கு இன்னும் நன்மை பயக்கும்.
இந்த பதிவும் உதவலாம் : Worst fruits for diabetes: வெயில் காலத்தில் சர்க்கரை நோயாளிகள் மறந்து இந்த பழங்களை சாப்பிடக்கூடாது!
நீரிழிவு நோயாளிகளுக்கு எந்த ஆப்பிள் சிறந்தது?

உண்மையில், நீரிழிவு நோயாளிகள் பச்சை அல்லது சிவப்பு ஆப்பிள் இரண்டையும் சாப்பிடலாம். நீரிழிவு நோயாளிகள் தங்கள் விருப்பம் மற்றும் தேவைக்கு ஏற்ப எதையும் தேர்வு செய்யலாம். ஆனால், சிவப்பு ஆப்பிளுடன் ஒப்பிடும்போது, நீரிழிவு நோயாளிகளுக்கு பச்சை ஆப்பிள் சிறந்த தேர்வாகக் கருதலாம்.
ஏனெனில், அதன் கிளைசெமிக் குறியீடு சிவப்பு ஆப்பிளை விட குறைவாக உள்ளது. சிவப்பு ஆப்பிளை விட பச்சை ஆப்பிளில் அதிக ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அதனால்தான் டைப்-2 நீரிழிவு நோயாளிக்கு பச்சை ஆப்பிளை ஒரு நல்ல தேர்வாகக் கருதலாம்.
Pic Courtesy: Freepik