Diabetes and Sleep: எச்சரிக்கை! தூக்கமின்மையால் ஏற்படும் நீரிழிவு நோய், எப்படி தவிர்ப்பது?

  • SHARE
  • FOLLOW
Diabetes and Sleep: எச்சரிக்கை! தூக்கமின்மையால் ஏற்படும் நீரிழிவு நோய், எப்படி தவிர்ப்பது?

இன்றைய நவீன காலகட்டத்தில் இரவு வெகுநேரம் வரை விழித்திருப்பதையே பலரும் விரும்புகின்றனர். ஆனால், இவ்வாறு தூங்காமல் இருப்பது ஆரம்பத்தில் எந்த அறிகுறிகளையும் கவனிக்காமல் இருக்கலாம். ஆனால், தொடர்ந்து தூங்காமல் இருப்பதால் சோர்வு மற்றும் பலவீனத்தை ஏற்படுத்தலாம். சரியாக தூங்காமல் இருப்பது எவ்வாரு இரத்த சர்க்கரை அளவைப் பாதிக்கிறது என்பது குறித்து காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Summer Diabetics Drinks: கோடையில் சர்க்கரை நோயாளிகள் குடிக்க வேண்டிய முக்கிய ட்ரிங்க்ஸ்!

தூங்காமல் இருப்பதால் நீரிழிவு நோயை ஏற்படுத்துமா?

  • குறுகிய காலத்தில் தூங்குவது, வழக்கமான மூன்று வேளை உணவு முறைகளை விட வழக்கத்திற்கு மாறான உணவுப் பழக்கங்களைக் கொண்டிருப்பதற்கான வாய்ப்புகளை அதிகப்படுத்துகிறது. இது அதிக கலோரிகள் கொண்ட உணவுகளை உண்பதற்கான விளைவாகும். தூக்கமின்மையால் ஆரோக்கியமான உணவைத் தேர்ந்தெடுப்பதற்கான ஒரு நபரின் திறனைக் குறைக்கிறது.
  • தூக்கமின்மை கார்டிசோல் டிஸ்ரெகுலேஷனைத் தூண்டுகிறது. இது இன்சுலின் எதிர்ப்பு மற்றும் உள்ளுறுப்பு கொழுப்புக்கு காரணமாகிறது. இது நீரிழிவு நோய்க்குக் காரணமாகிறது.
  • தூக்கமின்மை இன்சுலின் உணர்திறனைக் குறைக்க காரணமாகிறது. இவ்வாறு உடல் இன்சுலினை திறம்பட பயன்படுத்த போராடுவதால் நீரிழிவு நோயின் அபாயம் தொடங்கலாம். இது உயர் குளுக்கோஸ் அளவை ஏற்படுத்துகிறது.
  • மனநிறைவு மற்றும் அதிகரித்த பசியின் உடலியல் இயக்கங்களுக்கு காரணமான ஹார்மோன்கள் லெப்டின் மற்றும் கிரெலின் ஆகும். இது பசியின்மை சமநிலையை பாதித்து, பசியை அதிகரிக்கிறது. மேலும் இது உடல் பருமனுக்கு வழிவகுக்கலாம். தூக்க சுழற்சியால் ஒட்டுமொத்த வளர்ச்சிதை மாற்ற ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு நீரிழிவு நோய் அபாயத்தை அதிகரிக்கிறது.

இவ்வாறு நீரிழிவு நோய் ஏற்பட தூக்கமின்மை பிரச்சனை காரணமாகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Ginger For Diabetes: இஞ்சியை இப்படி எடுத்துக்கிட்டா சர்க்கரை அளவு டக்குனு குறையுமாம்!

தூக்கமின்மை பிரச்சனையை குறைப்பது எப்படி?

  • தூக்கமின்மை பிரச்சனையை சமாளிக்க, தூங்கும் அறையில் மங்கலான விளக்குகளைப் பயன்படுத்த வேண்டும். இது நல்ல தூக்கத்தைப் பெற உதவுகிறது.
  • தூங்கும் அறை வெப்பநிலையை சாதாரண நிலையில் வைக்க வேண்டும். இதன் மூலம் தூக்கத்தில் ஏற்படும் தடையைப் போக்கலாம்.
  • இரவு நேரத்தில் தூங்கும் மற்றும் எழுந்திருக்கும் நேரத்தைக் குறிப்பிட்டு நிலையான அட்டவணையைப் பின்பற்றலாம். இதை நாளடைவில் வழக்கமாக்கிக் கொள்வது தூக்கமின்மை பிரச்சனையைத் தவிர்க்கிறது.
  • இரவில் தூங்கும் முன் அதிகம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். இது செரிமான பிரச்சனையை ஏற்படுத்தி தூக்கமின்மையை உண்டாக்கலாம்.
  • தூங்குவதற்கு 15 நிமிடங்கள் முன்னதாக இயற்கையான சுவாசப் பயிற்சிகளை மேற்கொள்வது நிலையான மற்றும் சீரான தூக்கத்தைப் பெற உதவுகிறது.

இந்த வகை வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் தூக்கமின்மை பிரச்சனையை சரி செய்ய முடியும். இதன் மூலம் நீரிழிவு நோய் பிரச்சனையைத் தவிர்க்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: சர்க்கரை நோயாளிகள் எவ்வளவு பால் குடிக்கனும் தெரியுமா?

Image Source: Freepik

Read Next

Diabetes and Rice: தினமும் அரிசி சாதம் சாப்பிட்டால் சர்க்கரை நோய் வருமா? உண்மை என்ன?

Disclaimer