Summer Diabetics Drinks: ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உணவு முறை என்பது மிக முக்கியம். குறிப்பாக சர்க்கரை நோயாளிகள். சர்க்கை நோயாளிகள் உணவில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். சற்று தவறினாலும் பாதிப்பு உடனடியாக தென்படும்.
நீரிழிவு நோயில், ஒரு நபரின் உடலில் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. உடல் போதுமான இன்சுலின் ஹார்மோனை உற்பத்தி செய்யாதபோது, இந்த நிலையில் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கத் தொடங்குகிறது. நீரிழிவு நோயாளிகள் இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க அவர்களின் உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
முக்கிய கட்டுரைகள்
கோடை காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள, மக்கள் பல்வேறு வகையான பானங்களை குடிப்பார்கள். ஆனால் நீரிழிவு நோயாளிகள் அப்படி அனைத்து பானத்தையும் குடிக்க முடியாது. சில ஆரோக்கியமான பானங்களை தேர்வு செய்து குடிப்பதே ஆரோக்கியமான வழியாகும்.
நீரிழிவு நோயாளிகளுக்கான சிறந்த பானங்கள்

வெள்ளரி புதினா பானம்
கோடையில் வெள்ளரி மற்றும் புதினா தண்ணீர் குடிப்பது ஆரோக்கியத்திற்கு மிக நன்மை பயக்கும். வெள்ளரியில் குறைந்த கார்போஹைட்ரேட் மற்றும் அதிக நீர்ச்சத்து உள்ளது. கோடையில் வெள்ளரி புதினா பானத்தை குடிப்பதால் உடல் நீர் பற்றாக்குறை சரியாகும். புதினா மற்றும் வெள்ளரிக்காய் உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கிறது. இந்த பானம் சுவையிலும் மிக அருமையாக இருக்கும்.
எனவே, நீங்கள் நீரிழிவு நோயாளிகளாக இருந்தால் இந்த பானத்தை சிந்திக்காமல் குடிக்கலாம். வெள்ளரிக்காய் மற்றும் புதினா இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காது. அதேபோல் இதில் பல நன்மைகள் கிடைக்கும்.
தேங்காய் தண்ணீர்
ஒவ்வொருவரும் கோடையில் தேங்காய் தண்ணீரை கண்டிப்பாக குடிக்க வேண்டும். தேங்காய் நீரில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் எலக்ட்ரோலைட்டுகள் அதிக அளவில் காணப்படுகின்றன. தேங்காய் நீரில் கார்போஹைட்ரேட் குறைவாக உள்ளது. அத்தகைய சூழ்நிலையில், நீரிழிவு நோயாளிகளும் தேங்காய் தண்ணீரை உட்கொள்ளலாம். சர்க்கரை நோயாளிகள் தினமும் ஒரு டம்ளர் தேங்காய் தண்ணீர் குடிப்பது மிக நல்லது.
இது உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்கும். தேங்காய் தண்ணீர் குடிப்பதன் மூலம் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த முடியும். இருப்பினும் தேங்காய் தண்ணீரை அதிக அளவு குடிப்பதை தவிர்ப்பது நல்லது.
எலுமிச்சைப்பழம்
கோடையில் பலரும் பல வகையில் எலுமிச்சை பானத்தை உட்கொள்கிறார்கள். வீட்டிலேயே கூட எலுமிச்சை தண்ணீரை தயார் செய்து குடிக்கலாம். எலுமிச்சை உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக வைத்திருக்கும். மேலும் இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்காது. வீட்டில் தயாரிக்கப்படும் எலுமிச்சை பானத்தில் உப்பு சேர்த்து குடிப்பதே நல்லது.
வெஜிடேபிள் ஜூஸ்
சர்க்கரை நோயாளிகள் பழச்சாறுக்கு பதிலாக காய்கறி சாறு குடிக்கலாம். இது ஆரோக்கியத்திற்கு மிக நன்மை பயக்கும். சுரைக்காய், புதினா, வெள்ளரி, வெள்ளைப் பூசணி போன்றவற்றின் சாறு அருந்தலாம். இருப்பினும், இந்த சாறுகளின் சுவையை அதிகரிக்க சர்க்கரை, உப்பு அல்லது வேறு எதையும் சேர்க்க வேண்டாம்.
Image Source: FreePik