Natural Ways To Prevent Gestational Diabetes: கர்ப்பம் என்பது பெண்களுக்கு ஒரு இனிமையான அனுபவமாக இருப்பினும், இந்த காலகட்டத்தில் மிகவும் கவனமாக இருப்பது அவசியமாகும். இந்த நேரத்தில் அவர்கள் பல உடல் மற்றும் மன மாற்றங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். இதில் முதல் கட்டத்தில், கரு வளர்ச்சியின் காரணமாக, தாய்மார்களுக்கு ஹார்மோன் மாற்றங்கள் விரைவாக நிகழ்கிறது. அதே போல, சில கர்ப்பிணி பெண்கள் இரண்டாவது மற்றும் மூன்றாவது மாதங்களிலேயே நீரிழிவு நோய் அபாயத்தைச் சந்திக்கின்றனர்.
கர்ப்பிணி பெண்களுக்கு நீரிழிவு நோய் ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். இவ்வாறு கர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் நீரிழிவு நோய் கர்ப்பகால நீரிழிவு என்று அழைக்கப்படுகிறது. இது கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு சிரமங்களை அதிகரிக்கும். சில ஆரோக்கியமான வழிமுறைகள் மூலம் கர்ப்ப கால நீரிழிவு நோயைத் தடுக்கலாம். இதில் கர்ப்ப கால நீரிழிவு நோயைத் தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அசோக் நகர் சாய் பாலிகிளினிக்கின் மூத்த மகளிர் மருத்துவ நிபுணர் டாக்டர் விபா பன்சால் அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
இந்த பதிவும் உதவலாம்: Vomiting During Pregnancy: கர்ப்ப காலத்தில் வாந்தி, குமட்டல் ஏற்பட காரணம் என்ன?
கர்ப்ப காலத்தில் சர்க்கரை நோய் வராமல் தடுப்பது எப்படி
கர்ப்ப காலத்தில் நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும். அதிலும் கர்ப்ப காலத்தில் முதல் முறையாக நீரிழிவு நோயைச் சந்திக்கும் பெண்களுக்கு மற்ற உடல்நல பிரச்சனைகளும் அதிகரிக்கலாம். இந்நிலையில் பெண்களின் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகிறது. எனினும், சில சமயங்களில் இந்தப் பிரச்சனை பிரசவத்திற்குப் பின் தானாகவே சாதாரணமாகி விடலாம். சில ஆரோக்கியமான வழிகளை மேற்கொள்வதன் மூலம், கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் நீரிழிவு நோயைத் தவிர்க்க முடியும்.
உணவு பாதுகாப்பு
பொதுவாக நீரிழிவு நோய் ஏற்படுவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று உணவுக் கட்டுப்பாடு ஆகும். எனவே கர்ப்பிணி பெண்கள் கர்ப்ப காலத்தில் ஆரோக்கியமான உணவுமுறையைக் கையாள வேண்டியது அவசியமாகும். அதன் படி, கர்ப்ப காலத்தில் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது, நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைக்கிறது. இந்த சமயத்தில் கர்ப்பிணி பெண்கள் தங்கள் உணவில் முழு தானியங்கள், பழங்கள் மற்றும் பச்சை இலை காய்கறிகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். இதற்கு பெண்கள் தங்களின் உணவியல் நிபுணரின் உதவியைப் பெறலாம்.
எடைக்கட்டுப்பாடு
அதிக உடல் எடை காரணமாக நீரிழிவு நோய் ஏற்படலாம். எனவே கர்ப்ப கால நீரிழிவு நோயைத் தவிர்க்க கர்ப்ப காலத்தில் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் அவசியமாகும். ஏனெனில் உடல் எடை அதிகரிப்பு, உடலில் பல்வேறு நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது. இது குழந்தையின் ஆரோக்கியத்தையும் பாதிக்கலாம். எனவே பல்வேறு நோய் அபாயங்களைத் தடுக்க முதலில் எடையைக் கட்டுக்குள் வைத்திருப்பது அவசியமாகும்.
இந்த பதிவும் உதவலாம்: Vazhakkai During Pregnancy: கர்ப்பிணி பெண்கள் வாழைக்காய் சாப்பிடலாமா? இத பார்த்து தெரிஞ்சிக்கோங்க
உடற்பயிற்சி செய்தல்
சில பெண்கள் கர்ப்ப காலத்தில் உடல் செயல்பாடுகளில் அதிகம் ஈடுபாடு காட்டுவதில்லை. அதே சமயம், அவர்கள் நெய் மற்றும் இன்னும் சில கொழுப்பு அதிகம் நிறைந்த உணவுகளை உட்கொள்கின்றனர். இதனால், உடலில் கொழுப்பு அதிகரிக்கத் தொடங்குகிறது. இந்த அதிக கொழுப்பு நீரிழிவு நோய் அபாயத்தை அதிகரிக்கிறது. இதனைத் தவிர்க்க உடற்பயிற்சி செய்வது அவசியமாகும். மேலும் இது உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களை சீராக வைக்க உதவுகிறது.
குளிர்பானங்கள் மற்றும் சர்க்கரை பயன்பாட்டைக் குறைப்பது
கர்ப்ப காலத்தில் பெண்கள் பல்வேறு இனிப்புப் பொருள்களைச் சாப்பிடவே ஆசைப்படுவர். இதனால், ஐஸ்கிரீம், சர்க்கரை கலந்த பொருள்கள், குளிர்பானங்கள் போன்றவற்றை உட்கொள்வதற்கான வாய்ப்பு அதிகரிக்கலாம். ஆனால், இதை அதிகளவு உட்கொள்வது நீரிழிவு நோய் அபாயத்தை அதிகரிக்கும்.
புகைபிடித்தல், மது அருந்துதலைக் கட்டுப்படுத்துவது
கர்ப்ப காலத்தில் அதிகப்படியான புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல் தாய் மற்றும் சேய் இருவரின் உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கலாம். கர்ப்பத்தின் போது தொடர்ந்து மது அருந்துவது ஹார்மோன் மாற்றங்களை துரிதப்படுத்துவதுடன், நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது. இதனைத் தவிர்க்க புகைபிடித்தல், மது அருந்துதல் போன்றவற்றிலிருந்து விலகி இருப்பது நல்லது.
இந்த வகை வழிமுறைகளின் மூலம் கர்ப்ப காலத்தில் பெண்கள் நீரிழிவு நோய் அபாயம் ஏற்படாமல் தவிர்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Pregnant After Period: மாதவிடாய் முடிந்த உடனேயே உடலுறவு கொள்வது கருத்தரிக்கும் வாய்ப்பை அதிகரிக்குமா?
Image Source: Freepik