Gestational Diabetes Foods To Eat: பிறந்த குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கும் பொதுவான நோய்களில் ஒன்றாக நீரிழிவு நோய் உள்ளது. இதில் சில நேரங்களில் கர்ப்பிணி பெண்களும் கர்ப்ப கால நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகின்றனர். எனவே ஆரோக்கியமான கர்ப்பத்திற்கு, சரியான உணவுமுறை தேவை. கர்ப்பகால சர்க்கரை நோய் உள்ளவர்கள் உணவுமுறையில் அதிக கவனம் செலுத்துவது அவசியமாகும். ஏனெனில், சிறு கவனச்சிதறல் கூட வயிற்றில் உள்ள சிசுவை பாதிப்பதாக அமையலாம். எனவே கர்ப்பகால சர்க்கரை நோய் உள்ளவர்கள் சில உணவுகளை எடுத்துக் கொள்வது அவர்களின் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம்.
கர்ப்பகால நீரிழிவு நோய்
கர்ப்ப காலத்தில், அதாவது 24 முதல் 28 ஆவது வாரத்தில் நீரிழிவு நோய் ஏற்படலாம் என்பதால், பெண்கள் தங்களைச் சரியாகக் கவனித்துக் கொள்ள வேண்டும். இந்த நீரிழிவு நோய் ஏற்படுவது கர்ப்ப காலத்தில் இன்சுலின் எதிர்ப்பின் விளைவால் உருவாகும் உயர் இரத்த சர்க்கரை அளவைக் குறிக்கிறது. இதற்கு அதிக எடை, ஹார்மோன் சமநிலையின்மை, மரபணு முன்கணிப்பு போன்ற அனைத்து காரணிகளும் காரணமாக இருக்கலாம். கர்ப்ப கால நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சுகப்பிரசவத்தில் பிரச்சனை, குழந்தைக்கு மஞ்சள் காமாலை அல்லது குறைந்த இரத்த சர்க்கரை அளவு போன்ற சிக்கல்கள் ஏற்படும் அபாயம் அதிகம் இருக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Gestational Diabetes Symptoms: கர்ப்ப கால நீரிழிவு நோய்க்கான காரணங்களும், அறிகுறிகளும் இங்கே.
கர்ப்பகால நீரிழிவு நோய்க்கான உணவுகள்
பொதுவாக, பிரசவத்திற்குப் பிறகு கர்ப்பகால நீரிழிவு சரியாகி விடும். எனினும், தாய் மற்றும் குழந்தையின் ஆரோக்கியத்திற்காக அதிக கவனம் செலுத்த வேண்டும். இதில் கர்ப்பகால நீரிழிவு உள்ள பெண்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள் குறித்து காணலாம்.
ஒல்லியான புரதங்கள்
பருப்பு வகைகள், கோழி, மீன் போன்ற உணவுகள் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்குவதுடன், ஆரோக்கியமற்ற கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. மேலும் புரதங்கள் இரத்த சர்க்கரை அளவை உறுதிப்படுத்த உதவுகிறது. இந்த புரத உணவுகள் குழந்தையின் வளர்ச்சிக்கு முக்கியமானவையாகும்.
நார்ச்சத்து மிகுந்த உணவுகள்
பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள் மற்றும் முழு தானியங்கள் போன்றவை நார்ச்சத்து மிகுந்த ஆதாரங்களாகும். இவை உடல் எடையைக் கட்டுப்படுத்த உதவுவதுடன், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. நாள் முழுவதும் நிலையான ஆற்றல் அளவை பராமரிக்க இந்த நார்ச்சத்து மிகுந்த உணவுகள் உதவுகின்றன.
இந்த பதிவும் உதவலாம்: Endometriosis Pain Relief: கடுமையான இடுப்பு வலியால் அவதியா? இதெல்லாம் டிரை பண்ணுங்க.
குறைந்த கொழுப்புள்ள பால் பொருள்கள்
குறைந்த கொழுப்பு கொண்ட தயிர், பாலாடைக்கட்டி அல்லது கொழுப்பு நீக்கப்பட்ட பால் போன்றவற்றில் புரதம், கால்சியம் மற்றும் வைட்டமின் டி போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை தாயின் எலும்பு ஆரோக்கியத்திற்கு உதவுவதுடன், குழந்தையின் வளர்ச்சிக்கு உதவுகின்றன.
ஆரோக்கியமான கொழுப்புகள்
ஆலிவ் எண்ணெய், வெண்ணெய், நட்ஸ், விதைகள் போன்றவை ஆரோக்கியமான கொழுப்புகளைக் கொண்ட சிறந்த ஆதாரமாகும். இவை உடலில் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைப்பதுடன், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது. இந்த வகை கொழுப்புகளை எடுத்துக் கொள்வது முழுமை உணர்வைத் தருகின்றன. மேலும் இது இதய நோய் அபாயத்தைக் குறைக்கின்றன.
இந்த பதிவும் உதவலாம்: Skin Condition During Periods: மாதவிடாய் சமயத்தில் சரும பிரச்சனையா? அதுக்கு இத செய்யுங்க.
மாவுச்சத்து இல்லாத காய்கறிகள்
கீரை, காலிஃபிளவர், ப்ரோக்கோலி போன்ற உணவுகளில் கார்போஹைட்ரேட்டுகள் குறைவாகவும், அத்தியாவசிய தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் அதிகம் நிறைந்ததாகவும் காணப்படுகின்றன. இந்த காய்கறிகள் சீரான உணவைப் பராமரிப்பதுடன், இரத்த சர்க்கரை அளவை திறம்பட நிர்வகிக்கிறது.
கர்ப்பகால நீரிழிவு உள்ளவர்கள் தவிர்க்க வேண்டியவை
கர்ப்பகால நீரிழிவு நோய் இருப்பவர்கள், சில உணவுகளைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
- சோடாக்கள், இனிப்பு பானங்கள் போன்ற சர்க்கரை நிறைந்த பானங்களைக் கட்டாயம் உணவில் சேர்த்துக் கொள்ளக் கூடாது. இவற்றில் சர்க்கரை உள்ளடக்கம் அதிகம் இருப்பதால், இவை இரத்த சர்க்கரை அளவை விரைவாக அதிகரிக்கலாம்.
- சுத்திகரிக்கப்பட உணவுகளான வெள்ளை ரொட்டி, பேஸ்ட்ரிகள், பதப்படுத்தப்பட்ட தின்பண்டங்கள் போன்றவை குறைவாக எடுத்துக் கொள்ள வேண்டும் அல்லது முற்றிலும் தவிர்க்க வேண்டும். இவற்றில் எந்த ஊட்டச்சத்துக்களும் இல்லை மற்றும் இரத்த சர்க்கரை அளவை விரைவாக அதிகரிக்கும். எனவே இவற்றை எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
- இது தவிர, நிறைவுற்ற கொழுப்பு வகைகள், அதிகப்படியான சோடியம் உள்ள உணவுகளான பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள், துரித உணவுகள் போன்ற உணவுகளிலிருந்து விலகி இருக்க வேண்டும். இவை உயர் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Period Cramps Remedies: மாதவிடாயின் போது ஏற்படும் வலிகளை குறைக்க உதவும் எளிமையான வழிகள்!
Image Source: Freepik