Gestational Diabetes Causes And Symptoms: கர்ப்பிணி பெண்கள், கர்ப்ப காலத்தில் பல்வேறு சவால்களை எதிர்கொள்கின்றனர். அந்த வகையில் கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதால், கர்ப்பகால நீரிழிவு பிரச்சனை ஏற்படலாம். இது பிரசவத்தின் போது ஆபத்தை அதிகரிக்கலாம். மேலும், இது குழந்தையை பாதிக்கும் அபாயமும் உண்டாகலாம்.
எனவே கர்ப்ப காலத்தில் சர்க்கரை நோய் குறித்த புரிதல் மக்களிடையே அதிகரிக்கவும், நோய்களைக் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தலாம். இதில், கர்ப்ப காலத்தில் ஏற்படும் கர்ப்ப கால நீரிழிவு நோயின் அறிகுறிகள், காரணங்கள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து ஜல்கரிபாய் மருத்துவமனையின் மகளிர் மருத்துவ நிபுணர் டாக்டர் தீபா சர்மா அவர்கள் தெரிவித்துள்ளார்.
இந்த பதிவும் உதவலாம்: Period Migraines Treatment: மாதவிடாய் ஒற்றைத் தலைவலியை எவ்வாறு சமாளிக்கலாம்
கர்ப்பகால நீரிழிவு
கர்ப்பகாலத்தில் சர்க்கரை அளவு அதிகமாகும் போது கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனையே கர்ப்பகால நீரிழிவு எனப்படுகிறது. இந்த நோயில் பெண்ணின் உடலில் போதுமான அளவு இன்சுலின் ஹார்மோன் உற்பத்தி செய்யப்படுவதில்லை. குறிப்பாக, கர்ப்பகால நீரிழிவு நோய் 27 வயதுக்கு மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் அபாயம் உள்ளது.
கர்ப்பகால நீரிழிவு நோய் அறிகுறிகள்
கர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்கள் சந்திக்கும் பிரச்சனையான கர்ப்பகால நீரிழிவு நோய் அறிகுறிகள் குறித்து காணலாம்.
- மங்கலான பார்வை
- தோலில் தொற்று ஏற்படுதல்
- அடிக்கடி சிறுநீர் கழிப்பது
- களைப்புணர்வு ஏற்படுதல்
- நடுக்கம் உணர்வு உண்டாகுதல்
- மீண்டும் மீண்டும் தாமதமாக உணர்தல்
இந்த பதிவும் உதவலாம்: Periods Back Pain: மாதவிடாய் காலத்தில் ஏற்படும் முதுகுவலிக்கான காரணங்களும், அதன் அறிகுறிகளும்
கர்ப்பகால நீரிழிவு நோய் ஏன் ஏற்படுகிறது
பெரும்பாலான சந்தர்ப்பங்களில் கர்ப்பகால நீரிழிவு பிரச்சனை தாமதமாக ஏற்படலாம். சில நேரங்களில், ஆரம்ப கட்டத்தில் கூட ஏற்படலாம்.
- கர்ப்பிணி பெண்களின் உடலில் இன்சுலின் என்ற ஹார்மோன் போதுமான அளவு உற்பத்தி செய்யப்படாதபோது, அவர்கள் கர்ப்பகால நீரிழிவு நோயால் பாதிக்கப்படலாம்.
- இது மரபியல் காரணமாகவும் ஏற்படலாம். அதாவது குடும்பத்தில் ஒருவருக்கு ஏற்கனவே நீரிழிவு நோய் இருப்பின், கர்ப்பிணி பெண்ணுக்கு கர்ப்பகாலத்தில் நீரிழிவு நோய் ஏற்படலாம்.
- கர்ப்ப காலத்தில் ஆரோக்கியமற்ற உணவுகளைக் கையாளுதல் அல்லது உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது போன்றவற்றால் கர்ப்பகால நீரிழிவு நோய் ஏற்படலாம். மேலும், கர்ப்ப காலத்தில் அதிக இனிப்புகளை எடுத்துக் கொள்வது கர்ப்பகால நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கும்.

கர்ப்பகால நீரிழிவு நோயை எவ்வாறு தவிர்க்கலாம்
சில வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் கர்ப்பகால நீரிழிவு நோயைத் தவிர்க்கலாம்.
- கர்ப்ப காலத்தில் இனிப்புகள் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அதிக இனிப்புகளைச் சாப்பிடுவதால், ஆரோக்கியமற்ற கொழுப்புகள் உடலில் சேர்வதுடன், நோய்களை உண்டாக்கலாம்.
- கர்ப்ப காலத்தில் நீரிழிவு நோயைத் தவிர்க்க தினமும் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
- கர்ப்பகாலத்தில் சைக்கிள் ஓட்டுதல், நடைபயிற்சி, நீட்சி போன்றவற்றை மேற்கொள்ளலாம்.
- கர்ப்பகாலத்தில் அவ்வப்போது சர்க்கரை நோயைக் கண்காணிக்க வேண்டும். குறிப்பாக, கர்ப்பத்தின் 24 முதல் 28 ஆவது வாரத்தில் சோதனையை மேற்கொள்ளலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Postpone Periods Naturally: இயற்கையான முறையில் மாதவிடாய் தள்ளி போக என்ன செய்ய வேண்டும்?
கர்ப்பகால நீரிழிவு நோயைத் தவிர்க்க சாப்பிட வேண்டியவை
கர்ப்ப காலத்தில், கர்ப்பகால நீரிழிவு நோயைத் தவிர்க்க பருப்புகளை உட்கொள்ளலாம். மேலும், முழு தானியங்கள், பருப்பு வகைகள், வைட்டமின் சி நிறைந்த உணவுகள், பால் போன்ற உணவை எடுத்துக் கொள்ள வேண்டும்.
கர்ப்பகால நீரிழிவைத் தவிர்க்க, அதிக நிறைவுற்ற கொழுப்பு, வெள்ளை அரிசி, பாலாடைக்கட்டி, வறுத்த உணவுகள், மிட்டாய், சோடா போன்றவற்றைச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
கர்ப்பகால நீரிழிவு நோயின் விளைவுகள்
- கர்ப்பிணி பெண்ணுக்கு கர்ப்பகால நீரிழிவு நோய் இருப்பின், உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படலாம்.
- புதிதாகப் பிறந்த குழந்தைக்கு சுவாசிப்பதில் சிக்கல்கள் உண்டாகலாம்.
- கர்ப்பகால நீரிழிவு ஆனது சிசேரியன் பிரசவத்தின் அபாயத்தை அதிகரிக்கிறது.
- பிறந்த குழந்தைக்கு குறைந்த இரத்த அழுத்தம் மற்றும் கால்சியம் குறைபாடு போன்ற உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படலாம்.

கர்ப்பகால நீரிழிவு நோய் சிகிச்சை முறை
கர்ப்பகால நீரிழிவு நோயில், குளுக்கோஸ் சேலஞ்ச் சோதனை, வாய்வழி குளுக்கோஸ் சோதனை போன்றவை மேற்கொள்ளப்படுகிறது, சர்க்கரையின் அளவு 200 அல்லது அதற்கு மேல் இருப்பின், டைப் 2 நீரிழிவு நோயாக இருக்கலாம். கர்ப்பகால நீரிழிவு நோய் ஏற்பட்டால் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த மருத்துவர் அறிவுறுத்துகின்றனர்.
மேலும், கர்ப்பகால நீரிழிவு நோயின் போது உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம். அதன் படி குறைந்தது 30 நிமிடங்கள் தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். கர்ப்பகாலத்தில், இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்த வேண்டும். கர்ப்பகால நீரிழிவு நோய் ஏற்பட்டால், நீரிழிவு நோய்க்கான மருந்துகளை எடுத்துக் கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
இவ்வாறு கர்ப்பகாலத்தில் தேவையான பரிசோதனைகளை மேற்கொள்வதன் மூலம், கர்ப்ப கால நீரிழிவு நோய் பிரச்சனையைத் தவிர்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Food For Early Periods: மாதவிடாய் சீக்கிரம் வர சாப்பிட வேண்டிய உணவுகள்!
Image Source: Freepik