Doctor Verified

Period Migraines Treatment: மாதவிடாய் ஒற்றைத் தலைவலியை எவ்வாறு சமாளிக்கலாம்

  • SHARE
  • FOLLOW
Period Migraines Treatment: மாதவிடாய் ஒற்றைத் தலைவலியை எவ்வாறு சமாளிக்கலாம்


Best Way To Get Rid Of Menstrual Migraine: மாதந்தோறும் பெண்கள் சந்திக்கும் மாதவிடாய் பிரச்சனைகளில் ஒற்றைத் தலைவலி பிரச்சனையும் ஒன்று. ஒற்றைத் தலைவலி ஒருவரை பலவீனமடையச் செய்து அவர்களின் அன்றாட வாழ்க்கையை பாதிப்பதாக அமைகிறது. மாதவிடாயின் போது ஏற்படும் ஒற்றைத் தலைவலி பிரச்சனை மிகவும் அசௌகரியத்தை ஏற்படுத்தும். மாதவிடாய் காலங்களில் ஏற்படும் ஒற்றைத் தலைவலி பெண்களுக்கு பல்வேறு அறிகுறிகளுடன் காணப்படுகிறது. பெங்களூரு, ஹெப்பல், தாய்மை மருத்துவமனை, மகப்பேறு மற்றும் மகப்பேறு மருத்துவ நிபுணர் மருத்துவர் மது ஸ்ரீ விஜய்குமார் அவர்கள், மாதவிடாய் காலத்தில் ஏற்படு ஒற்றைத் தலைவலி பிரச்சனைக்கான காரணங்கள் மற்றும் அவற்றை சமாளிக்கும் முறைகளையும் பற்றி கூறியுள்ளார்.

மாதவிடாய் ஒற்றைத் தலைவலி

டாக்டர் விஜய்குமார் அவர்களின் கூற்றுப்படி, ஒற்றைத் தலைவலி இரண்டு வகைகளாக பிரிக்கப்படுகிறது. அவை ஆரா அல்லது இல்லாமல் என இருவகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

நீங்கள் ஒற்றைத் தலைவலியை ஆரா அல்லது ஒளியின்றி அனுபவித்தால் மாதவிடாய் தலைவலி ஏற்படுவதற்கு முப்பது நிமிடங்களுக்கு முன் தோன்றும் சில பொதுவான அறிகுறிகள் இங்கே.

  • வாசனை மற்றும் சுவை உணர்வில் மாற்றங்கள்
  • கை உணர்வுகளில் ஏற்படும் அசாதாரண மாற்றங்கள்
  • அறிவாற்றல் செயலாக்கம் மற்றும் சிந்தனையில் சிரமங்கள்
  • கைகள் அல்லது முகத்தில் உணர்வின்மை அல்லது கூச்ச உணர்வு

இந்த பதிவும் உதவலாம்: Postpone Periods Naturally: இயற்கையான முறையில் மாதவிடாய் தள்ளி போக என்ன செய்ய வேண்டும்?

ஒற்றைத் தலைவலியை ஒளியுடன் அனுபவித்தால், இந்த அறிகுறிகள் தோன்றும்.

  • ஒளி உணர்திறன்
  • காதுகள் அல்லது காதுகளுக்குப் பின்னால் வலி ஏற்படுதல்
  • வாந்தி எடுத்தல்
  • தற்காலிக பார்வை குறைபாடு

மாதவிடாய் ஒற்றைத் தலைவலி எப்போது தொடங்கும்

சேஜ் இதழின் படி, அனைத்து பெண்களில் சுமார் 7.6% பேர், மாதவிடாய் சுழற்சியின் குறைந்தது பாதியில் ஒற்றைத் தலைவலி பிரச்சனையை அனுபவிக்கின்றனர். மேலும், ஏற்கனவே ஒற்றைத் தலைவலியை அனுபவிக்கும் பெண்களுக்கு இது 22% பேருக்கு ஏற்படுகிறது.

மாதவிடாய் காலத்தில் ஏற்படும் ஒற்றைத் தலைவலி, மாதவிடாய் தொடங்குவதற்கு இரு நாள்களுக்கு முன்பு தோன்றலாம் அல்லது மாதவிடாய் காலத்தில் குறைந்தபட்சம் மூன்று நாள்கள் வரை நீடிக்கலாம்.

மாதவிடாய் நின்ற நிலைகளிலும், ஈஸ்ட்ரோஜன், புரோஜஸ்ட்ரான் மற்றும் இன்னும் பிற ஹார்மோன் அளவுகளில் குறிப்பிடத்தக்க குறைவு காரணமாக மாதவிடாய் ஒற்றைத் தலைவலி ஏற்படலாம். மேலும், இதற்கு மன அழுத்தம் ஏற்படுவதும் ஒரு முக்கிய காரணமாகும். மாதவிடாய் காலத்தில் பெண்கள் ஒற்றைத் தலைவலியால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

இந்த பதிவும் உதவலாம்: Menstrual Cup: மென்சஸ் கப்பின் நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றி தெரியுமா? தெரிஞ்சிகிட்டு பயன்படுத்தலாமே!

மாதவிடாய் கால ஒற்றைத் தலைவலியை சமாளிப்பது எப்படி?

சில வகையான முயற்சிகளை மேற்கொள்வதன் மூலம் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் ஒற்றைத் தலைவலி பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

மன அழுத்தத்தை கையாளுதல்

மாதவிடாய் ஒற்றைத் தலைவலி ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்க மன அழுத்தத்தை மேம்படுத்துதல் அவசியம். அதன் படி, ஆழ்ந்த சுவாசம், யோகா, தியானம், வழக்கமான உடற்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்ளுதல் மூலம் மன அழுத்தத்தை கையாள முடியும்.

ஹார்மோன் சிகிச்சை

சிலருக்கு ஹார்மோன் சிகிச்சையானது ஒற்றைத் தலைவலியைத் தூண்டும் ஹார்மோன் ஏற்ற இறக்கங்களைக் கட்டுப்படுத்தலாம். இதற்கு பொருத்தமான சிகிச்சையைப் பெற மருத்துவரை அணுகுது நல்லது.

தூக்க அட்டவணையை பராமரித்தல்

ஒற்றைத் தலைவலிக்கு முக்கிய காரணம் ஒழுங்கற்ற தூக்க முறைகளே ஆகும். எனவே, தினமும் ஒரே நேரத்தில் படுக்கைக்குச் சென்று விழிப்பது போன்ற வழக்கமான உறக்கத்தைக் கையாள்வதன் மூலம் ஒற்றைத் தலைவலி ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Hormonal Balance: என்றென்றும் இளமையாக இருக்க பெண்கள் சாப்பிட வேண்டிய பழங்கள்!

உணவுமுறை மேலாண்மை

நாம் உண்ணும் சில உணவுகளின் தூண்டுதலாகவும் ஒற்றைத் தலைவலி ஏற்படலாம். எனவே பதப்படுத்தப்பட்ட உணவுகள், ஆல்கஹால், காஃபின் போன்றவற்றைத் தவிர்த்து சரியான உணவு முறையைக் கையாள வேண்டும்.

நீரேற்றத்துடன் இருத்தல்

ஒற்றைத் தலைவலிக்கு உடலில் போதுமான அளவு நீர் இல்லாமல் இருப்பதும் காரணமாகும். எனவே, உடலுக்குத் தேவையான அளவு தண்ணீர் குடிப்பதை உறுதி செய்து ஒற்றைத் தலைவலி பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

முடிவுரை

மாதவிடாய் காலத்தில் ஏற்படும் ஒற்றைத் தலைவலி பிரச்சனை கடுமையாக இருக்கும் பட்சத்தில், உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. மருத்துவர்கள் பரிந்துரைக்கும் சில குறிப்பிட்ட மருந்துகள் ஒற்றைத் தலைவலி பிரச்சனை ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Food For Early Periods: மாதவிடாய் சீக்கிரம் வர சாப்பிட வேண்டிய உணவுகள்!

Image Source: Freepik

Read Next

Period Anxiety Prevention: மாதவிடாயின் போது ஏற்படும் கவலையை சமாளிக்க இதை செய்யுங்கள்!

Disclaimer