Menstrual Cup: மென்சஸ் கப்பின் நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றி தெரியுமா? தெரிஞ்சிகிட்டு பயன்படுத்தலாமே!

  • SHARE
  • FOLLOW
Menstrual Cup: மென்சஸ் கப்பின் நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றி தெரியுமா? தெரிஞ்சிகிட்டு பயன்படுத்தலாமே!


மாதவிடாய் கோப்பை பயன்படுத்துதல்

சிலிக்கான் அல்லது லேடெக்ஸ் ரப்பரால் செய்யப்பட்ட நெகிழ்வுத் தன்மை கொண்ட ஒரு கோப்பையே மாதவிடாய் கோப்பை ஆகும். பெண்களுக்கு சௌகரியத்தை அளிக்கும் வகையில், மாதவிடாய் காலத்தில் மாதவிடாய் உதிரத்தை சேகரிக்க உதவுகிறது. இது சானிட்டரி பேட் போல அல்லாமல், இரத்தத்தை கோப்பையில் சேகரிக்கிறது. மேலும், இது இரத்தத்தை உறிஞ்சாது. இந்த கோப்பையை பயன்படுத்துவதில் உள்ள நன்மை, தீமைகளைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: Food For Early Periods: மாதவிடாய் சீக்கிரம் வர சாப்பிட வேண்டிய உணவுகள்!

மாதவிடாய் கோப்பையின் நன்மைகள்

மாதவிடாய் கோப்பையின் நன்மைகள் சிலவற்றை இதில் காண்போம்.

நீடிக்கும் பலன்

மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தும் மென்சஸ் கப் கவர்ச்சிகரமான ஒன்றாக அமைகிறது. நாப்கின் போன்றவை மாதவிடாய் தயாரிப்புகள் ஒரு முறை பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படுகின்றன. இது சுற்றுச்சூழலுக்கு உகந்தது அல்ல. ஆனால், மாதவிடாய் கோப்பையானது மீண்டும் பயன்படுத்தக்கூடிய தயாரிப்பாக அமைகிறது. அதன் படி, குறைந்தபட்சம் 5 முதல் 6 ஆண்டுகள் வரை ஒரு மாதவிடாய் கோப்பையை பயன்படுத்தலாம்.

பயன்படுத்த வசதியானது

மாதவிடாய் கோப்பை பயன்படுத்துவதற்கு எளிதானதாக அமைகிறது. இதன் வழிமுறையைச் சரியாகத் தெரிந்து கொண்டால், எளிதான முறையில் அணியவும், நீக்கவும் முடியும். மேலும், இதனை 8 – 12 மணி நேரம் வரை அணியலாம். இது இரத்தத்தை உறிஞ்சாத தயாரிப்பு என்பதால் உடலில் pH-ஐ சமநிலையில் வைத்துக் கொள்ள உதவுகிறது.

சுத்தமான ஒன்று

இந்த மாதவிடாய் கோப்பையை சரியாகச் செருகினால், கோப்பை கசியாது அல்லது சிந்தாது. எனவே, வெளியில் செல்லும் போது பயன்படுத்துவதற்கு எளிதான ஒன்றாக இந்த மாதவிடாய் கோப்பை உள்ளது.

வாசனைகளைத் தராது

மாதவிடாய் காலங்களில் ஏற்படும் இரத்தப்போக்கு காரணமாகவும், நாப்கின்கள் பயன்படுத்தும் போதும் சங்கடமான வாசனை உருவாகலாம். இதுவே, கோப்பைகளைப் பயன்படுத்தும் போதும் மாதவிடாய் இரத்தம் காற்றில் வெளிப்படாது மற்றும் எந்த வித சங்கடமான வாசனைகளையும் தராது.

இந்த பதிவும் உதவலாம்: Postpone Periods Naturally: இயற்கையான முறையில் மாதவிடாய் தள்ளி போக என்ன செய்ய வேண்டும்?

மாதவிடாய் கோப்பையின் தீமைகள்

மாதவிடாய் கோப்பையின் தீமைகள் சிலவற்றை இப்போது காண்போம்.

கோப்பை சரியாகப் பொருந்தாத போது

மாதவிடாய் கோப்பையை மாதவிடாய் இரத்தப்போக்கு ஏற்படும் இடத்தில் சரியாகப் பொருத்த வேண்டும். இல்லையெனில், நடக்கவோ அல்லது உட்காரவோ மிகவும் சிரமமாக இருக்கும்.

அகற்றுவதில் கடினம்

பொருத்திய மாதவிடாய் கோப்பைகளை எடுக்க பொறுமை தேவை. இவற்றை அகற்றும் போது வலுக்கட்டாயமாகப் பிடித்து இழுக்கக் கூடாது. கவனமான முறையில் மாதவிடாய் கோப்பை வழிமுறைகளின் கற்றலுடன் இதைச் செய்ய வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: Periods Pain Relief Tips: இயற்கையான முறையில் மாதவிடாய் வலியை எவ்வாறு குறைப்பது?

Image Source: Freepik

Read Next

Breastfeeding Hygiene: தாய்ப்பால் கொடுக்கும் போது மார்பக சுகாதாரத்தை எவ்வாறு பராமரிப்பது?

Disclaimer

குறிச்சொற்கள்