$
மாதவிடாய் சுழற்சியை சந்திக்கும் ஒவ்வொரு பெண்களும் வயிறு வலி, கால் வலி என பல்வேறு உடல் உபாதைகளால் அவதிப்படுகின்றனர். இதில் மாதவிடாய் சுழற்சி சமயத்தில் ஏற்படும் பிடிப்புகள் மற்றும் வயிறு வலி பொதுவானதாக இருப்பினும், சிலர் கடுமையான வலியினால் பாதிக்கப்படுகின்றனர். மாதவிடாய் சுழற்சி ஏற்படும் போது, பெண்களின் கருப்பையில் புரோஸ்டாக்லாண்டின் எனும் ஹார்மோன் வெளியிடப்படுகிறது. இந்நிலையில் கருப்பையில் போதிய இரத்தம் இல்லாத போது, தசைகள் சுருங்கி அடிவயிற்றில் வலி ஏற்படுகிறது. சில இயற்கையான முறையில் எந்தவித பக்கவிளைவும் இல்லாமல் வலிகளைக் குணப்படுத்தலாம். அவற்றைப் பற்றி இதில் காணலாம்.
மாதவிடாய் வலியைக் குணப்படுத்துவதற்கான முறைகள்
மாதவிடாய் நாள்களில் ஏற்படக்கூடிய வலியைக் குணமாக்க கையாள வேண்டிய சில இயற்கை முறைகளைக் காணலாம்.
ஹீட்டிங் பேட்
வயிற்று வலியைக் குறைக்க சூடான அமுக்கங்கள் அல்லது ஹீட்டிங் பேட்களை உபயோகப்படுத்தலாம். இந்த நேரத்தில் வலி நிவாரணிக்காக வெப்பமூட்டும் அமுக்கங்களை பயன்படுத்தும் போது வயிற்றுப்பிடி குறைக்கப்படுகிறது. மேலும், வெந்நீரில் குளிக்கும் போதும் உடல் சற்றும் வெப்பமூட்டப்பட்டு நல்ல தூக்கத்தைத் தரும்.

இந்த பதிவும் உதவலாம்: IVF Treatment: IVF என்றால் என்ன? சிகிச்சை எப்படி செய்யப்படும்? முழு விவரம்
மாதவிடாய் வலியை நீக்க மசாஜ்
மாதவிடாய் நேரங்களில் அடிவயிறு மற்றும் இடுப்புப் பகுதியில் வலி உண்டாவதற்கு இடுப்பு பகுதியில் இரத்த ஒட்டம் சீராக இல்லாமல் இருப்பதே காரணம் ஆகும். இந்த வலியைக் குறைப்பதற்கு உடலுக்கு மென்மையான உணர்வைத் தரக்கூடிய வகையில் மசாஜ் செய்யலாம். அதன் படி, அடிவயிற்றுப் பகுதியில் இருந்து மெதுவாக மேல் நோக்கி மசாஜ் செய்ய வேண்டும். இது இரத்த ஓட்டத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது.
மெக்னீசியம் சார்ந்த உணவுகள்
மாதவிடாய் காலத்தில் ஏற்படக்கூடிய கடுமையான வயிற்று வலியில் இருந்து விடுபட உணவில் மெக்னீசியம் நிறைந்த உணவுகளைச் சேர்க்க வேண்டும். அதன் படி, பாதாம், கீரை, தயிர், வேர்க்கடலை உள்ளிட்டவற்றைச் சேர்த்துக் கொள்வதன் மூலம் வயிற்று வலியைக் குறைக்க முடியும்.

இந்த பதிவும் உதவலாம்: 5 Stages Of IVF: IVF இன் 5 நிலைகள் என்ன?
இனிப்பு சார்ந்த உணவுகள்
மாதவிடாய் காலத்தில் ஏற்படும் இரத்தப்போக்கு காரணமாக உடல் பலவீனத்துடன் காணப்படும். இந்த நேரத்தில் வெல்லம் எடுத்துக் கொள்வதன் மூலம் கருப்பைப் பிடிப்பைக் குறைக்க முடியும். இதற்கு வெல்லத்தில் உள்ள சோடியம், பொட்டாசியம் சத்துக்களே காரணம் ஆகும். மேலும் வெல்லம் அழற்சி எதிர்ப்பு பண்புகளை,கொண்டுள்ளது.
லேசான உடற்பயிற்சி
பொதுவாக மாதவிடாய் காலத்தில் உடற்பயிற்சி செய்யக்கூடாது எனக்கூறுவர். உடல் சுறுசுறுப்பாக இருக்கும் சமயத்தில் குறைந்த வலியை உணர்வர். எனவே, இந்நேரத்தில் மிதமான உடற்பயிற்சியை மேற்கொள்வதன் மூலம் வயிற்று வலியைக் குறைக்க முடியும். இதனால், உடல் முழுவதும் இரத்த ஓட்டம் அதிகரிப்பதுடன், வலியைக் குறைக்கிறது.
மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலியைக் குறைப்பதற்கு இந்த இயற்கை முறைகளைக் கையாளலாம்.

இந்த பதிவும் உதவலாம்: மாதவிடாய் காலங்களில் உங்கள் சருமத்தை பராமரிப்பதற்கான டிப்ஸ்
Image Source: Freepik